India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையை வானிலை ஆய்வாளர்கள் வரைபடமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதி கனமழை பெய்திருக்கிறது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 200 முதல் 300 செ.மீ வரை மழை பதிவாகியிருப்பது வரைபடத்தில் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வரலாற்றில் அதிக மழையை கொடுத்த ஒரு புயலாக ஃபெஞ்சல் மாறியிருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர்தான் முதலில் இரட்டை சதம் அடித்தார். இதையடுத்து, 2ஆவது இரட்டை சதம் அடித்ததும் நமது இந்திய வீரர்தான். அவர் வேறு யாருமில்லை. முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்தான் அவர். 2011இல் டிசம்பர் 8ஆம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 149 பந்துகளில் 219 ரன்கள் விளாசினார். இந்த சாதனை 2014ஆம் ஆண்டு வரை நீடித்தது. ரோஹித் சர்மாவே அந்த சாதனையை முறியடித்தார்.
பெட்ரோல், டீசல் விலை லேசாக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 43 காசுகள் அதிகரித்து ₹101.23க்கும், டீசல் விலை 42 காசுகள் உயர்த்தப்பட்டு ₹92.81க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.100.80ஆக விற்கப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 42 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.92.39ஆக விற்கப்படுகிறது.
காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து உதவித் தொகை இந்த மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து விடுபட மாநில அரசால் ஊட்டச்சத்து உதவித்தொகை மாதம் ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை இந்த மாதம் முதல் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
யுஏஇ-யில் நடைபெற்று வரும் ACC under19 ஆசியக் கோப்பை கிளைமாக்ஸை நெருங்கியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளது. 8 முறை ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி நடப்பு சாம்பியன் பங்களாதேஷை எதிர்கொள்ள உள்ளது. இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம். 9வது முறையாக இந்தியா கோப்பையை வெல்லுமா?
துணை பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாளை தமிழக சட்டசபை கூடவுள்ளது. அரசுக்கு இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகள் குறித்து சபையில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இரண்டு நாள்கள் மட்டுமே நடத்தப்படும் இக்கூட்டம், இந்த ஆண்டுக்கான கடைசி கூட்டமாக இருக்கும்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் சிறை பிடித்தது. ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கை கடற்படை, மீனவர்களை படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
காலை செய்யும் சில நடவடிக்கைகளை நம்மை நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருக்க உதவிடும் * காலை கடனை செய்யுங்கள், உடல் புத்துணர்ச்சி பெரும் * ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுங்கள், செரிமான பிரச்சனையை சரிப்படுத்தும் * சோம்பேறி தனமாக அமர்ந்திருக்காமல், எழுந்ததுமே சில வேலைகளை செய்யுங்கள், அது ஒரு உத்வேகத்தை கொடுக்கும் * காலையில் ஊட்டச்சத்து மிக்க உணவை தேர்ந்தெடுக்க அதனை பழக்க படுத்துங்கள்.
மத்திய அரசின் மாலேகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாக உள்ள 234 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. நிரந்தர அடிப்படையிலான அந்த வேலைகள், நான் எக்ஸ்யூடிவ்ஸ் பணிகள் ஆகும். இந்த வேலையில் சேர விரும்புவோர் <
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் 20 எம்எல்ஏக்களுக்கு ஆம் ஆத்மி வாய்ப்பு வழங்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015 முதல் டெல்லி தேர்தலில் அடுத்தடுத்து ஆம் ஆத்மி வெற்றி பெற்று வருகிறது. எனினும், இந்த முறை 20 எம்எல்ஏக்களுக்கு எதிராக அவர்கள் தொகுதியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இதை மனதில் அவர்களுக்கு பதிலாக புதியவர்களை ஆம் ஆத்மி களத்தில் இறக்கலாம் என சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.