News December 10, 2024

6 மாதத்தில் திருமா அணி மாறுவாரா? தமிழிசை கேள்வி

image

ஆதவ் அர்ஜுனா 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமா அறிவித்தது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார். 6 மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா அல்லது திருமா அணி மாறுவாரா எனவும் இந்த சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே, திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்று பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News December 10, 2024

பெட்ரோல், டீசல் விலை சிறிது உயர்வு

image

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சிறிதளவு உயர்த்தியுள்ளன. சென்னையில் நேற்று லிட்டர் பெட்ரோல் ரூ.100.80ஆக விற்கப்பட்டது. அதேபோல், லிட்டர் டீசல் ரூ.92.39ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.100.90ஆகவும், டீசல் விலை 10 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.92.49ஆகவும் விற்பனையாகிறது.

News December 10, 2024

ரூ.2,400 கோடியை விடுவிக்க தமிழகத்துக்கு நிபந்தனை

image

தேசியக் கல்வி கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கு ரூ.2,400 கோடியை விடுவிப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அக்கொள்கை தமிழக நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அரசு ஏற்கவில்லை. இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய 2024-2025 ஆண்டு நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகையுடன் (ரூ.248.29 கோடி) சேர்த்து ரூ.2,400 கோடி தர வேண்டியுள்ளது.

News December 10, 2024

சிரியா அதிபருக்கு தஞ்சம்.. ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

சிரியா அதிபர் அல் அசாத்துக்கு அரசியல் ரீதியில் தஞ்சம் கொடுத்து இருப்பதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் படை சிரியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அல் அசாத் ரஷ்யாவுக்கு சென்று விட்டதாக தகவல் வெளியானது. ரஷ்யத் தொலைக்காட்சிகள் இதைத் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வந்தன. இந்நிலையில் முதல்முறையாக ரஷ்ய அரசும் இதனை தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.

News December 10, 2024

இன்று முதல் குரூப்-1 தேர்வு.. 90 இடங்களுக்கு 1,988 பேர் போட்டி!

image

TNPSC குரூப்-1 மெயின்ஸ் தேர்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். தமிழ் தகுதித் தாள், பொது அறிவு தொடர்பான 3 தாள்கள் என மொத்தம் 4 தாள்கள் இடம்பெறுகின்றன. சென்னையில் 10 மையங்களில் டிச.13 வரை 4 நாள்கள் இத்தேர்வு நடைபெறுகிறது. இதற்காக 19 தலைமை தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News December 10, 2024

முன்னாள் MP இரா.மோகன் காலமானார்

image

கோவை முன்னாள் MP இரா. மோகன் உடல் நலக்குறைவால் காலமானார். இவர், 1980ஆம் ஆண்டு கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1989ஆம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்று கோவையின் முக்கிய புள்ளியாக இருந்தார். 81 வயதாகும் அவர், இன்று காலை வயது முதிர்வால் காலமானார்.

News December 10, 2024

கல்வி சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

image

புயல் வெள்ளத்தில் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கல்வி சான்றிதழை இழந்தோருக்கு புதிதாக சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு முகாம்களில் இச்சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும்படி அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டத் தேர்வுகள் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

News December 10, 2024

QR கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்துகிறீர்களா?

image

பையில் பணம் எடுத்து செல்லாதோர் மொபைலில் உள்ள யுபிஐ மூலம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்களுக்காக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விளம்பரம் வெளியிட்டுள்ளது. க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துவோர், திரையில் வரும் பெயரை உறுதி செய்தபிறகு பணத்தை அனுப்ப வேண்டும். இல்லையெல், உங்கள் வங்கிக் கணக்கிலுள்ள பணம் திருடப்படும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளது.

News December 10, 2024

சூப்பர் ஸ்டாரை மீட்ட SM. கிருஷ்ணா

image

2000ஆவது ஆண்டு கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் SM.கிருஷ்ணா. அப்போது, தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். ராஜ்குமாரை விடுவிப்பதற்காக இரு மாநில முதல்வர்களும் பலமுறை ஆலோசனை நடத்தினர். பின்னர், 108 நாள்களுக்குப் பின் வீரப்பனிடம் இருந்து ராஜ்குமார் மீட்கப்பட்டார்.

News December 10, 2024

சீதையாக நடிக்க சைவத்துக்கு மாறிய சாய் பல்லவி

image

புதிய படத்தில் சீதையாக நடிப்பதால் சாய் பல்லவி சைவத்துக்கு மாறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ராமாயணம் எனும் புது படம் உருவாகி வருகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இப்படத்திற்காக சாய் பல்லவி சைவ உணவு பழக்கத்துக்கு மாறியுள்ளதாகவும், சைவம் மட்டுமே சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!