News October 30, 2024

மழைக்காலத்தில் இருமல் பிரச்சனையா?

image

மழைக் காலத்தில் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
*தீராத இருமலுக்கு தேன் மிகச்சிறந்த மருந்து. தொண்டையின் உள்பகுதியில் இருக்கும் புண் மற்றும் அரிப்பை தேன் குணப்படுத்தும். *உப்புநீரில் வாய்க் கொப்பளித்து வந்தால் தொண்டையில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, இருமல் தீரும். *சளி, இருமலை குணப்படுத்த இஞ்சியும் உதவும். இஞ்சி டீ, இஞ்சி சாறாகவும் உட்கொள்ளலாம்.

News October 30, 2024

ஐபோன் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

ஐபோன் பயனர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் Apple iOS 18.1 அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதனால் இனி ஐபோன் பயனர்கள் கால் ரெக்கார்டிங் செய்ய முடியும். ஆனால், iPhone SE (2nd gen) முதல் iPhone 16 PRO MAX சீரிஸ் வரையிலான போன்களுக்கே இந்த சேவை கிடைக்கும். கால் செய்யும் போது, இடது மேற்பக்கத்தில் தெரியும் பட்டனை டேப் செய்து கால் ரெக்கார்ட் செய்யலாம்.

News October 30, 2024

ஷாக் கொடுக்கும் KKR; ஷ்ரேயாஸ், ரஸ்ஸல் இல்லையா?

image

2025 ஐபிஎல் சீசனுக்கு தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை அணிகள் முடிவு செய்ய நாளையே கடைசி நாளாகும். இந்நிலையில், கொல்கத்தா அணி தனது
பட்டியலை முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னணி வீரர்களான ஷ்ரேயாஸ், ரஸ்ஸல் மற்றும் மிட்செல் ஸ்டார்க்கை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ரிங்கு சிங், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் தக்கவைக்கப்படுவர் எனத் தெரிகிறது.

News October 30, 2024

யஷ் படத்திற்காக 599 ஏக்கர் மரங்கள் அகற்றம்: அமைச்சர்

image

யஷ் நடித்து வரும் ‘டாக்ஸிக்’ படத்தின் ஷூட்டிங்கிற்காக, 599 ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாக கர்நாடக வனத்துறை ஈஸ்வர் காந்த்ரே குற்றஞ்சாட்டியுள்ளார். பீன்யா-ஜலஹள்ளி பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு, கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படக்குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News October 30, 2024

நாளை மறந்தும் கூட இதை செய்து விடாதீர்கள்

image

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 6 – 7 மணி, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் வெடிக்கக்கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது. குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக் கூரைகள் உள்ள இடங்களிலோ பட்டாசு வெடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 30, 2024

எந்தெந்த அணியில் யார் யார் தக்கவைப்பு?

image

*CSK – ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே, பத்திரனா, தோனி.
*SRH – கிளாசென், கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ராணா, ஹெட்.
*LSG – நிக்கோலஸ் பூரன், பிஷ்னோய், மயங்க் அகர்வால், பதோனி, மொஹ்சின் கான்.
*KKR – நரைன், ரிங்கு, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித்.
*MI – ரோஹித், ஹர்திக், சூர்யகுமார், பும்ரா, திலக் & நமன் தீர்

News October 30, 2024

இந்தியாவில் பிரிட்டன் அரச தம்பதி

image

பிரிட்டன் அரசர் சார்லஸ் III, அரசி கமிலா இருவரும் இந்தியாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவுக்கு அக்.27ஆம் தேதி வந்த அரச தம்பதி, அங்குள்ள சவுக்யா மையத்தில் யோகா, தியானம் உள்பட வெல்னஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த காலத்திலும் இந்த மையத்துக்கு அரசர் சார்லஸ் வந்து சென்றுள்ளார். அரசுமுறைப் பயணம் இல்லை என்பதால் இப்பயணம் பற்றிய அறிவிப்பு முன்பே வெளியாகவில்லை.

News October 30, 2024

BIGG BOSS வீட்டுக்குள் Wildcard entry இவுங்க தானா?

image

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 8-வது சீசனில், இதுவரை 3 பேர் – ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்த நடிகர் சந்தோஷ், நடிகை பவித்ரா இருவரும் உள்ளே வருவார்கள் என தகவல்கள் உலா வருகின்றன. Let’s wait and watch.

News October 30, 2024

மாரி செல்வராஜின் அப்பா கதையில் கார்த்தி!

image

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து நடிகர்கள் தனுஷ், கார்த்தி ஆகியோரின் படங்களை இயக்க உள்ளார். இந்நிலையில் கார்த்தி, மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது மாரி செல்வராஜின் அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

News October 30, 2024

தீபாவளி: கடைசி நேரத்தில் வந்த Happy நியூஸ்

image

தீபாவளியையொட்டி, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னையிலிருந்து மக்கள் அவரவர் ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளதால், பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனையடுத்து, சென்னை சென்ட்ரல் – போத்தனூருக்கு இன்றிரவு 10.10க்கும், சென்னை எழும்பூர் – திருச்சிக்கு 9.10க்கும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறன.

error: Content is protected !!