News December 11, 2024

பிரதீப்புக்கு ஜோடியாக நடிக்கும் மமிதா பைஜூ!

image

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி, லவ் டுடே படங்களின் மூலம் பிரபலமான பிரதீப், பிரேமலு மூலம் தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்திய மமிதா பைஜூ இருவரின் கெமிஸ்ட்ரியை திரையில் காண ஆர்வமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.

News December 11, 2024

நாளை இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

image

நாளை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கோவை, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News December 11, 2024

மதுரை VCK கொடி பிரச்னையில் 21 பேர் மீது வழக்கு

image

மதுரை வெளிச்சநத்தத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக விசிகவினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, 25 அடி உயரக் கொடி கம்பத்தை, மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி 45 அடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 7ம் தேதி அதனை அகற்றச் சென்ற அதிகாரிகளை விசிகவினர் தாக்கியதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் VAO பரமசிவம் அளித்த புகாரின் பேரில் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

News December 11, 2024

வடிவேலுக்கு எதிராக பேசமாட்டேன்: சிங்கமுத்து

image

வடிவேலுக்கு எதிராக அவதூறு விளைவிக்கும் வகையில் எதுவும் பேச மாட்டேன் என்று சிங்கமுத்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிங்கமுத்து தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறு பேசுவதாகவும் அதற்கு ₹5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வடிவேலு வழக்கு தொடுத்திருந்தார். இதன் விசாரணையின்போது, இனி வாய் மொழியாகவோ, டிஜிட்டல் முறையிலோ வடிவேலு குறித்து பேச மாட்டேன் என்று சிங்கமுத்து உறுதியளித்துள்ளார்.

News December 11, 2024

ஜன.13ல் ராமநாதபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

திரு உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.13ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜன.25 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு பொங்கல் விடுமுறை ஒருநாள் கூடுதலாக கிடைக்க உள்ளது.

News December 11, 2024

பைக் டாக்ஸிக்கு கட்டுப்பாடு ஏன்?

image

பைக் டாக்ஸியில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மினிஸ்டர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் பைக் டாக்ஸிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குறிப்பிட்ட அவர், Yellow, White Board நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களுக்கு வித்தியாசம் உள்ளது என்றார். மேலும், பைக் டாக்ஸியில் பயணம் செய்பவர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

News December 11, 2024

TN அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமம்: கனிமொழி

image

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டுமென மக்களவையில் திமுக MP கனிமொழி வலியுறுத்தினார். தமிழக அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி TN பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். பல்லினப் பெருக்க, கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சுரங்கம் அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

News December 11, 2024

இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

News December 11, 2024

மியூச்சுவல் ஃபண்டு முதலீடு 14% சரிவு

image

கடந்த நவம்பரில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு 14% குறைந்துள்ளதாக AMFI தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மூலம் ₹35,943 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபரில் ₹41,887 கோடியாக இருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல், புவிசார் அரசியல் பதற்றம் ஆகிய காரணங்களால் மிகப்பெரிய தொகையை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் இருந்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

News December 11, 2024

பும்ரா இல்லை என்றால் இந்தியா காலி: முகமது கைஃப்

image

பும்ராவுக்கு காயம் ஏற்பட்டால் BGT தொடரை வெல்லும் இந்திய அணியின் கனவு தவிடு பொடியாக விடும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். மேலும் ஒரு பவுலரை மட்டுமே அணி சார்ந்து இருப்பதை இதுவரை பார்த்து இல்லை என்ற அவர், 3வது டெஸ்டில் கேப்டன் ரோஹித் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார். 2வது டெஸ்ட்டில் பந்துவீசி கொண்டிருந்த பும்ரா தீடீரென காயம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் விளையாடினார்.

error: Content is protected !!