News August 26, 2025

நாளை நிலவை பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

image

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சதுர்த்தி திதியில் சந்திரனை பார்க்க கூடாது என்பது வட இந்தியாவில் ஐதீகமாக உள்ளது. அப்படி சந்திரனை பார்த்தால் பொய்யான சாபம், திருட்டு குற்றச்சாட்டால் கறைபடுவார் என விநாயக பெருமான், சந்திரனை சபித்ததாக நாரத ரிஷி, கிருஷ்ணரிடம் கூறியதாகவும் நம்பப்படுகிறது. இது அறிவியல் ரீதியாக உண்மை இல்லை என்றபோதிலும் பலரும் கடைபிடிக்கின்றனர்.

News August 26, 2025

BREAKING: தமிழகத்தில் கடன் வட்டி தள்ளுபடி

image

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டது. இதனை மாவட்ட கலெக்டர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தள்ளுபடி போக மீதித் தொகையை பயனாளர்கள் விரைந்து செலுத்துமாறு சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தவணையை செலுத்துவதற்கான அவகாசம் 2026 மார்ச் 31 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

News August 26, 2025

நாம் தான் விமானத்தை கண்டுபிடித்தோம்: அமைச்சர்

image

ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலங்களுக்கு முன்பே, இந்தியாவிடம் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மகாபாரத காலகட்டத்தில் டிரோன்கள், ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நம்மிடம் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என பாஜக MP <<17510319>>அனுராக் தாக்கூர்<<>> கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

News August 26, 2025

AI-ஆல் சினிமாவிற்கு ஆபத்து: அனுராக் எச்சரிக்கை

image

AI-ஆல் உருவாகும் படங்கள் சினிமாவிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் எச்சரித்துள்ளார். AI திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றிவிடும் எனவும், இதனால் திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் ஏற்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், AI படங்களை விட்டு நடிகர்கள் வெளியேறவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 26, 2025

சற்றுமுன்: நகைக்கடன்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், நகர கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் உயிர் நாடியான பயிர் கடனை நகர கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தவும், வீட்டுக்கடன், நகைக்கடன், வணிகக் கடன்கள் வழங்க கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடனை நிறுத்தினால், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

News August 26, 2025

டிரம்ப் மிரட்டல்.. இந்தியாவை விட்டுக் கொடுக்காத ஆப்பிள்

image

ஐபோன் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற ஆப்பிள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான், இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் நாளை முதல் 50% வரி விதிக்கப்பட உள்ளது. ஆனால், டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிய போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவில் தங்களுடைய உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.

News August 26, 2025

BREAKING: ஓணம் விடுமுறை.. வெளியான ஸ்பெஷல் அறிவிப்பு

image

ஓணம் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே ஸ்பெஷல் ரயில்களை அறிவித்துள்ளது. ஆக.28-ம் தேதி சென்னை சென்ட்ரல் – கண்ணூருக்கும் (TRAIN NO: 06009), ஆக.30-ம் தேதி பெங்களூரு – கண்ணூருக்கும் (TRAIN NO: 06125) ஸ்பெஷல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக் பண்ண தயாரா இருங்க நண்பர்களே..!

News August 26, 2025

16 தொகுதிகள்.. கோயில் நகரங்களை குறிவைக்கும் பாஜக

image

2026 தேர்தல் வேலையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. இம்முறை இரட்டை இலக்க MLA-க்களை சட்டப்பேரவைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம். இதனிடையே, முதற்கட்ட விருப்ப தொகுதிகள் பட்டியல் அமித்ஷாவின் கைக்கு சென்றுள்ளது. அதில், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, ஸ்ரீரங்கம், தி.மலை உள்ளிட்ட 16 கோயில் நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளதாம். இதனால், அந்த பகுதியின் அதிமுக தலைகள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

News August 26, 2025

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்

image

இந்தியா ஒரு போதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாம் எப்போதும் முதலில் எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்பது உலகிற்கு தெரியும் எனவும், ஆனால் ஆபத்து வரும்போது சரியான பதிலடியை எப்படி கொடுப்பது என்பது நமக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

₹100, ₹200 நோட்டுகள்.. RBI முக்கிய தகவல்

image

செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 75% ஏடிஎம்களில் ₹100, ₹200 நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு RBI ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. ஆனால், பல ஏடிஎம்களில் ₹500 நோட்டுகள் மட்டுமே இன்னும் கிடைப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஏடிஎம் மெஷினில் பணம் வைக்கும் காசெட்களை சீரமைத்து ₹100, ₹200 நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இனி சில்லரை பிரச்னை இருக்காது!

error: Content is protected !!