India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மது அருந்துவோருக்கு ஒரு அதிர்ச்சி கலந்த எச்சரிக்கையை டாக்டர்கள் கொடுத்துள்ளனர். 2 மணிநேரத்தில் 6 பெக் மதுவை நீங்கள் அருந்துபவர் என்றால், உங்களை பெரும் குடிகாரர் என டாக்டர்கள் வகைப்படுத்துகிறார்கள். அதுவே, 2 மணிநேரத்தில் 10-12 பெக் அடிப்பவர் என்றால் மிக தீவிரமான குடிகாரர் என்கிறார்கள். இவர்களுக்கு கணையம், கல்லீரல், இதயம், மனரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் எச்சரிக்கின்றனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையின்போது, மெரினாவில் மின்கசிவு ஏற்பட்டதாக, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல்குமார் வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த சம்பவம், வியட்நாமில் நடந்தது என TN Fact Check குழு விளக்கமளித்தது. இந்நிலையில், வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா லீட் ரோலில் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் வெளியான 6 நாள்களில் ₹1000 கோடியை வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. ஷாருக்கான், சல்மான் கான், பிரபாஸ் ஆகியோர் கூட செய்யாத சாதனையை அல்லு அர்ஜுன் படைத்துள்ளதாக, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஓர் ஆய்வகத்திலிருந்து ஆபத்தான வைரஸ்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. ஹென்ட்ரா, லைசா, ஹண்ட்டா ஆகிய உயிர்க்கொல்லி வைரஸ்கள் அடங்கிய 323 சாம்பிள்கள் மிஸ் ஆகியுள்ளன. அதுவும் 2023ம் ஆண்டே அவை காணாமல் போய்விட்டன. ஆனால், இன்றுதான் அதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து மிஸ்ஸான வைரஸ்தான், உலகையே அச்சுறுத்திய கொரோனா என்பது குறிப்பிடத்தக்கது.
RS தலைவர் ஜெக்தீப் தன்கர் பாரபட்சமாக செயல்படுவதால்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாக CONG தலைவர் கார்கே கூறியுள்ளார். அனுபவம் வாய்ந்த தலைவர்களை பேச அனுமதிக்காததோடு, அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட ஜெக்தீப் தன்கரே காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, ஜெக்தீப் தன்கரை பதவி நீக்க, RS-இல் எதிர்க்கட்சி எம்பிக்கள் 60 பேர் நம்பிக்கையில்லா நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
‘சூது கவ்வும் 2’ நாளை மறுநாள் (டிச.13) ரிலீசாக உள்ள நிலையில், Book My Show தளத்தில் தற்போது வரை 2,000 பேர் அப்படத்தை காண ஆவலாக உள்ளனர். முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், 2ஆம் பாகம் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியலுடன் டார்க் காமெடி கலந்த கலவையாக இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் தற்போது மிர்ச்சி சிவா நடித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வந்தது எப்படி என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, ஐகோர்ட் வளாகத்திற்குள் வைத்துதான் கைமாற்றப்பட்டதாக காவல்துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்தது.
மேற்குவங்கம் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்ற மசூதி கட்டப்படும் என TMC எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், WB உள்ள 34% முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழவும், முஸ்லிம்களின் தார்மீக உரிமையை நிலைநாட்டவும் மசூதி கட்டப்பட வேண்டியது அவசியம் என்றார். மசூதிக்காக ரூ.1 கோடியை தான் வழங்கவுள்ளதாகவும், டிசம்பர் 6, 2025க்குள் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாக JKNC கட்சி அறிவித்துள்ளது. VHP மாநாட்டில் கலந்துகொண்ட சேகர் குமார், வகுப்புவாதத்தை தூண்டும் வகையில், பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசியதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மூத்த வழக்கறிஞர்கள் புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.