India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காதலன் தன் private போட்டோவை வைத்து கொண்டு, பாலியல் ரீதியாக advantage எடுக்க முயன்றதால், ஆத்திரமடைந்த பெண் ஒருவர் அதிரடியாக அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்துள்ளார். இச்சம்பவம் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து, காதலன் தொந்தரவு தர, தாங்கி கொள்ள முடியாததால், பூங்காவிற்கு வரவழைத்து மரத்தில் அவரை கட்டி வைத்து, இச்செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் அப்பெண் தெரிவித்துள்ளார்.
அதானியை, தான் சந்தித்ததே இல்லை என பேரவையில் CM ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் அதானி நிறுவன முதலீடு, CM ஸ்டாலின் அவரை தனியாகச் சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக, பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாகப் பேரவையில் பேசிய அவர், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து பார்லிமெண்ட்டில் விவாதிக்க பாஜக, பாமக ஆதரவு அளிக்கிறதா இல்லையா என கேள்வி எழுப்பினர்.
கார்த்திகை மகா தீபத்தையொட்டி வரும் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத்திருவிழா, வரும் 13ஆம் தேதி மகா தீபத்துடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி & கல்லூரிகள் செயல்படாது.
சென்னை தொழிலதிபர் நரசிம்ம ரெட்டியிடம் கவர்னர் பதவி வாங்கித் தருவதாக கூறி மராட்டிய நபர் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. அரசியல் பிரபலங்களை தெரியும் எனக் கூறி ரெட்டியிடம் பழகிய குல்கர்னி, ₹15 கோடி கொடுத்தால் கவர்னர் பதவி உறுதி எனக் கூறியுள்ளார். குல்கர்னி வலையில் சிக்கிய ரெட்டி, ₹5.07 கோடி கொடுத்துள்ளார். பின்னர், சதுரங்கவேட்டை பட பாணியில் ஏமாந்ததை உணர்ந்த ரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பஸ்சில் ஜன்னல் சீட் கிடைத்தாலே Luck என்போம். ஆனால், 7 முறை சாவையே வென்றுவிட்டார் குரோஷியாவைச் சேர்ந்த பிரானோ செலக். வாழ்க்கையில் ஒரே முறை இவர் போன விமானம் விபத்தில் சிக்க, அதிலிருந்து தப்பித்தார். மழையால் ரயில் தடம் புரண்டும் பிழைத்தார். குன்றின் உச்சியில் இருந்தும் விழுந்தும் தப்பினார். இதுவே இவரை லக்கி பாஸ்கர் என நீங்கள் கூறினால், 2003ல் இவர் வாங்கிய லாட்டரியில் ₹8 கோடி பரிசும் விழுந்துள்ளது.
திருப்பூர் பல்லடம் அருகே கணவன், மனைவி வீட்டிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் கொலையா, தற்கொலையா என விசாரிக்கின்றனர். அண்மையில், அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கொலைக்கு காரணமானவர்களை கண்டறியாத நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 கல்வி உதவித் தொகை வழங்க வகைசெய்யும் CM-ன் திறனாய்வுத் தேர்வுக்கு இன்று (டிச.10) முதல் டிச.18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதம் ₹1000 வீதம் கல்வி ஆண்டில் ₹10,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in தளத்தில் பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வருங்காலத்தில் விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்து சென்றிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். திமுக – விசிக- தவெக என்று அரசியல் சர்ச்சை நிலவி வரும் சூழலில் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பதாக திருமா பேசினார். இதனையடுத்து கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே, “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்து சென்றார்.
நடிகர் சிவராஜ் குமார் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார். அங்கு அவரும், அவரது மனைவி கீதா சிவராஜ்குமாரும் முடி காணிக்கை செலுத்தினர். சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது. ஆனால், இதனை சிவராஜ்குமார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
சென்னையில் வெள்ளியின் விலை ஒரே நாளில் 4% உயர்ந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. நேற்று, கிராம் ₹100 என்று விற்கப்பட்ட வெள்ளி, இன்று ₹104ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக வெள்ளி விலை ₹100 என்று விற்கப்பட்டுவந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதன் விலை கடும் உயர்வைக் கண்டிருக்கிறது. தங்கம் விலை ஒரு நாளுக்கு 1% உயர்ந்தாலே மக்கள் அதிர்ச்சியடையும் நிலையில் வெள்ளி விலை சாதாரணமாக 4% உயர்ந்திருக்கிறது.
Sorry, no posts matched your criteria.