India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரள மாநிலம் கோட்டயத்தில் 12-ந்தேதி தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இதனை திறந்த வைப்பதற்காக CM ஸ்டாலின் 11ம் தேதி கேரளா செல்கிறார். அம்மாநில CM பினராயி விஜயனும் இவ்விழாவில் பங்கேற்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது. மக்களின் வாக்குகளின் படி, பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆர்.ஜே.ஆனந்தி மற்றும் தர்ஷிகா ஆகியோர் மிகவும் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எலிமினேஷனில் நடந்த ஒரு ட்விஸ்ட் காரணமாக யாருமே எதிர்பாராத வகையில் ஆர்.ஜே.ஆனந்தி கண்ணீருடன் வெளியேறியுள்ளார். அதற்கு அடுத்ததாக சாச்சனா வெளியேறினார்.
புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை, பாட்னா பைரேட்ஸ் அணி அதிரடியாக வீழ்த்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 38-28 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அசத்தல் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், ஹரியானா அணி 67 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ் செய்துள்ளார். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், மணிப்பூர் விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை முதலில் விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு அதை பற்றி அவர் பேச வேண்டும். அடிப்படையான பொது அறிவை விஜய் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி வழங்கியுள்ளார். துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து இந்தத் தொகையை கார்த்தி வழங்கினார். முன்னதாக, நடிகர் சிவகார்த்திகேயன் புயல் நிவாரண நிதியாக கடந்த வாரம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். ஃபெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
சிரியாவில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்துக்கு, Mouawiya Syasneh என்ற 14 வயது சிறுவனின் கோபம் தான் காரணம் தெரியுமா? ஆம், அரசின் அடக்குமுறையை கண்டித்து 2011-ல் டாரா நகரச் சுவரில், ‘அடுத்து உன் முறை தான், டாக்டர்’ என அதிபர் ஆசாத்தை குறித்து எழுதினான். அவனும் நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதுவே ஆட்சிக்கு எதிரான தீப்பொறியை கிளப்ப, அடுத்த 14 ஆண்டுகள் உள்நாட்டுப் போர் தான். இன்று ஆட்சிக் கவிழ்ந்தது.
திமுகவை பார்த்து விஜய்க்கு பயப்படுவதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். அம்பேத்கர் இருந்திருந்தால் திமுக ஆட்சியை பார்த்து நிச்சயம் பெருமைப்படுவார் என்று குறிப்பிட்ட அவர், திமுகவை விமர்சித்தால்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்பதால் சிலர் அதை செய்வதாகவும் குறை கூறியுள்ளார். யாரை பார்த்தும் திமுக பயப்படாது என்றும், 2026இல் மீண்டும் ஆட்சியில் அமரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டமே பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி திட்டம். இதனிடையே, இத்திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும், UAN எனப்படும் சர்வதேச கணக்கு எண்ணை செயல்படுத்தவும், ஆதாரை இணைக்கவும் EPFO அமைப்பு உத்தரவிட்டது. இந்நிலையில், இதற்காக தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் டிச.15உடன் முடிவடைகிறது.
வாழைப்பழத்திற்காக 2 குரங்குகள் போட்ட சண்டையால், ரயில் போக்குவரத்து 1 மணி நேரம் நிறுத்தப்பட்ட சம்பவம் பிஹாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. சண்டையில் ஒரு குரங்கு, இன்னொரு குரங்கு மீது ரப்பர் போன்ற பொருளை எறிந்துள்ளது. அது, மின்சார வயரில் பட்டு ஷார்ட் சர்க்யூட் ஆனதால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகளோ அவதிப்பட, குரங்குகள் வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு நைசாக ஓடிவிட்டன.
ஆதவ் அர்ஜுனா மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், அம்பேத்கர் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆதவுக்கு அனுமதி கொடுத்ததே நான்தான். ஒரு நிகழ்ச்சியில் ஒருவரை கலந்துகொள்ளக் கூடாது என சொல்வது ஜனநாயகம் இல்லை. ஆதவ் அர்ஜுனா போன்ற தலித் அல்லாதவர் மீது நடவடிக்கை எடுக்க விசிகவில் சில விதிகள் உள்ளன. அதை பின்பற்றியே நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.