India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிராவில் EVM இயந்திரங்களில் முறைகேடு செய்தே, பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டி உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். EVM இயந்திர மாதிரிகளை பாடைகளில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, பின்பு அதனை தீ வைத்துக் கொளுத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர். MHவில் வாக்கு எண்ணிக்கையின் போது சில இடங்களில் வாக்காளர்களை விட அதிகப்படியான வாக்கு பதிவாகியிருந்தது.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் KIIT சர்வதேச ஓபன் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 9 வயதான இந்தியாவின் ஆர்த்தி கபில், 66 வயது கிராண்ட் மாஸ்டரான அமெரிக்காவின் ராசெட்டை எதிர்கொண்டார். சிறுவன் தானே என்ன செய்து விடப் போகிறார் என்ற பாணியில் விளையாடிய ராசெட்டை, ஆர்த்தி கபில் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தான், குழந்தை உயிரிழந்ததாகக் கூறி குழந்தையின் தந்தை, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர் இருக்க வேண்டும். ஆனால், ஞாயிறு இரவில் டாக்டர்கள் இல்லாததால், செவிலியரே பிரசவம் பார்த்ததாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். பிஞ்சு மரணத்துக்கு யார் காரணம்?
அமெரிக்காவில் நடைபெறும் 82வது கோல்டன் குளோப் விருது விழாவில் ’All We Imagine As Light’ என்ற மலையாளப் படம் 2 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. ஆங்கிலம் அல்லாத மொழி மற்றும் சிறந்த இயக்குனர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதுகுறித்து பேசிய இயக்குநர் பாயல் கபாடியா, “ இது எனக்கு மிகப் பெரிய கவுரவம். இந்த படத்தை இவ்வளவு பெரிய வெற்றிபெறச் செய்த அனைவருக்கு நன்றி” என்றார்.
ரகுவரனை ரொம்ப மிஸ் செய்வதாக நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். திருமண பந்தத்தில் இருந்த போது எடுத்த கொண்ட புகைப்படம் ஒன்றை X தளத்தில் பதிவிட்டுள்ளார். இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்து அவருடன் இருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். 1996ஆம் ஆண்டு திருமணம் பந்தத்தில் இணைந்த இவர்கள் 2004லில் பிரிந்தனர். ரகுவரன் இல்லை என்றாலும் அவரின் நினைவுகளுடன் ரோகிணி வாழ்ந்து வருகிறார்.
கோவில்பட்டியில் வீட்டின் மொட்டை மாடியில் சடலமாக கிடந்த சிறுவனின் வாய், ஆசனவாய் பகுதியில் காயங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 10 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மொட்டை மாடியில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகியுள்ளன. சிறுவனின் உடல் தூத்துக்குடி GHஇல் உள்ள நிலையில், 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி INDIA கூட்டணி MPக்கள் தொடர் முழக்கம் எழுப்பியதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதோடு, அவை முடங்கி வருவதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முன்னதாக அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் பேட்மேன் என்பவர், 20 பெண்களை கடத்தி, ஏமாற்றி ஆன்மிகம் திருமணம் செய்துள்ளார். FLDS (Fundamentalist Church of Jesus Christ of Latter-day Saints) என்ற குழுவைச் சேர்ந்தவர் திருமணம் செய்த பெண்களில் 11 – 14 வயதுடைய சிறுமிகளும் உள்ளனர். காணாமல் போன வழக்கை விசாரித்த போது, போலீசார் இதனைக் கண்டுபிடித்தனர். இவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையிலிருந்து PMK சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஜி.கே.மணி, அதானி விவகாரத்தில் CM ஸ்டாலின், அளித்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கூறினார். முன்னதாக அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும், அதானியை தான் சந்திக்கவே இல்லை என்றும் பேரவையில் CM கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து இலங்கை தமிழக எல்லையை கடக்கக்கூடும். இதன் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென MET தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.