News December 8, 2024

அரசு விழாவில் ₹12 லட்சம் அபேஸ்.. ஷாக்கான CM..!

image

திருவிழா கூட்டத்தில் திருட்டு என்பதை கேள்வி பட்டிருக்கோம், ஆனால் PM மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற அரசு விழாவில் பல லட்சம் பொருட்கள் அபேஸ் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த 5ஆம் தேதி நடந்த MH முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள், சினிமா ஸ்டார்களின் செல்போன், பணம், நகை என ₹12 லட்சம் பொருட்கள் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்ற AUS

image

இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய AUS அணி, 371/8 ரன்கள் குவித்தது. அந்த அணியின் எல்லிஸ் பெர்ரி 105 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய IND 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸி. அணி கைப்பற்றியுள்ளது.

News December 8, 2024

நடிகர் மோகன் பாபு மீது மகன் புகார்

image

தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, அவரது மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சொத்து தகராறில் மோகன் பாபு தன்னையும், தன் மனைவியையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக, மனோஜ் தாக்கியதாக, மோகன் பாபு புகார் அளித்திருந்தார். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

News December 8, 2024

GAIL நிறுவனத்தில் 261 பணிகள்: ₹1,60,000 வரை சம்பளம்

image

கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மூத்த பொறியாளர் முதல் அதிகாரி இடங்களுக்கு தகுதியானவர்கள் gailonline.com இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 261 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 11. எழுத்து, நேர்முக தேர்வு உள்ளது. இதில், உள் இடஒதுக்கீடும் உள்ளது. ₹60,000 – ₹1,60,000 வரை பதவிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

News December 8, 2024

பும்ராவை ஓரம்கட்டினாரா ரோஹித்?

image

AUS-க்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் பும்ராவை குறைவாக பயன்படுத்தியதாக ரோஹித் கேப்டன்சி மீது விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள ரோஹித், ஒரு நாள் முழுவதும் பும்ராவை ஓவர் போட சொல்ல முடியாது எனவும், சிராஜ், ரானா, நிதிஷ் என அணியில் உள்ள மற்ற பவுலர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பும்ராவின் வேலைப் பளுவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

News December 8, 2024

1 லட்சத்திற்கு விற்பனையாகும் தண்ணீர் பாட்டில் தெரியுமா?

image

வாழ்வில் இன்றியமையாத தண்ணீரை, சில காலத்தில் விலைக்கு வாங்கும் நிலைமை உருவாகி வருகிறது. ஆனால், இப்பவே 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் ₹1,16,000 விற்பனையாகிறது. இந்த தண்ணீர் ஜப்பானின் Kobe என்ற இடத்தின் இயற்கை நீரூற்றில் இருந்து எடுக்கப்பட்ட உலகின் மிகவும் சுத்தமான தண்ணீர். Fillico Jewellery Water எனப்படும் இந்த பாட்டில் தங்க அலங்காரங்களும், நேர்த்தியான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. இருந்தாலும் 1 லட்சமா?

News December 8, 2024

காலேஜ் பெண் வன்கொடுமை.. CM அமைதியாக இருப்பது ஏன்?

image

பாலியல் தொல்லை புகாரை வெறும் வார்னிங் கொடுத்து விடுதலை செய்யும் அதிகாரத்தை போலீசுக்கு யார் கொடுத்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட காலேஜ் பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல், பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெளி மாநில பிரச்னைக்கு 4 பக்க அறிக்கை விடும் CM அமைதியாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 8, 2024

BREAKING: புதிதாக ஆத்தூர் மாவட்டம்?

image

சேலம் மாவட்டத்தை 2ஆக பிரித்து ஆத்தூர் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் இந்த கோரிக்கை நிறைவேற்றக்கோரி, அக்கட்சியின் MLAக்கள் வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 8, 2024

தமிழகத்தின் மரம், விலங்கு, பழம் எது தெரியுமா?

image

நாட்டின் பல அடையாளங்களை அறிந்து வைத்திருக்கும் உங்களில் பலருக்கும் தமிழகத்தின் அடையாளங்களை குறித்து தெரியுமா. நாட்டிற்கு அடையாளங்கள் இருப்பது போலவே, ஒவ்வொறு மாநிலத்திற்கும் தனி அடையாளங்களும் இருக்கிறது. தமிழகத்தின் நடனம் பாரதநாட்டியம் என தெரிந்தவர்களுக்கு தமிழகத்தின் மரம் பனைமரம் * தமிழகத்தின் விலங்கு நீலகிரி வரையாடு * மாநிலத்தின் பழம் பலாப்பழம் * தமிழகத்தின் பூ காந்தள் பூ.

News December 8, 2024

IND-BAN Under 19: இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு

image

Under 19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கால் 49.1 ஒவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் ராஜ், செட்டன் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி வெற்றி பெற்று 9வது முறையாக கோப்பையை தூக்குமா?

error: Content is protected !!