India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன் கடந்த ஜூலை மாதம் கட்டண உயர்வை அமல்படுத்தின. இதையடுத்து, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஜியோ மட்டும் 1 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல் 52 லட்சம், வோடாபோன் 48 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது. நீங்கள் என்ன சிம் வைத்துள்ளீர்கள்?
கனமழை எதிரொலியால் தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி, கல்லூரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7%ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி முன்பு கணித்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த வளர்ச்சி விகித கணிப்பை 6.5%ஆக ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. இதேபோல், 2026 நிதியாண்டுக்கான கணிப்பையும் 7.2%இல் இருந்து 7%ஆக ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. தனியார் முதலீடு குறைந்தது உள்ளிட்டவையே காரணமாகக் கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாண்டேவாடா, நாராயண்பூர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். கடந்த அக்டோபர் மாதத்தில் இங்கு 38 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
4 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக மாணவர்கள் நலன்கருதி நேற்று பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதையடுத்து, விழுப்புரம், தூத்துக்குடி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய அமைச்சகத்தில் டாக்டர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ முதுகலை பட்டம் பெற்ற, 55 வயதுக்கு மிகாத, 3 வருட அனுபவம் கொண்டோரிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு தங்குமிடம், விமான டிக்கெட், உணவுப்படியை வேலையளிப்போர் அளிப்பார்கள். வேலைக்கு <
பாட்னாவில் நடந்த அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த சித்தார்த், கட்டிட வேலைக்கு ஜேசிபியை நிறுத்தினாலும் கூட்டம் கூடும் எனக் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அல்லு அர்ஜூனுடன் பிரச்னையா என கேட்கப்பட்டது. இதற்கு அவர், அல்லுவுடன் எந்த பிரச்சினையும் இல்லை. ‘புஷ்பா 2’ பெரிய வெற்றி படம். அவருக்கு வாழ்த்துகள் என்றார்.
விமான நிலையங்களில் 5ஜி சேவையை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 5ஜி பயன்பாட்டால் விமான இயக்கம் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டதால் அரசு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது. இந்நிலையில், பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் விரைவில் விமான நிலையங்களில் 5ஜி அறிமுகமாகும். இதன்மூலம் விமான பயணிகள் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.
ரயில் பயணத்திற்கு கட்டணம் செலுத்துவது அவசியமாகும். ஆனால் ஒரேயொரு ரயிலில் மட்டும் இலவசமாக செல்ல முடியும். அது எந்த ரயில்? அந்த ரயில் எங்கு இயக்கப்படுகிறது? எனத் தெரிய வேண்டுமா? இமாச்சலப் பிரதேச மாநிலம் பக்ரா-பஞ்சாப்பின் நங்கல் இடையே இயக்கப்படும் ரயில்தான் அந்த ரயிலாகும். 1963இல் அணை கட்ட பொருள் கொண்டு செல்ல அந்த ரயில் முதன்முதலில் விடப்பட்டது. தற்போதும் 3 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.