News October 31, 2024

அக்.31: வரலாற்றில் இன்று

image

✒ 1875: சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாள்
✒ 1895: இந்திய அணி முதல் கேப்டன் சி.கே. நாயுடு பிறந்தநாள்
✒ 1984: பாதுகாவலர்களால் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நாள்
​​✒ 1943: கேரள முன்னாள் சி.எம். உம்மன் சாண்டி பிறந்த நாள்
✒ 1984 – டெல்லி கலவரத்தில் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
✒ 2018 – Statue of Unity சிலை குஜராத்தில் திறந்து வைக்கப்பட்டது.

News October 31, 2024

இந்தப் படங்கள் இன்று ரிலீஸ்

image

தீபாவளியான இன்று வெளியாகும் படங்கள் எவை எவை என தெரிந்து கொள்வோம். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “அமரன்” இன்று ரிலீஸ் ஆகிறது. ஜெயம் ரவியின் “பிரதர்” படம், கவினின் “ப்ளடி பெக்கர்” படம் ஆகியவையும் இன்று வெளியாகிறது. பான் இந்தியா படமான துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” இன்று ரிலீஸ் ஆகிறது. இந்தாண்டு ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் எதுவும் தீபாவளியன்று ரிலீஸ் ஆகவில்லை.

News October 31, 2024

சமாதானப் பேச்சுக்கு பதிலளிக்காத விசிக?

image

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறக்கூடும் என தகவல் வரும் நிலையில், முரசொலி செல்வத்தின் படத் திறப்பு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டாமென கி. வீரமணியும், சத்யராஜூம் சமாதான பேச்சு பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் தெரிவித்ததை பொறுமையாக கேட்ட திருமாவளவன், எந்தப் பதிலும் அளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

News October 31, 2024

2 வளிமண்டல சுழற்சி

image

2 வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

News October 31, 2024

தீபாவளி: தமிழக மக்களுக்கு ராமதாஸ், அன்புமணி வாழ்த்து

image

தீபாவளி பண்டிகையையொட்டி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்து என ராமதாஸ் கூறியுள்ளார். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு விலக வேண்டும் என்று கூறி அன்புமணி வாழ்த்தியுள்ளார்.

News October 31, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: விருந்தோம்பல்
▶குறள் எண்: 86
▶ குறள்: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு.
▶ விளக்க உரை: வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
SHARE IT.

News October 31, 2024

உக்ரைன் ராணுவத்தில் இருந்து 1 லட்சம் வீரர்கள் தப்பியோட்டம்?

image

உக்ரைன் ராணுவத்தை விட்டு 1 லட்சம் வீரர்கள் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடக்கிறது. இந்த போரால் வெறுப்படைந்து, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஓடி விட்டதாக உக்ரைன் பெண் எம்பி அனா ஸ்கோர்கோட் தெரிவித்துள்ளார். இதனால் உக்ரைன் ராணுவத்திற்கு புதிதாக 1.60 லட்சம் வீரர்களை சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News October 31, 2024

16 மாவட்டங்களில் காலை 4 மணி வரை மழை

image

இன்று காலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், கரூரில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், நாகை, திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

News October 31, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 31 (ஐப்பசி 14) ▶ வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நேரம்: 12:15 AM – 1:15 AM, 6:30 PM – 7:30 PM▶ராகு காலம்:1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை:9:00 AM – 10:30 AM ▶ திதி: சதுர்தசி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு ▶ பரிகாரம்: தைலம் ▶ நட்சத்திரம்: சித்திரை ▶சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

News October 31, 2024

பாதுகாப்பாக கொண்டாடுங்க.. உதயநிதி வேண்டுகோள்

image

பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுபடி 4 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு அமலில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தீபாவளியன்று காலை 6- 7 மணி, இரவு 7- 8 மணி வரை நேர கட்டுப்பாடு இருப்பதாகவும், இதை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!