News December 13, 2024

அதை மட்டும் விட்றாதீங்க: ராம்கி உருக்கம் ❤️❤️

image

லக்கி பாஸ்கரில் நடித்து வேறலெவல் கம்-பேக் கொடுத்திருக்கிறார் ராம்கி. அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், 22 வயசுல ஹீரோ ஆயிட்டேன். அப்படி நடக்கலைனா, நிலைமை மோசமாயிருக்கும். ஏன்னா நான் படிக்கல. நிறைய பேரு சொல்லுவாங்க, படிக்காதவங்க ஜெயிச்சிட்டாங்கனு. ஆனா அது லட்சத்துல சில பேருதான். ஆனா படிச்சு ஜெயிச்சவங்க கோடி பேரு. ஒரு அண்ணனா சொல்றேன். படிக்குற நேரத்துல படிச்சிருங்க. நிச்சயம் ஜெயிப்பீங்க என்றார்.

News December 13, 2024

‘தங்க ரத்தம்’ பற்றி தெரியுமா?

image

உலகில் பல ரத்த வகைகள் இருக்கலாம். ஆனால் Rh-null என்ற வகைதான் மிக மிக அரிதான ரத்த வகையாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் 50க்கும் குறைவானவர்களே இந்த வகை தனித்துவமான ரத்தத்தை கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே இது ‘தங்க ரத்தம்’ என வர்ணிக்கப்படுகிறது. இந்த வகை ரத்தத்தை யாருக்கு வேண்டுமானாலும் செலுத்தலாம் என்பதால், மிகவும் மதிப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News December 13, 2024

இந்து கோயில்கள் vs மசூதி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

image

மசூதி அமைந்துள்ள இடங்களில் இந்து கோயில்கள் இருந்தனவா என்று ஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீது விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. வழிபாட்டுத்தலங்கள் சட்டம் தொடர்பான மனுவை விசாரித்து வருவதால், பிற நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க SC தலைமை நீதிபதி தடை விதித்துள்ளார். எனவே, குறிப்பிட்ட காலத்திற்கு இதுபோன்ற மனுக்கள் எந்த நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய முடியாது.

News December 13, 2024

குகேஷ் சிறந்த வழிகாட்டி: சச்சின்

image

64 சதுரங்களை கொண்ட செஸ் போட்டியில், இளம் தலைமுறையினர் முடிவில்லா சாத்தியங்களை செய்ய குகேஷ் ஊக்கமளித்துள்ளதாக சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 18 வயதில் 18ஆவது உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதாகவும், விஸ்வநாதன் ஆனந்தின் காலடித் தடங்களை பின்பற்றி, அடுத்த தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டியாக குகேஷ் இருப்பதாகவும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். இதேபோல், பல பிரபலங்களும் குகேஷை பாராட்டி வருகின்றனர்.

News December 12, 2024

ஒரே நாளில் 200 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு

image

கடந்த 24 மணி நேரத்தில், குர்ஸ்க் போர்க்களத்தில் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை உக்ரைன் ஆயுதப்படைகள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “2022 முதல் இதுவரை குர்ஸ்கில், 40,000க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் உக்ரைன் இழந்துள்ளது. நோவோவனோவ்கா கிராமத்தை ரஷ்யா மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News December 12, 2024

சூப்பர் ஸ்டாருக்கு லேடி சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

image

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், உலகிலேயே மிகவும் இனிமையான மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் தனியொருவர். எங்களை தினமும் இன்ஸ்பைர் செய்பவர். உங்களது பிறந்தநாள் எங்களை போன்ற கோடிக்கணக்கானோருக்கு கொண்டாட்டம். உங்களுக்கு தேவையான அனைத்தையும் கடவுள் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

News December 12, 2024

ஆண்களுக்கும் ஜீவனாம்சம் பெற உரிமையுண்டு

image

விவாகரத்து ஆனபின், மனைவிக்கு ஜீவனாம்ச உதவி பெற உரிமையுண்டு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், விவாகரத்து சட்டப்படி, நிபந்தனைக்கு உட்பட்டு கணவனுக்கும் ஜீவனாம்ச உரிமை உள்ளது தெரியுமா? உடல் ரீதியாகவோ, நிதி ரீதியாகவோ மனைவியை சார்ந்திருக்கும் நிலையில் உள்ள கணவன், விவாகரத்துக்கு பின் மனைவியிடம் ஜீவனாம்சம் கோர சட்டத்தில் இடமுண்டு என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

News December 12, 2024

ஜீவனாம்ச வழக்கில் 8 விஷயங்களை கவனிக்கணும்: SC

image

ஜீவனாம்சத்தை நிர்ணயிக்க இந்த அம்சங்களை பின்பற்ற SC வழிகாட்டுதல்: 1)இருதரப்பினரின் சமூக, நிதி நிலைமை. 2)மனைவி & குழந்தைகளின் நியாயமான தேவைகள் 3)இருதரப்பினரின் கல்வித்தகுதி, பணிநிலைமை 4)தனிநபரின் வருமானம்(அ) சொத்து 5)திருமண வீட்டில் பெண்ணின் வாழ்க்கைத்தரம் 6)குடும்ப கடமைகளுக்காக வேலையை விட நேர்ந்த நிலை 7)வேலை இல்லாத இணையரின் வழக்குச் செலவு 8)கணவனின் பண வசதி, வருமானம், பராமரிப்பு கடமைகள் & கடன்கள்.

News December 12, 2024

ரஜினி பட நடிகை கர்ப்பமாக இல்லையாம்..!

image

தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திக்கு பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா மறுப்பு தெரிவித்துள்ளார். உடல் எடை கூடியதால் கர்ப்பமாக இருப்பது போல் தோற்றம் இருப்பதாகவும், இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் காட்டமாக கூறியுள்ளார். மேலும், 4 மாதங்களாக திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார்.

News December 12, 2024

இதைதான் திராவிட மாடல்னு சொல்றோம்: கனிமொழி பளிச்

image

நாடாளுமன்றத்தில் இன்று பேசிய கனிமொழி, திமுகவின் முழக்கமான திராவிட மாடல் பற்றி விளக்கம் தந்துள்ளார். அவர் பேசுகையில், வெப்ப அலையால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் வெப்ப அலையை மாநில பேரிடராக திமுக அரசு அறிவித்துள்ளது. எனவே, இதில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வரை அரசு வழங்குகிறது. இதைதான் திராவிட மாடல் அரசு என சொல்கிறோம்” எனக் கூறினார்.

error: Content is protected !!