News November 2, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 2, 2024

விளையாட்டு துளிகள்

image

➤சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த இளம் வீரர் என்ற சாதனையை அனிஷ் (3) படைத்தார். ➤ஹைலோ பேட்மிண்டன் தொடர்: ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் FI வீரர் கல்லேவை IND வீரர் ஆயுஷ் ஷெட்டி வீழ்த்தினார். ➤புரோ கபடி தொடர்: 29வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பேந்தர்ஸ் அணியை யூ மும்பா அணி வென்றது. ➤ஹாங்காங் சிக்சஸ் லீக் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாக். அணியிடம் தோல்வியடைந்தது.

News November 2, 2024

தீபிகா படுகோன் குழந்தை பெயர் இதுதான்!

image

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு துவா படுகோனே சிங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங்கை 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா படுகோன் கர்ப்பமானார். செப். 9ஆம் தேதி அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

News November 2, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென நேரிட்ட தீ விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ➤ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ராணுவ ஒத்துழைப்பு வழங்கப்படாது என்று எகிப்து ராணுவம் அறிவித்துள்ளது. ➤ஈராக்கின் புதிய சபாநாயகராக அல்-மஷ்ஹதானி (76) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ➤ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி ஹ்வாசாங்-19 என்ற நவீன ICBM ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

News November 2, 2024

இனி பொறுமையே கிடையாது: பொங்கிய டாஸ்மாக்!

image

BILLING முறை வந்தும் கூட, டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.10, 20 வைத்து விற்கும் வழக்கம் தொடரவே செய்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, மதுபாட்டிலுக்கு கூடுதலாக இனி ரூ.10 வசூலித்தால் கூட, சம்பந்தப்பட்ட பணியாளர் மட்டுமல்லாமல், அக்கடையில் உள்ள மேற்பார்வையாளர் உட்பட அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

News November 2, 2024

பிரம்மகத்தி தோஷத்தை போக்கும் பிரம்மநாதர்

image

சிவனின் அஷ்ட வீர & சப்தஸ்தான தலங்களில், ஒன்றாக விளங்கும் புண்ணிய ஷேத்திரம் தஞ்சை திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயிலாகும். ஐமுகம் கொண்ட பிரம்மன் ஒரு சிரத்தைத் தம் சூலத்தால் கொய்து, அவர்தம் ஆணவத்தை சிவன் அழித்த தலம் இது என சிவாகமம் கூறுகிறது. இக்கோயிலுக்குச் சென்று, பிரம்மநாதர் – மங்கள நாயகி க்கு அபிஷேகம் செய்து, வில்வ இலை சாற்றி வணங்கினால் பிரம்மகத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

News November 2, 2024

வாட்ஸ் அப் பயனர்கள் கவனத்திற்கு..

image

வாட்ஸ் அப்பில் ஹேக் செய்து மர்ம நபர்கள் மோசடி செய்கின்றனர். இதைத் தடுக்க இருக்கும் வழியை தெரிந்து கொள்வோம். வாட்ஸ் அப் அக்கவுண்டுக்கு சென்று, அதில் அக்கவுண்ட் என இருப்பதை அழுத்த வேண்டும். பின்னர் TWO STEP VERIFICATION என்பதை தேர்வு செய்து, 6 இலக்க பின்னை அமைக்க வேண்டும். தொடர்ந்து மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும். அதுபோல் செய்தால், வாட்ஸ் அப்பில் யாராலும் ஹேக் செய்ய முடியாது. SHARE IT

News November 2, 2024

இதை செய்தால் உடல் எடை குறைய வாய்ப்பு

image

உடல் எடையை குறைப்பதற்காக தினமும் எவ்வளவு நடை நடக்க வேண்டும் என்பது குறித்து உடல்நல ஆலோசகர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதை தெரிந்து கொள்வோம். தினமும் 10,000 நடை நடக்க வேண்டும் (அ) 20-30 நிமிடங்கள் நடக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையை 12,000 முதல் 15,000 ஆக அதிகரித்தால் உடல் எடை மேலும் குறையும், உடலும் பிட்டாக இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

News November 2, 2024

நோய்களின் 5 அறிகுறிகளை காட்டும் வாய்ப்பகுதி

image

மனிதர்களிடம் உள்ள நோய்களை அவர்களின் வாய்ப்பகுதியில் உள்ள 5 அறிகுறிகள் மூலமே தெரிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகள் எவை எவை?
1) ஈரலில் இருந்து ரத்தக்கசிவு
2) வாய் துர்நாற்றம்
3) நாக்கின் மேல்பகுதி வெள்ளை நிறம் படர்ந்திருக்கும்
4) உதடுப்பகுதி வறண்டு போய் காட்சியளிக்கும்
5) எச்சிலின்றி வாய் வறண்டு இருக்கும்.

News November 2, 2024

வங்கிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை

image

நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை வருகிறது. அது என்றென்று தற்போது பார்க்கலாம்.
1) நவம்பர் 3: ஞாயிறு வார விடுமுறை
2) நவம்பர் 9: மாதத்தின் 2ஆவது சனிக்கிழமை
3) நவம்பர் 10: ஞாயிறு வார விடுமுறை
4) நவம்பர் 17: ஞாயிறு வார விடுமுறை
5) நவம்பர் 24: ஞாயிறு வார விடுமுறை.
இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!