News October 31, 2024

நண்பர் கமலின் அழைப்பை ஏற்று படம் பார்த்தேன்: CM

image

‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக CM ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். நண்பர் கமல்ஹாசனின் அழைப்பை ஏற்று ‘அமரன்’ படத்தை தியேட்டரில் பார்த்தேன் என குறிப்பிட்டுள்ள அவர், மேஜர் முகுந்தின் வீரத்தை உணர்வுப்பூர்வமாக படமாக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘அமரன்’ படத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தியேட்டரில் பார்த்தார்.

News October 31, 2024

சாதனைத் தமிழன்: Cryogenic Engine புகழ் நாராயணன்

image

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தன்னிறைவு பெற்றுள்ள இஸ்ரோ – LPSCஇன் வளர்ச்சியில் நாராயணனின் பங்களிப்பு முக்கியமானதாகும். 1980களில் இந்தியாவுக்கு Cryogenic Engine தொழில்நுட்பத்தை தர மறுத்த USA-ஐ 2017இல் அதிசக்தி கொண்ட C25 திட்டம் மூலம் இவர் அண்ணாந்து பார்க்க வைத்தார். தமிழ்வழியில் படித்து, முன்னேறிய இந்த குமரித்தமிழன் தற்போது மின்சார உந்துவியல் இன்ஜினை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

News October 31, 2024

Recipe: தேங்காய் சாக்லேட் லட்டு செய்வது எப்படி?

image

வாணலியில் நெய்விட்டு தேங்காய் துருவல் (அரை கப்) சேர்த்து வதக்கவும். அதில் காய்ச்சிய பசும்பால் ஊற்றவும். பின் மில்க் மெய்ட், கோகோ தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து இளகி பின் கெட்டியாகும். இப்பதம் வந்ததும் நெய்யில் வறுத்து, பொடித்து நட்ஸை சேர்க்கவும். இந்த கலவை ஆறியவுடன் கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு உருண்டையாகப் பிடித்தால் சுவையான தேங்காய் சாக்லேட் லட்டு ரெடி.

News October 31, 2024

இந்தியா 107 ரன்களுக்கு ஆல்அவுட்

image

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ஆஸி.,யின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 21, படிக்கல் 36, நவ்தீப் சைனி 23 ரன்கள் எடுத்தனர். ஆஸி., தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டக்கெட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னும் சற்று நேரத்தில் ஆஸி பேட்டிங் செய்ய உள்ளது.

News October 31, 2024

நகை சேமிப்பு திட்டங்களில் சேருவது பாதுகாப்பானதா?

image

லாபகரமானதென எண்ணி, நகைக் கடைகள் நடத்தும் நகை சேமிப்பு திட்டங்களில் பலர் அறியாமையில் சேருகின்றனர். குருவி போல சேமித்த பணத்தை (ஆருத்ரா போன்ற) மோசடி கழுகுகளை நம்பி இழக்கின்றனர். இதற்கு பதிலாக இதே மாதாந்திர தொகையை ETF-இல் (அ) தங்க மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். இல்லையென்றால் தொகையை மாதந்தோறும் RD-இல் சேமித்து, ஆண்டு முடிவில் அதை எடுத்து நகை வாங்கிக் கொள்ளுங்கள்.

News October 31, 2024

FLASH: மதுரையில் EXP ரயில் தடம் புரண்டு விபத்து

image

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான கடைசிப் பெட்டி மட்டும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீண்டும் ரயிலின் சக்கரத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

News October 31, 2024

சைனஸை விரட்டி அடிக்கும் திப்பிலி தேநீர்

image

பனிக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, மூச்சிரைப்பு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் திப்பிலி தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். திப்பிலி, மஞ்சள், சுக்கு, சீரகம், ஓமம், ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான திப்பிலி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News October 31, 2024

இன்றே கடைசி: இந்திய தபால் துறை வங்கியில் வேலை

image

இந்திய தபால் துறை பேமெண்ட் வங்கியில் 344 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.31) கடைசி நாளாகும். எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு 20 – 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பும், விண்ணப்ப கட்டணமாக ₹750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>https://ibpsonline.ibps.in/ippblsep24/<<>> என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

News October 31, 2024

தடுமாறும் இந்தியா ஏ டீம்

image

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் நாள் உணவு இடைவெளி வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது. அபிமன்யூ ஈஸ்வரன் (7), ருதுராஜ் (0), சாய் சுதர்சன் (21), பாபா இந்திரஜித் (9) ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளனர். படிக்கல் 35*, இஷான் கிஷன் 4* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

News October 31, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤இந்திய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது. ➤உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் என்ற மோசமான நிலையை பாகிஸ்தானின் லாகூர் (AQI 708) எட்டியது. ➤கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) வட கொரியா கிழக்கு கடல் பகுதியை நோக்கி ஏவியது. ➤ஸ்பெயினில் பெய்த கனமழை & வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது.

error: Content is protected !!