India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்பொரு காலத்தில் காடு மலையை வாழ்விடமாக கொண்டிருந்த தமிழ் ஆதிகுடியினர் விசித்திரமான வழிபாட்டு முறையை கடைபிடித்தனர். அதாவது உயரமான முகடுகளில் படையலிட்டு, நின்றுகொண்டு தீயூட்டப்பட்ட நீளமான குச்சிகளைச் சுழற்றி தமது முன்னோரை வணங்கினர். இது மறைநிலவு நாளில் தமது முன்னோருக்கு வழிகாட்டும் என அவர்கள் கருதினர். இந்த தொன்மத்தின் நீட்சியே இன்றைய மத்தாப்பு சுற்றும் பழக்கம் மாறியதாக அறிகின்றோம்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது.
➤பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு போபண்ணா – எப்டன் ஜோடி முன்னேறியது. ➤U19 உலக குத்துச்சண்டை மகளிர் 57kg பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் அஞ்சலி குமாரி 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் சகுராவை வீழ்த்தினார். ➤புரோ கபடி தொடர்: 15வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வென்றது. ➤ உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மான்சி பங்கேற்க உள்ளார்.
பட்டாசுகள் வெடிக்கும்போது வெடி மருந்து, தீப்பொறி கண்ணில் பட்டால் கண்களை தேய்க்கக்கூடாது என கண் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கண்களில் லேசான எரிச்சல், கண் கருவிழிப் படலத்தில் சிராய்ப்பு போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் கண் பார்வை இழப்பு கூட ஏற்படலாம். அதனால், தள்ளி நின்று பட்டாசுகள் வெடிப்பது முக்கியம். தீப்பொறி, வெடி மருந்து பட்டால் கண்களை சுத்தமான நீரில் கழுவமாறு கூறியுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார். WTC புள்ளிகளும் மிகவும் முக்கியம் என கூறிய அவர், சொந்த மண்ணில் ஒருபோதும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஒயிட் வாஷ் ஆனதில்லை என்றார். அந்த மோசமான சாதனையை இப்போது படைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் அந்தகாசுர வதம் நிகழ்ந்த தலம் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயிலாகும். அந்தகாசுரனுக்கு இருள் நீக்கி ஞானம் கொடுத்து, பூதகணங்களுக்குத் தலைவனாகும் வாய்ப்பை வழங்கிய தலம் இது என சிவமகா வீரட்ட புராணம் கூறுகிறது. இந்தக் கோயிலுக்கு சென்று, வீரட்டேசுவரர் – பெரியநாயகியை வணங்கினால் சுக்கிர தோஷத்தை நீங்குவதோடு 16 செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.
தினமும் காலை 15-30 நிமிடங்கள் பிராணயாமம் செய்வது மனம்-உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முதலில் வஜ்ராசனத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து, வலது நாசியை அழுத்தி இடது நாசி வழியாக மூச்சை இழுக்கவும். பின் இடது நாசியை அழுத்தி வலது நாசி வழியாக காற்றை வெளியிடவும். இப்படி இருபுறமும் செய்யவும். இது மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்த விநியோகம் மேம்பட்டு, இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியமாகும்.
தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ‘அமரன்’ படம் இன்று வெளியாகிறது. முன்னதாக நேற்று மாலை இப்படத்தை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி பார்த்துள்ளனர். அவர்களுக்காக படக்குழுவினர் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். படக்குழுவினர் முதல்வருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இப்படத்தை யாரெல்லாம் இன்று தியேட்டரில் பார்க்க உள்ளீர்கள்?
* எஸ்பிஐ கடன் அட்டைகளுக்கான பைனான்ஸ் கட்டணங்கள் 3.75%ஆக அதிகரிக்கப்பட்டிருப்பது நவ.1ல் அமலுக்கு வருகிறது *ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் திருத்த விதிகள் நவ. 15 முதல் அமலுக்கு வருகிறது * ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைக்கப்பட்டது நவ.1இல் அமலாகிறது *உள்ளூர் பணப்பரிவர்த்தனைக்காக ஆர்பிஐ-யால் அறிவிக்கப்பட்ட விதிகள் நவ.1இல் அமலுக்கு வருகிறது * வழக்கம்போல நாளை கியாஸ் விலை மாற்றப்படவுள்ளன.
ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்களை தெரிந்து கொள்வோம். இந்திய தனித்துவ அடையாள ஆணைய விதிப்படி, 5-7 வயது வரை ஒருமுறை பயோமெட்ரிக் அப்டேட் செய்ய கட்டணம் இல்லை. இதேபோல், 15 முதல் 17 வயது வரையிலான காலத்தில் ஒருமுறை அப்டேட் செய்ய கட்டணம் கிடையாது. அதன்பிறகு பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும் எனில் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணம் ஆகும். SHARE IT.
Sorry, no posts matched your criteria.