India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவில்பட்டி அருகே நேற்று காணாமல்போன 5ஆம் வகுப்பு பள்ளி மாணவன் கருப்பசாமி(10), பக்கத்து வீட்டு மாடியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் கழுத்திலிருந்த 12 கிராம் தங்கச் செயின், 1 கிராம் தங்க மோதிரத்தைக் காணவில்லை எனப் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால், நகைக்காகச் சிறுவன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரத் நெட் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தொழில் முனைவோருக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராமங்களுக்கு 1ஜிபிஎஸ் வேக நெட் சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்தை ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, முதல்கட்டமாக 960 கிராமங்களில் அந்த சேவையை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தொழில் முனைவோர், கேபிள் ஆபரேட்டர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய மேலும் 24 மணி நேரம் ஆகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, நேற்றே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடம் மாறாமல் வலுப்பெறாமல் நிற்கிறது. இந்த தாழ்வுப் பகுதியால் டெல்டா கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 12வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கடந்த சுற்றில் வெற்றிபெற்று குகேஷ் முன்னிலை பெற்ற நிலையில், இச்சுற்றில் சீனாவின் டிங் வெற்றி பெற்று இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளார்கள். இன்னும் 2 சுற்று ஆட்டங்களே மிஞ்சியிருக்கிறது என்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சாதிப்பாரா சென்னை பையன்?
மன்னார்குடியில் காதலிக்க மறுத்ததாகக் கூறி கல்லூரி மாணவியை அத்தை மகன் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த மாணவி திருவாரூர் அரசு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மகாதேவனை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சையில், திருமணத்திற்கு மறுத்ததாக டீச்சர் ரமணி பள்ளி வளாகத்திலேயே கடந்த 20ம் தேதி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடப்பு கல்வியாண்டில் நாட்டில் 11.70 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக் கல்வி பெறவில்லை என மத்திய இணையமைச்சர் ஜெயந்த் செளத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 7.84 லட்சம், ஜார்கண்ட்டில் 65,000, அசாமில் 63,000 குழந்தைகளும் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 544 ரேஷன் கடைகளும், 1,126 பகுதி நேர ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மேலூரில் புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு அதிமுக MLA பெரியபுள்ளான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மூன்றரை ஆண்டுகளில் மொத்தம் 1,670 கடைகள் தொடங்கப்பட்டதாகவும், வாய்ப்பிருந்தால் மேலூரில் புதிய கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதிகமாக வேலை செய்வது Stressயே கொடுக்கும் என்பது உணர்ந்து ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரலில் அமலாகவுள்ளது, வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, 3 நாள் விடுமுறை என்பது கேட்பதற்கே இனிப்பாக உள்ளது அல்லவா? இது பணிசெய்பவர்களின் வேலை பார்க்கும் திறனை அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால், நம் ஊரில் ஒருத்தர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யணும் என்கிறார். என்னவென்று சொல்வது…
எவ்வளவு காலத்திற்கு இலவசங்களை வழங்க முடியும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2020ல் கொரோனா தொற்றால் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்து நீதிமன்றம் தாமாக விசாரித்து வருகிறது. இதில், 81 கோடி மக்களுக்கு மானிய விலை, FREE ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறியது. இதையடுத்து, இலவசங்களுக்கு பதில் ஏன் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடாது என்று கேட்டுள்ளது.
நடைபெற்று வரும் BGT தொடரில் 2ம் டெஸ்ட் தோல்வி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரோஹித், விராட் கோலி ஆகியோரின் ஃபார்ம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி. ரோஹித் இந்த ஆண்டில் 12 டெஸ்டில் 597 ரன்களும், கோலி 8 டெஸ்டில் 373 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்கள். இது அணிக்கு இவர்களால் அணியில் இளம் வீரர்களுக்கான இடமும் கேள்விக்குறியாகிறது என்ற கருத்தும் எழுகிறது. இது குறித்து என்ன நினைக்கிறீங்க
Sorry, no posts matched your criteria.