News October 31, 2024

தோல்வி வலி நல்லது: கம்பீர்

image

NZ-க்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்தது IND அணியை காயப்படுத்தியதாக பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். இருப்பினும் வீரர்கள் சிறப்பாக செயல்பட இந்த வலி உதவும் எனவும், பேட்ஸ்மேன்களை குறை சொல்லாமல், அனைத்து வீரர்களும் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். நாளை 3ஆவது போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெற்ற பிரஸ்மீட்டில் அவர் இதை தெரிவித்துள்ளார்.

News October 31, 2024

தீபாவளி : பட்டாசு வெடித்து 82 பேர் காயம்

image

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டு முழுவதும் பட்டாசு வெடித்த 82 பேர் காயமடைந்துள்ளனர். இதில் தலைநகரான சென்னையில் பட்டாசு வெடித்தபோது தீக்காயமடைந்த 7 பேரில் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தீக்காயங்களுக்கு ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

News October 31, 2024

படேலுக்கு பிரதமர் மோடியின் சமர்ப்பணம்

image

ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகளாக அரசியலமைப்பை சிதைத்து வந்த J&K சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தான் இன்றைய தேசிய ஒற்றுமை தினத்தில் படேலுக்கு தான் வைக்கும் சமர்ப்பணம் என கூறியுள்ளார். மேலும், அரசியலமைப்பு பற்றி பேசுபவர்கள் தான் இத்தனை ஆண்டுகளாக அதை இழிவு செய்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News October 31, 2024

இனி YouTube-ல் பொருள்கள் ஆர்டர் பண்ணலாம்

image

யூடியூப் நிறுவனம் புதிதாக YouTube Shopping affiliate program என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, யூடியூபில் உள்ள தேர்வு செய்யப்பட்ட கன்டென்ட் கிரியேட்டர்கள், Influencers தங்கள் வீடியோக்களில் Flipkart & Myntra போன்ற ஆன்லைன் தளங்களில் உள்ள புராடக்ட்களை நேரடியாக டேக் செய்ய முடியும். இதற்கு கமிஷன் கிடைக்கும். அதேபோல், பயனர்களும் யூடியூபிலிருந்தே நேரடியாக பொருள்களை ஆர்டர் செய்யலாம்.

News October 31, 2024

எஸ்.ஐ உயிரிழப்பு: ஸ்டாலின் இரங்கல்

image

ராமநாதபுரம் பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி எஸ்.ஐ சரவணன் (36) உயிரிழந்தார். தேவர் ஜெயந்தியையொட்டி, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின் கம்பியில் கொடிக்கம்பம் பட்டதில் மின்சாரம் பாய்ந்து சரவணன் பரிதாபமாக மரணமடைந்தார். அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News October 31, 2024

இந்தியாவின் இரும்பு மனிதர் பிறந்த தினம் இன்று

image

இந்தியாவின் முதல் துணை பிரதமர், பிளவுபட்டு கிடந்த இந்திய தேசத்தை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்த அரசியல் தீர்க்கதரிசி சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் இன்று. இந்தியா சுதந்திரம் அடைந்த போது 565 சமஸ்தானங்கள் இணையாமல் முரண்டு பிடிக்க, ராஜதந்திரம் மற்றும் ராணுவ நடவடிக்கை மூலம் வழிக்கு கொண்டு வந்தார். வழக்கறிஞராக பொதுவாழ்வை துவங்கிய அவர், இந்திய அரசியலில் மறைக்க முடியாத வரலாறாய் வாழ்ந்து மறைந்தார்.

News October 31, 2024

ரிஷப் பண்ட்டை வாங்க CSK தீவிரம்

image

டெல்லி அணி ரிஷப் பண்ட்டை தக்கவைக்காத பட்சத்தில், ஐபிஎல் ஏலத்தில் அவரை வாங்க CSK ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஏலத்தில் பண்ட்டை வாங்கும் யுக்தி தொடர்பாக CSK நிர்வாகத்துடன் தோனி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு அடுத்ததாக CSK அணியில் ஒரு கீப்பர் தேவை என்பதாலும், பண்ட் கேப்டனாக சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதாலும் CSK அவரை வாங்கும் என கூறப்படுகிறது.

News October 31, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 11 மணிக்கு <<14496796>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1)ஜஸ்ட் ரூம் எனஃப் தீவு – USA 2) Chartered Accountant 3) பூர்வாஞ்சல் 4)அணுக் கோட்பாடு 5)42 6) பூச்சிகளைப் பற்றிய படிப்பு 7) ஹூட் பிடோஹுய் 8) ஜார்ஜ் ஹார்ட். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 31, 2024

Gpay யூஸ் பண்றீங்களா? தீபாவளிக்கு ₹1,001 இலவசம்!

image

தீபாவளியையொட்டி, Gpay மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு பயனருக்கும் அந்நிறுவனம் ₹1,001 கேஷ் பேக் ஆஃபர் வழங்குகிறது. நவ.7க்குள் இச்சலுகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் அந்த செயலியில் உள்ள 6 லட்டுகளை சேகரிக்க வேண்டும். EB bill, ரீசார்ஜ் போன்ற வழக்கமான பரிவர்த்தனைகள் மூலம் இந்த 6 லட்டுகளை பெறலாம். அதன் பிறகு அந்த லட்டுகளை ஸ்கிராட்ச் கார்டுகளாக கிளைம் செய்து கேஷ்பேக் பெறலாம்.

News October 31, 2024

சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்

image

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2ஆவது சீசன், நவ.5இல் தொடங்கவுள்ளது. சர்வதேச, இந்திய அளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்கும் செஸ் போட்டி நவ.11ஆம் தேதிவரை அண்ணா நூற்றாண்டில் நூலக வளாகத்தில் நடக்கவுள்ளது. இத்தொடரின் மொத்த பரிசுத்தொகை ₹70 லட்சமாகும் (மாஸ்டர்ஸ் பிரிவு ₹15 லட்சம், சேலஞ்சர்ஸ் பிரிவு ₹6 லட்சம்). இதில் வெல்பவர் அடுத்தாண்டு நடைபெறும் தொடரில் நேரடியாக பங்கேற்க தகுதிபெறுவர்.

error: Content is protected !!