India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤புதன்: புதன் கிழமையில் கடல் நீரை எடுத்து வந்து, அதில் மஞ்சள் கலந்து குளிக்க வேண்டும். ➤குரு: வியாழன் அன்று கருப்பு ஏலக்காய் கலந்த நீரில் குளிக்கலாம். ➤சுக்கிரன்: வெள்ளியன்று பச்சை ஏலக்காயை நீரில் கலந்து குளிக்க வேண்டும். ➤சனி: சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தேய்த்து, கருப்பு எள் கலந்த நீரில் குளிக்கலாம். ➤ராகு-கேது: அருகம்புல்லை நீரில் போட்டு கொதிக்க வைத்து, சனியன்று அந்த நீரில் குளிக்கலாம்.
வேத நாட்காட்டியின்படி, அமாவாசை திதியில் தீபாவளியன்று லட்சுமி பூஜையும், பிரதோஷ காலத்தின் போது மாலையிலும் இரவிலும் லட்சுமி பூஜை செய்வது வழக்கம். இந்தாண்டு அக். 31 மற்றும் நவ.1 ஆகிய 2 நாள்கள் அமாவாசை திதி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேத நாட்காட்டியின்படி, அமாவாசை தேதி அக். 31 மதியம் தொடங்கி, நவ.1 மாலை முடிவடைகிறது. அமாவாசை திதி, அக்.31 மதியம் 2:40 மணிக்கு துவங்கி, நவ.1 மாலை 4:42 வரை நடக்கிறது.
<<14486810>>தீபாவளி<<>> பண்டிகையை அக்.31 அமாவாசை திதி, பிரதோஷ கால மற்றும் நிஷித கால முகூர்த்தத்தில் கொண்டாடுவது மிகவும் மங்களகரமானது. அமாவாசை திதி நவம்பர் 1ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், நவம்பர் 1இல் தீபாவளியைக் கொண்டாடுவது அசுபமாகவும் மங்களகரமற்றதாகவும் கருதப்படுகிறது. இந்தத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பலரும் புத்தாடை வாங்குவது, சொந்த ஊர் செல்வது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தியதால், ரேஷன் கடைகளில் இம்மாதம் பொருள்கள் பலரும் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இம்மாத பொருள்கள் வாங்காதவர்கள், அடுத்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள அனுமதிக்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீங்கள் இம்மாத ரேஷன் பொருள்களை வாங்கிவிட்டீர்களா?
காசி, காஞ்சி, போன்ற 66 கோடி தலங்களைவிட மிக உயர்ந்த திருத்தலமென ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயிலை ஆன்றோர் போற்றுகின்றனர். எமனின் தோஷத்தைப் போக்கி வாஞ்சையோடு ஈசன், அவரை க்ஷேத்திர பாலகனாக நியமித்த தலம் என்பதால் இது ‘ஸ்ரீவாஞ்சியம்’ என அழைக்கப்படுவதாக ஸ்தல புராணம் கூறுகிறது. 4 யுகங்களிலும் நிலைத்திருக்கும் வாஞ்சிநாதர் – மங்கள நாயகியை வணங்கினால் நீண்ட ஆயுளும், நிறைவான ஆரோக்கியமும் அடைவர் என்பது ஐதீகம்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு 5 வகை காரணங்கள் கூறப்படுகின்றன.
1) நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள்.
2) சீதையை மீட்டு, அயோத்திக்கு ராமர் திரும்பிய நாள்.
3) பாண்டவர்கள் வனவாசம் முடிந்து, நாடு திரும்பிய நாள்.
4) சிவனை நினைத்து பார்வதி, கேதாரி விரதம் இருந்து முடித்த நாள்.
5) மகாவீரர் முக்தி அடைந்த நாள்.
தீபாவளியன்று காலையில் அனைவரும் எண்ணெய் நீராடுவது ஒரு சடங்காகும். இது உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல, உடல் மற்றும் ஆன்மாவுக்கு ஆன்மிக தூய்மை அளிக்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள். இந்த வழக்கம், சூரியன் உதிக்கும் முன், அதிகாலையில் எழுந்து, தூய்மை மற்றும் பக்தியுடன் பண்டிகையை வரவேற்பதைக் குறிக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். நீங்கள் தீபாவளியன்று எண்ணெய் நீராடுவீர்களா? கீழே பதிவிடுங்கள்.
தபால் துறை பேமண்ட் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. எக்ஸ்கியூட்டிவ் நிலையிலான 344 காலி பணியிடங்களுக்கு தபால் துறை பேமண்ட் வங்கி விண்ணப்பம் கோரியிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு, www.ippbonline.com இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த அவகாசம் நாளையுடன் (அக்.31) நிறைவடையவுள்ளது. இந்தத் தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அதிமுகவின் வாக்குகளை யாரும் ஈர்க்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொன்விழா கண்ட கட்சி என்றும், தமிழகத்தை 30 ஆண்டுகள் ஆண்ட கட்சிகள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அப்போதுதான் தமிழகம் வளர்ச்சி கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிலர் காலையில் நீண்ட நேரம் பல் துலக்குவதை பார்த்து இருப்போம். இது பற்களுக்கு நல்லதா, கெட்டதா என பல் மருத்துவர்கள் தெரிவிக்கும் ஆலோசனையை தெரிந்து கொள்வோம். பிரஸ்ஸை வைத்து அதிக நேரம் பல் துலக்கக் கூடாதென்றும், இது பற்களுக்கும், ஈறுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். குறிப்பாக எனாமலை பாதிக்கும், பற்கள் தேய வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். SHARE IT
Sorry, no posts matched your criteria.