India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயது வித்தியாசமின்றி மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில், மார்பு வலி மாரடைப்பு என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதயத் தசைகளுக்குப் போதிய ரத்தம் கிடைக்காத போது, மார்பில் வலி ஏற்படும். இதை Angina Pectoris என டாக்டர்கள் கூறுகிறார்கள். இது நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடு அதிகரிக்கும் விஷயங்களால் ஏற்படும் வலியாகும். இதற்கு 5-10 நிமிடங்கள் ஓய்வெடுத்தாலே போதும் என அறிவுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கடன் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக சிஏஜி ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக உள்ளதாகவும், கடந்த 2017-க்கு முன்பாக இருந்த கடனை விட, இது 6 மடங்கு அதிகம் எனவும் சிஏஜி தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் செலவீனம் மட்டும் 55.20% முதல் 63.55% வரை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட் ஓ பிரின்ஸை, பல ஆண்டுகளாக மோனல் பெலிக்ஸ் என்ற ரவுடி தனது கட்டுக்குள் வைத்துள்ளான். சில தினங்களாக பெலிக்ஸின் மகனுக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பில்லி சூனியமே காரணம் என நம்பிய பெலிக்ஸ், அப்பகுதியைச் சேர்ந்த 200 மந்திரவாதிகளை தனது ஆட்களை விட்டு இரண்டே நாளில் கொடூரமாக கொலை செய்துள்ளான். இதனை ஹைதி அரசாங்கம் உறுதி செய்த போதிலும், அவனை நெருங்க தயங்குகிறது.
சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த OPS, பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. கடந்த காலங்களில் EPS-க்கு அருகில் OPS அமர்ந்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவரின் இருக்கை அவையின் பின்பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதை தவிர்ப்பதாக தெரிகிறது. கருணாநிதியும் (2011-16) இருக்கை விவகாரம் காரணமாக அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதை தவிர்த்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் “கலைஞர் கைவினைத் திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் ➤ ₹3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி ➤₹50,000 வரை மானியம், ➤ 5% வரை வட்டி மானியம் ➤திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கு msmeonline.tn.gov.inஇல் விண்ணப்பிக்கவும். முழுத் தகவலுக்கு <
1963ல் உலகின் ஆபத்தான மிருகம் நியூயார்க் நகரில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டது. என்னவாக இருக்கும் என அதனைக் காண, கூட்டம் அலைமோதியது. உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. கூண்டில் ஒரு கண்ணாடி மட்டுமே இருந்தது. அதில் தெரியும் பிம்பம்தான் ஆபத்தான மிருகம். மனிதனை விட ஆபத்தான மிருகம் உண்டா? என்ற வாக்கியத்தை குறிக்கும் வகையில் இது வைக்கப்பட்டிருந்தது.
உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 121% உயர்ந்துள்ளது. இது தொடர்பாக ஸ்விஸ் பேங்க் வெளியிட்டுள்ள தகவல்படி, 2015ஆம் ஆண்டு உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு 6 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில், அது தற்போது 14 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதனிடையே பெரும் பணக்காரர்களில் 43% பேர், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது தெரியவந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக EPS, OPS-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை ஒதுக்கக்கூடாது என சூர்யமூர்த்தி என்பவர் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 3 பேரும் சின்னம் குறித்து டிச.19க்குள் பதிலளிக்க EC நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
CCTNS 2.0 என்ற ‘க்ரைம் டிராக்கிங் நெட்வொர்க்’ முறையை தமிழக காவல்துறை ஓரிரு வாரங்களில் செயல்படுத்தவுள்ளது. இதன் மூலம் மொபைல், லேப்டாப், பைக், கார் போன்ற பொருட்கள் திருடு போனால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்க தேவையில்லை. ஆன்லைனிலேயே புகார் அளிப்பதோடு, CASE STATUSயும் FOLLOW செய்யலாம். டிஜிபி, ஏடிஜிபிக்கள், இப்புகார்களை தினமும் பரிசீலிப்பதால் உடனடி நடவடிக்கை இருக்கும் என நம்பப்படுகிறது.
CUET-UG 5 தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு UGC தலைவர் ஜெகதீஷ் குமார் ஒரு நற்செய்தியை
அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “2025ஆம் ஆண்டு முதல் CUET-UG தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். 63 பாடங்களில் தேர்வு நடத்தப்படும். அதில் எந்த பாடத்திற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று கூறினார். இத்தேர்வானது, நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்கள் & பிற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.