News November 2, 2024

ஸ்பெயின் வெள்ள பலி: 200-ஐ தாண்டியது

image

ஸ்பெயினில் கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது. வாலன்சியா பிராந்தியத்தில் கனமழை காரணமாக அண்மையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதில் வாலன்சியாவில் மட்டும் 202 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையும் சேர்த்து அந்நாட்டில் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 205ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரை காணவில்லை. இதனால் பலி உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

News November 2, 2024

நவ.2: வரலாற்றில் இன்று……

image

*1795 – பிரான்ஸில் 5 பேர் கொண்ட புரட்சி அரசு நிறுவப்பட்டது.
*1834 – முதன்முதலாக தமிழ்நாட்டில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியஸ் அழைத்துச் செல்லப்பட்டனர்.
*1936 – தொலைக்காட்சி சேவையை BBC ஆரம்பித்தது.
* 1965: ஹிந்தி நடிகர் ஷாருக்கான் பிறந்த நாள்.
*2007 – சிங்கள அரசால் சுப. தமிழ்ச்செல்வன் படுகொலை.

News November 2, 2024

லூசிஃபர் 2 மார்ச்சில் ரிலீஸ்

image

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம், லூசிஃபர். அந்த படத்தின் 2ஆவது பாகம் லூசிஃபர் 2: எம்புரான் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்திருந்த விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் இந்த படத்திலும் நடித்துள்ளனர். படத்தை பிருத்விராஜ் இயக்கியுள்ளார். அந்தப் படம் 2025 மார்ச் மாதம் 27ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

சென்னைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

image

தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் செல்ல ஏதுவாக 3 நாள்களாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு சென்றோர், சென்னைக்கு மீண்டும் திரும்பி வர இன்று முதல் 4ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று மட்டும் வழக்கமான 2,092 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 685 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

News November 2, 2024

லெனினின் பொன்மொழிகள்

image

* எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால், வெற்றிபெற முடியாது
* அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது
* உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அதே அரசியலால் ஆளப்படுவாய்
* பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு
* அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய்க்கூட உண்மையாகிவிடுகிறது
* பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.

News November 2, 2024

இந்தியாவுக்கு பதில் மாலத்தீவு வழியே BNG ஏற்றுமதி

image

உலகின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி நாடாக திகழும் வங்கதேசம் (BNG) இதுவரை இந்தியா வழியே தனது ஜவுளி பொருள்களை ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் புதிதாக அமைந்துள்ள இடைக்கால அரசு, இந்தியா வழியாக அல்லாமல் மாலத்தீவு வழியே ஜவுளி ஏற்றுமதி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு கிடைத்த வருவாய் பாதிக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

News November 2, 2024

EC மீது சட்ட நடவடிக்கை.. காங்கிரஸ் அறிவிப்பு

image

ஹரியானா தேர்தல் விவகாரத்தில் EC-க்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஹரியானா தேர்தலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தெரிவித்த புகாரை நிராகரித்த EC, சில கருத்தை முன்வைத்தது. இதையடுத்து, EC-க்கு காங்கிரஸ் பதில் கடிதம் எழுதியுள்ளது. அதில், EC-இன் பதிலில் காங்கிரஸ் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதை ஏற்க முடியாதெனவும் கூறப்பட்டுள்ளது.

News November 2, 2024

கடலில் இன்று 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி: MET

image

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளி 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும், ஆதலால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

News November 2, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: விருந்தோம்பல்
▶குறள் எண்: 88
▶குறள் : பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்
▶ விளக்க உரை: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர். SHARE IT.

News November 2, 2024

காலை 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை

image

இன்று காலை 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்கள் எவை எவை எனப் பார்க்கலாம். மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, தி.மலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, கோவை மாவட்டங்கள் ஆகும்.

error: Content is protected !!