India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எது மாறினாலும், சூரியன் கிழக்கில் உதிப்பது மாறாது என்பார்கள். ஆனால், பனாமா தீவின் மேற்கில் பசிபிக் பெருங்கடலில் உதித்து சூரியன் கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் மறைவதை உங்களால் பார்க்க முடியும். இதற்கு ஒரு காரணமும் உள்ளது. பனாமா “S” வடிவத்தில் இருக்கும் நாடு. இதனால், வடக்கு மற்றும் தெற்கு பல நேரங்களில் கிழக்கு மற்றும் மேற்காக புரிந்து கொள்ளப்படுவதால், இப்படியான ஒரு அதிசயம் நிகழ்கிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிச.11 முதல் 13ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு மழையால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று, ஆனந்தி மற்றும் சாச்சனா வெளியேறியுள்ளனர். சுமார் 63 நாள்கள் இருவரும் அங்கு தங்கியிருந்து பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். இந்த நிலையில், இருவருக்கும் வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, RJ ஆனந்திக்கு ₹15 லட்சமும், சாச்சனாவுக்கு ₹12 லட்சமும் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டதாக திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என்றும், அம்பேத்கர் பற்றி மட்டும் பேசும்படி அவரிடம் பலமுறை அறிவுறுத்தியும் அதனை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் திமுகவிடம் இருந்து தங்களுக்கு எந்தவித நெருக்கடியும் வரவில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடன் இருக்கும் என கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், “ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது. கல்வி அறிவுதான் களத்தில் கூட நான் சரியான முடிவுகளை எடுக்க எனக்கு உதவுகிறது. நான் தற்போது Phd படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை அடுத்த முறை நேர்காணல் செய்யும்போது நான் ‘டாக்டர். வெங்கடேஷ் ஆக இருப்பேன்” என்றார்.
அமெரிக்காவின் பில்லியனரான ஜார்ஜ் சொரோஸ், பிசினஸில் மட்டுமல்லாமல் அறப்பணிகளிலும் பிரபலமானவர். அதேநேரம், தனது பவுண்டேஷன் & ஓபன் சொசைட்டி அமைப்பு மூலம், உலக நாடுகளின் அரசியலை மாற்ற முயல்வதாக அவர் மீது பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. உலகில் செல்வாக்கான NGO-களில் இவருடையது முக்கியமானது. ராகுல் காந்தி தனது வெளிநாட்டு பயணங்களின் போது, அந்த அமைப்புடன் தொடர்புள்ளவர்களை சந்தித்ததாக BJP குற்றஞ்சாட்டி வருகிறது.
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு தும்பை விட்டு வாலை பிடிப்பதாக LoP இபிஎஸ் சாடியுள்ளார். பேரவை வளாகத்தில் பேட்டியளித்த அவர், மதுரையில் சுரங்கம் அமைக்க டெண்டர் கோரப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்காமல், மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகு பிரச்னையை பூசிமொழுக நினைப்பதாகக் குறை கூறினார். தொடர்ந்து பேசிய இபிஎஸ், பார்லிமெண்டில் DMK எம்பிக்கள் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்திற்கு வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 11ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் 12ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும்.
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அரசுக்கு எதிரான சிறப்புத் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தேர்வான பகுதி, அரிய வகை உயிரினங்களின் வாழ்வாதாரமாக இருப்பதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதுகுறித்து மோடி பதிலளிக்க வேண்டும் என்றார் ஜார்ஜ் சொரோஸ். காங்கிரஸ் கட்சி, குறிப்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பாஜகவுடன் அதானியை தொடர்புப்படுத்தி பேசி வருகிறார். இதற்கு பதில் சொல்வது பாஜகவுக்கு பெரும் தலைவலியான நிலையில், சொரோஸுடன் காங்கிரஸை இணைத்துப் பேசத் தொடங்கிவிட்டது பாஜக. யாருக்கு யாருடன் தொடர்போ? யார் அறிவாரோ!
Sorry, no posts matched your criteria.