News November 2, 2024

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கும் சீமை சாமந்தி

image

கர்ப்பப்பை வாயில் உண்டாகும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் சீமை சாமந்திக்கு இருப்பதாக நவீன ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மெட்ரிசின், பிசோப்ரோலால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் பூவின் பொடியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடித்துவந்தால், ப்ரீமென்ஸுரல் சின்ரோம் பாதிப்பின் அறிகுறிகளான சோர்வு, எரிச்சல் & மனச்சோர்வு ஆகியவை நீங்கும் என்று சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.

News November 2, 2024

சனி பகவான் அள்ளிக் கொடுக்க போகும் 3 ராசிகள்!

image

கும்பத்தில் பயணிக்கும் சனி பகவான், 2025 மார்ச்சில் தனது இடத்தை மாற்றுகிறார். இதை முன்னிட்டு, இந்த ஆண்டு முடியும் வரை 3 ராசிகளுக்கு பலனை அள்ளிக் கொடுக்க போகிறார். 1) ரிஷபம்: வீடு, வாகனம் வாங்குவீர்கள். சொத்து சிக்கல்கள் தீரும். 2) துலாம்: திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் கிடைக்கும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி. 3) கும்பம்: பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

News November 2, 2024

அன்பு தம்பி டூ கூமுட்டை வரை: சீமானின் திடீர் ‘சேஞ்ச்’

image

விஜய்யை அன்புத் தம்பி என கொஞ்சி வந்த சீமான், நேற்று தனது டோனை மாற்றியது பலரை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது. தவெக மாநாட்டில் வீசிய திராவிட நெடியும், தமிழ்த்தேசியம் பற்றி விஜய் ஒரு வார்த்தை கூட பேசாததுமே இந்த மாற்றத்துக்கு காரணமாம். இத்தனைக்கு பிறகும் விஜய்யை ஆதரித்தால், நாதக தம்பிகளே தவெக பக்கம் சென்றுவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவேதான், விஜய்யை வலுவாக எதிர்க்க முடிவு செய்துள்ளார் சீமான்.

News November 2, 2024

Recipe: கேரளா பருப்பு பாயசம் செய்யலாம் வாங்க!

image

வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை கிளறி, தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் கடலைப்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு கடலைப்பருப்பு மூழ்குமளவுக்கு தேங்காய் பால் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் அதனுடன் வெல்லப்பாகு, சுக்கு பொடி சேர்த்து கிளறவும். இத்துடன் வறுத்து வைத்த கலவையை சேர்த்து, இறக்கினால் கேரளா பருப்பு பாயாசம் ரெடி.

News November 2, 2024

சஷ்டி விரதத்தை எப்படி மேற்கொள்ளலாம்?

image

ஐப்பசி வளர்பிறையில் வரும் சஷ்டியை முன்னிட்டு தமிழ்க்கடவுள் வேல்முருகனுக்கு விரதமிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்று தொடங்கி 8ஆம் தேதி வரை 7 நாட்கள் இந்த விரதம் மேற்கொள்ளப்படும். தினமும் நீராடி, திருநீறு பூசி, விரதமிருந்து, மாலை சிவகுமாரனின் கோயிலுக்கு சென்று, நெய் தீபமேற்றி வணங்கி 7 நாளும் பால் – பழம் மட்டுமே உண்டு நோன்பை நிறைவு செய்யலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

News November 2, 2024

கூகுள் Searchக்கு போட்டியாக ChatGPT Search

image

கூகுள் Search Engine-க்கு போட்டியாக ChatGPT Search என்ற பெயரில் OpenAI புதிய தேடல் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது Generative AI தொழில்நுட்பத்தின் மற்றொரு பரிமாணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் Searchக்கு ஏற்ற லிங்க்குகள் மற்றும் செய்தி இணைப்புகள் இதில் கிடைக்கும். இதனை தற்போது சந்தா கட்டணம் செலுத்தியே பயன்படுத்த முடியும். விரைவில் இலவச பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

News November 2, 2024

நிதானமாக ஆடும் இந்தியா

image

மும்பையில் நடைபெறும் நியூசி.,க்கு எதிரான 3-வது டெஸ்டில், தற்போது வரை இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. நேற்றைய ஆட்டநேர முடிவில் ஸ்கோர் 86/4 ஆக இருந்த நிலையில் பண்ட், கில் இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 60 ரன் எடுத்த நிலையில் பண்ட் அவுட்டாக, தற்போது கில், ஜடேஜா ஆடிவருகின்றனர். முன்னதாக நியூசி., தன் முதல் இன்னிங்ஸில் 235 ரன்னில் ஆட்டமிழந்தது.

News November 2, 2024

ஒரே மேடையில் விஜய் – திருமாவளவன்..! வேற லெவல்

image

ஒரே மேடையை தவெக தலைவர் விஜய்யும், திருமாவளவனும் பகிர்ந்து கொள்ள போகும் செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டிச.6-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யும், திருமாவளவனும் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். முன்னதாக, தவெக மாநாட்டில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறியதை விசிக கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹120 சரிவு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து, ₹58,960க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ₹7,370க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில், 2 நாள்களில் சவரனுக்கு ₹680 வரை குறைந்துள்ளதால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். எனினும், வரும் காலங்களில் தங்கம் விலை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

News November 2, 2024

முக்கிய சினிமா பிரபலம் காலமானார்!

image

இந்தியாவின் பிரபல பேஷன் டிசைனர் ரோஹித் பால் (63) டெல்லியில் மாரடைப்பால் காலமானார். ஸ்ரீநகரைச் சேர்ந்த அவர் 1986 முதல் ஆடை வடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தார். பேஷன் டிசைனிங்கிற்காக FDCI என்ற அமைப்பையே நிறுவினார். பாலிவுட்டில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் பேஷன் டிசைனராக இவர் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு சர்வதேச அளவில் பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!