News October 31, 2024

உஷார்: தீபாவளி பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு…

image

*குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள் *எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டாம்; காட்டன் துணிகள் அணிந்து வெடிக்கலாம் *பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால், எண்ணெய் தடவாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது * கைகளில் வைத்து பட்டாசு வெடிக்கக் கூடாது. திறந்தவெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க

News October 31, 2024

சபரிமலை கோயிலுக்கு மலர் கொண்டு வர கட்டுப்பாடு

image

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புஷ்பாபிஷேக வழிபாட்டுக்கு பக்தர்கள் 25 கிலோவுக்கு மேல் மலர்கள் கொண்டு வரக்கூடாதென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் மாலை புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு பக்தர்கள் மலர் காெண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் மீதமாகும் மலர்களை அப்புறப்படுவதில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2024

தீபாவளி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

image

இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலையில் எழுந்த மக்கள், வீட்டில் சுடுதண்ணீர் வைத்து எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்தனர். பின்னர் புத்தாடை அணிந்து இனிப்புகளை பரஸ்பரம் வழங்கி ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து, சிறுவர்கள் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து காலை முதலே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

News October 31, 2024

அதிமுகவில் வைத்திலிங்கம் மீண்டும் சேர முயற்சி?

image

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அதிமுகவில் மீண்டும் சேர முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அணியில் இருந்தாலும், அவர் மீது வைத்திலிங்கம் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் சேலம் சென்று இபிஎஸ்சை சந்தித்து, அதிமுகவில் மீண்டும் சேர முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ், வைத்திலிங்கம் இடையே விரிசல் அதிகரித்து கொண்டே செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

News October 31, 2024

மும்பையில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் தெரியுமா?

image

நியூசி.க்கு எதிரான 3ஆவது டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12இல் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியும், 7இல் டிராவும் கண்டுள்ளது. நியூசி. அணி இங்கு 3 டெஸ்டில் விளையாடி 1இல் வெற்றியும், 2இல் தோல்வியும் அடைந்துள்ளது. 2021இல் நியூசி. வீரர் அஜாஸ் படேல், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் சாய்த்தார்.

News October 31, 2024

BREAKING: 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும், 2ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. SHARE IT.

News October 31, 2024

விஜய் பேச்சை நேரலையில் பார்த்த ஆளுநர்?

image

விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் பேசியதை ஆளுநர் ஆர்.என். ரவி நேரலையில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் அவரை தாக்கி விஜய் பேசக்கூடும் என்ற தகவல் சொல்லப்பட்டதாகவும், இதனால் நேரலையை கூர்ந்து கவனித்ததாகவும் கூறப்படுகிறது. ஆளுநர் பதவி தேவையில்லை என விஜய் பேசியதை மெளனமாக பார்த்த ஆர்.என். ரவி, திராவிட மாடல் என திமுகவை சாடியதை கேட்டு புன்முறுவல் செய்ததாக சொல்லப்படுகிறது.

News October 31, 2024

மாவோவின் பொன்மொழிகள்

image

* முகமூடிக்குள் நின்று பேசுவதைக் கைவிடுங்கள். எது உங்கள் அரசியல் வழியோ அதை முன்வையுங்கள் * ஒரு நியாயமான லட்சியம் அளவற்ற ஆதரவைப் பெறுகிறது என்பதையும், ஒரு நியாயமற்ற லட்சியம் எவ்வித ஆதரவையும் பெறுவதில்லை என்பதையும் எண்ணற்ற உண்மைகள் மெய்ப்பிக்கின்றன * மனிதனின் சமுதாய வாழ்வே, அவனுடைய சிந்தனையை நிர்ணயிக்கிறது * போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்

News October 31, 2024

செய்த வினை திமுகவுக்கு பூமராங் ஆகிவிட்டது: பாஜக

image

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில், ஆளுநரை திமுக சாடியது. இந்த சூழ்நிலையில் உதயநிதி நிகழ்ச்சியில் அப்பாடல் தவறாக பாடப்பட்டதாக கூறப்படுவதால், அக்கட்சி மீதும் விமர்சனம் எழுந்து வருகிறது. இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, செய்த வினை திமுகவுக்கு பூமராங் ஆகிவிட்டது என்று விமர்சித்தார். நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட ஆளுநரிடம் இருக்கும் நேர்மை கூட திமுகவிடம் இல்லை என்றும் சாடினார்.

News October 31, 2024

கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

image

இந்தியா, நியூசி. அணிகள் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி, மும்பையில் நாளை தொடங்குகிறது. முதல் 2 போட்டிகளில் நியூசி. அணி வெற்றி பெற்று தொடரை வென்று சாதனை படைத்தது. இந்த சூழ்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. ஏற்கெனவே 2 போட்டிகளிலும் தோற்றதால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இதனால் 3ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

error: Content is protected !!