India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புகையிலை பயன்பாடு விவகாரத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனைகளை ஆண்டுக்கு இருமுறை செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளின் அருகில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்து பிடிபட்டால் சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் ஆணையிட்டுள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்து கைதானவர்கள் ஜாமின் கோரிய வழக்கில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரான்(21 கோடி), மயங்க் யாதவ் (11 கோடி), ரவி பிஷ்னோய் (11 கோடி), ஆயுஷ் படோனி (4 கோடி),மொக்சின் கான் (4 கோடி)ஆகியோர் தக்கவைக்கப்பட்டவர்கள். நட்சத்திர ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். ராகுல் RCB அணியில் இணைவார் என நம்பப்படுகிறது.
நடைபெறவுள்ள IPL 2025 தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ள Auction’க்காக பஞ்சாப் அணி Uncapped Players’ஆன ஷஷாங்க் சிங்(5.5 கோடி) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (4 கோடி) ஆகியோர் தக்கவைத்துள்ளது. தற்போது அந்த அணி அதிக பணத்துடன் அதாவது ரூ. 110.5 கோடியுடன் IPL acution’க்கு வருகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். விபத்தில் இருந்து மீண்டு வந்த அவர், தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். அப்படி இருந்தபோதிலும் அவரை DC தக்கவைக்க விரும்பவில்லை. இதனால், ஏற்கெனவே பேச்சு அடிப்பட்டது போல் அவரை சிஎஸ்கே அணி வாங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் சிஎஸ்கே வந்தால் எப்படி இருக்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க.
RR அணி தக்கவைத்த வீரர்கள் சாம்சன்(18 கோடி), ஜெய்ஸ்வால்(18 கோடி),ரியான் பராக் (14 கோடி), துருவ் ஜூரேல்(14 கோடி), ஹெட்மேயர் (11 கோடி) , சந்தீப் சர்மா (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. அணியில் விளையாடிய நட்சத்திர வீரர்களான அஸ்வின்,சாஹல்,பட்லர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணியில் ரஸ்ஸல், ரிங்கு (13 கோடி), வருண் சக்கரவர்த்தி (12 கோடி), சுனில் நரேன் (12 கோடி), ஆண்ட்ரே ரசல்(12 கோடி), மற்றும் Uncapped Player’களாக ஹர்ஷித் ராணா (4 கோடி), ராமந்தீப் சிங்(4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். கோப்பையை வென்ற கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணியில் அக்சர் படேல்(16.5 கோடி), குல்தீப் யாதவ்(13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்(10 கோடி) மற்றும் அபிஷேக் போரல்(4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். கேப்டன் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெறவுள்ள IPL 2025 முன்பாக மெகா auction நடைபெறவுள்ளது. RCB அணி நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி(21 கோடி), ரஜத் படிதார்(11கோடி), யஷ் தயாள்(5 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். கேப்டனாக செயல்பட்ட டுபிளேசிஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 முறை சாம்பியனான மும்பை அணி தற்போது கேப்டன் ஹர்திக்(16.35 கோடி), ரோகித் (16.30 கோடி), சூர்யகுமார் யாதவ்(16.35 கோடி) பந்துவீச்சாளர் பும்ரா( 18 கோடி) , திலக் வர்மா(8 கோடி) ஆகியோரை தக்கவைத்து கொண்டுள்ளது. கடந்த முறை அணி வீரர்களுக்கு மத்தியில் சண்டை இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கு சுமுகமான தீர்வை MI செய்துள்ளதாக தெரிகிறது.
தீபாவளியை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. டிசம்பர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. ‘புஷ்பா’ முதல் பாகம் மெகா ஹிட் அடித்த நிலையில், அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ₹300 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.