News December 13, 2024

GMAIL பயனர்கள்: USA-வை விஞ்சியது இந்தியா

image

உலக வல்லரசான அமெரிக்காவை ஒருதுறையில் இந்தியா விஞ்சியுள்ளது. எதில் எனத் தெரிய வேண்டுமா? மாதாந்திர GMAIL பயனர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா விஞ்சி முதலிடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் ஜிமெயில் மின்னஞ்சலை சுமார் 300 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். அதில் 1 கோடி பேர், கட்டண திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் என்ன மின்னஞ்சல் பயன்படுத்துகிறீர்கள்? கீழே பதிவிடுங்கள்.

News December 13, 2024

காலை 7 மணி வரை 16 மாவட்டங்களில் கன மழை

image

காலை 7 மணி வரை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என MET தெரிவித்துள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

News December 13, 2024

ஆடுகளம் நாயகியின் அசத்தல் கிளிக்ஸ்

image

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்சி. இதையடுத்து, முனி, வந்தான் வென்றான் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தார். தற்போது அவர் ஹிந்தி படங்களிலும், விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதுபோல பரபரப்பான சூழலுக்கு இடையே தன்னை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து அவர் வெளியிட்டுள்ளார். மாடல் உடையில் கலக்கலாக அதில் டாப்சி காட்சியளிக்கிறார். அந்த படங்களை மேலே கிளிக் செய்து பாருங்கள்.

News December 13, 2024

அரசியலமைப்பு மீது இன்று சிறப்பு விவாதம்

image

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீது நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், அரசியலமைப்பு தொடர்பாக மக்களவையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விவாதம் நடைபெறும். இதனை பாஜக மூத்தத் தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கவுள்ளார்.

News December 13, 2024

குகேஷுக்கு மோடி வாழ்த்து

image

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில், இது குகேஷின் ஈடு இணையற்ற திறமை, கடின உழைப்பு, தளராத உறுதிக்கு கிடைத்த முடிவு இது எனக் கூறியுள்ளார். அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

வீட்டில் கொசுத் தொல்லையா? இதை செய்யுங்க போதும்

image

1) வேப்பிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பம்பூவை உலர்த்தி அதை சாம்பிராணி உடன் சேர்த்து அல்லது நெருப்புத்துண்டுகளுடன் சேர்த்து புகைப்போட்டால் கொசு வராது 2) அகிற்கட்டையை துண்டுகளாக்கி புகைபோட்டால் கொசு வராது. 3) எலுமிச்சை சாறில் கற்பூரம் (அ) கற்பூராதி தைலம் கலந்து வீடு முழுக்க ஸ்ப்ரே செய்யலாம் 4) வேப்பிலையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரில் வீட்டை சுத்தம் செய்தாலும் வாசனைக்கு கொசு வராது.

News December 13, 2024

இந்திய ராணுவத்திற்கு ரூ.20,000 கோடியில் தளவாடங்கள்

image

சீனா, பாகிஸ்தான் நாடுகள் தங்களது ராணுவத்தை வலுப்படுத்தி வருவதால், இந்தியாவும் ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதற்கு ஏதுவாக, ரூ.20,000 கோடி செலவில் ராணுவத்திற்கு 100 கே.9 வஜ்ரா ஹெளவிட்சர் பீரங்கிகள், விமானப்படைக்கு 12 சுகோய் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் கட்டமைக்கவுள்ளது. இந்த 2 திட்டங்களுக்கும் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

News December 13, 2024

வீட்டில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவது எப்படி? இதை படிங்க

image

கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்போது தமிழகம் முழுவதும் இந்துக்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது வழக்கமாகும். இந்த விளக்குகளை எப்படி ஏற்ற வேண்டும் என பார்க்கலாம். பொதுவாக, ஒவ்வொரு நிலைப்படியிலும் இரண்டிரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டின் முன்வாசலில் குத்துவிளக்கு கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். இதுபோல விளக்கு ஏற்றினால், இறை அருள் வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.

News December 13, 2024

முக்தி தரும் திருவண்ணாமலை மகா தீப தரிசனம்

image

சிவன் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என ஆன்மிகம் கூறுகிறது. அத்தகைய புகழ்பெற்ற திருவண்ணாமலையில் மலையே லிங்கமாக காட்சியளிக்கிறது. இதன் உச்சியில் இன்று மாலை மகாதீபம் கொப்பரையில் ஏற்றப்படும். இதை தரிசனம் செய்தால், நமது வாழ்வில் பல செல்வங்கள் நிலைக்கவும், வம்சம் தழைக்கவும் செய்யும் என ஆன்மிகம் சொல்கிறது. இதை காண WAY2NEWS-உடன் இணைந்திருங்கள்.

News December 13, 2024

காலை 4 மணி வரை 13 மாவட்டங்களில் கனமழை

image

13 மாவட்டங்களில் காலை 4 மணிவரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை கொட்டும் என கூறியுள்ளது. விழுப்புரம், தி.மலை, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.

error: Content is protected !!