News August 27, 2025

டிரம்ப் அழைப்பை நிராகரித்த PM மோடி

image

சமீபத்திய நாள்களில் PM மோடியை தொடர்பு கொள்ள டிரம்ப் 4 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால், மோடி அத்தனை அழைப்புகளையும் நிராகரித்ததாக ஜெர்மன் மீடியா ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்த நியாயமும் இல்லாமல், இந்திய பொருள்களுக்கு 50% வரி விதித்ததால் அந்த கோபத்தில் அவர் அப்படி செய்துள்ளார் என்றும், இதுவே இந்தியா சீனாவை நோக்கி திரும்ப முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

News August 27, 2025

கோவாவில் அக்.30 முதல் செஸ் உலகக்கோப்பை…

image

கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.30 முதல் நவ.27 வரை நடக்கும் செஸ் உலகக் கோப்பையில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கின்றனர். 8 ரவுண்டுகளாக, நாக் அவுட் முறையில் நடக்கும் இந்த தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை 20 லட்சம் டாலர்கள் ஆகும். முதல் 3 இடங்களுக்குள் வந்தால் 2026 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறலாம்.

News August 27, 2025

அதிமுக கூட்டணிக்கு ஆதரவு.. ஓபிஎஸ் அறிவிப்பு

image

2026 தேர்தலில் அதிமுக ஆட்சி தான் வரவேண்டும் என சேலத்தில் OPS பேசியுள்ளது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அமைதி காத்துவந்த OPS, பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என ஆதரவாளர்கள் நினைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள் என விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

News August 27, 2025

செல்ஃபி எடுப்பதில் இந்தியா ஆபத்தான நாடு

image

அமெரிக்காவின் The Barber சட்ட நிறுவனம், கடந்த 2014 – 2025 வரை செல்ஃபி எடுக்கும் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. செல்ஃபி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவித்த செய்திகள், கட்டுரைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1% என்ற அளவில் இந்தியா (214 மரணங்கள்) முதலிடத்தில் உள்ளது. 45 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்தில் உள்ளது.

News August 27, 2025

ராசி பலன்கள் (27.08.2025)

image

➤ மேஷம் – ஜெயம் ➤ ரிஷபம் – மறதி ➤ மிதுனம் – சுகம் ➤ கடகம் – உயர்வு ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – புகழ் ➤ விருச்சிகம் – ஆதரவு ➤ தனுசு – பெருமை ➤ மகரம் – சுபம் ➤ கும்பம் – செலவு ➤ மீனம் – போட்டி.

News August 26, 2025

இறுதிவரை போராடிய பி.வி.சிந்து

image

பாரிஸில் நடக்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து போராடி வென்றார். முதல் சுற்றில் பல்கேரியாவின் கலோயனாவை எதிர்கொண்டார். முதல் செட்டில் 17-19 என பின்தங்கி இருந்த சிந்து எதிராளியின் இரண்டு கேம் பாயிண்ட்களை முறியடித்து 23-21 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 21-6 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 39 நிமிடங்கள் நீடித்தது.

News August 26, 2025

நாளை நிலவை பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

image

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சதுர்த்தி திதியில் சந்திரனை பார்க்க கூடாது என்பது வட இந்தியாவில் ஐதீகமாக உள்ளது. அப்படி சந்திரனை பார்த்தால் பொய்யான சாபம், திருட்டு குற்றச்சாட்டால் கறைபடுவார் என விநாயக பெருமான், சந்திரனை சபித்ததாக நாரத ரிஷி, கிருஷ்ணரிடம் கூறியதாகவும் நம்பப்படுகிறது. இது அறிவியல் ரீதியாக உண்மை இல்லை என்றபோதிலும் பலரும் கடைபிடிக்கின்றனர்.

News August 26, 2025

BREAKING: தமிழகத்தில் கடன் வட்டி தள்ளுபடி

image

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டது. இதனை மாவட்ட கலெக்டர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தள்ளுபடி போக மீதித் தொகையை பயனாளர்கள் விரைந்து செலுத்துமாறு சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தவணையை செலுத்துவதற்கான அவகாசம் 2026 மார்ச் 31 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.

News August 26, 2025

நாம் தான் விமானத்தை கண்டுபிடித்தோம்: அமைச்சர்

image

ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலங்களுக்கு முன்பே, இந்தியாவிடம் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மகாபாரத காலகட்டத்தில் டிரோன்கள், ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நம்மிடம் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என பாஜக MP <<17510319>>அனுராக் தாக்கூர்<<>> கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

News August 26, 2025

AI-ஆல் சினிமாவிற்கு ஆபத்து: அனுராக் எச்சரிக்கை

image

AI-ஆல் உருவாகும் படங்கள் சினிமாவிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் எச்சரித்துள்ளார். AI திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றிவிடும் எனவும், இதனால் திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் ஏற்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், AI படங்களை விட்டு நடிகர்கள் வெளியேறவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!