News November 1, 2024

டாப் 5-க்குள் வந்த Jaddu பாய்..!

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் ஜாகிர் கான், இஷாந்த் ஷர்மாவை ஜடேஜா பின்னுக்குத் தள்ளினார். இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 314 விக்கெட்டுகளுடன் 5ஆவது இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார். 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ளே முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 533, கபில்தேவ் 434, ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News November 1, 2024

111 வயது தொண்டர் உயிரிழந்தார்

image

பாஜகவின் மிக வயதான தொண்டரான உ.பி.,யை சேர்ந்த புலாய் பாய் என்றழைக்கப்பட்ட ஸ்ரீ நாராயணன்(111) வயது மூப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பாஜக தலைவர்களும் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1974-ல் ஜனசங்கத்தின் MLAவாக தேர்வானார். 1980-ல் பாஜக தொடக்கம் முதல் உறுப்பினராக இருந்துவந்தார். இருமுறை MLA ஆக இருந்தார். கொரோனாவின் போது மோடி இவரை நலம் விசாரிக்க பிரபலம் ஆனார்.

News November 1, 2024

நிதிஷ், பாஜகவுக்கு நெருக்கடி: பீகாரில் இன்னொரு புதிய கட்சி

image

கடந்த மாதம் பிரசாந்த் கிஷோர் ‘ஜன் சுரான்’ என்ற புதிய கட்சி தொடங்கினார். நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் RCP சிங், ‘ஆப் சப்கி ஆவாஸ்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இவர் நிதிஷ் குமாரின் ஐ.ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷின் முக்கிய வாக்கு வங்கியாக திகழும் குர்மி சமூகத்தை சேர்ந்த இவரால், நிதிஷ் மற்றும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News November 1, 2024

நவ.15இல் ‘குபேரா’ டீசர்

image

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் டீசர் வரும் 15இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பணத்தால் ஒருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை ஒன்லைனாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் நாகார்ஜுனா, ரஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். DSP இசையமைக்கிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

News November 1, 2024

முதல் நாள் முடிவில் 86/4; தாக்குப் பிடிக்குமா இந்தியா?

image

மும்பையில் நடைபெறும் நியூசி.,க்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோஹித் 18, ஜெய்ஸ்வால் 30, சிராஜ் 0, கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 31, பண்ட் 1 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக நியூசி., 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் நாள் முடிவில், இந்தியா 149 ரன்கள் பின்தங்கியுள்ளது.

News November 1, 2024

‘அமரன்’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

image

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் நேற்று வெளியான ‘அமரன்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் உலகம் முழுவதும் சேர்த்து ₹42.3 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. SK படங்களில் முதல் நாளில் அதிகம் வசூலித்த படம் இதுதான் எனக் கூறப்படுகிறது. படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கிடைத்துள்ளதால், வரும் நாள்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 1, 2024

கமலா ஹாரிஸ் வெல்ல தமிழக கிராமத்தில் பிரார்த்தனை

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மன்னார்குடி அருகே உள்ள அக்கிராமத்தில், கமலாவை வாழ்த்தி ‘நம் மண்ணின் தவப்புதல்வி’ என பேனர் வைத்துள்ளனர். கமலாவின் தாயார் ஷியாமளா மற்றும் தாத்தா கோபாலன் பிறந்த ஊர்தான் துளசேந்திரபுரம். கமலா இங்கு வாழ்ந்ததில்லை என்றாலும், தாத்தாவை சென்றதுண்டு.

News November 1, 2024

விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது?: SP

image

விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது, ராகுல் காந்தி வந்தபோதும் அதிக கூட்டம் கூடியது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் பேச்சு INDIA கூட்டணியில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும், விஜய்யின் வருகை தங்கள் கூட்டணியின் வெற்றிக்கு உதவியாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தரும் முடிவை பொறுத்து அதிகாரப் பகிர்வு குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

News November 1, 2024

முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு

image

லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இனி, ₹20க்கு பத்திரம் வாங்க முடியாது. அந்த பத்திரம் ₹200ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பல்வேறு இனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பெரிய அளவிலான ஒப்பந்தங்கள், பத்திரப்பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டது.

News November 1, 2024

4ஆவதாக தக்கவைத்தது சரிதான்: ரோஹித்

image

MI-யில் பும்ரா, ஹர்திக், சூர்யகுமாருக்கு அடுத்ததாக 4ஆவதாக தன்னை தக்கவைத்தது சரியானதுதான் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். IND அணிக்காக விளையாடும் வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், சர்வதேச T20 போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டதால், Retention பட்டியலில் தனக்கு சரியான இடம் கொடுக்கப்பட்டதாகவே கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். ரோஹித் ₹16.30 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!