India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புஷ்பா – 2 படம் பார்க்க வந்த பெண் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இப்படம் வெளியாவதற்கு முதல் நாளே ப்ரீமியர் ஷோ ஒளிபரப்பப்பட்டது. அதனைப் பார்க்க மகனுடன் வந்த ரேவதி என்ற பெண், நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது.
உலகில் நிகழும் நிகழ்வுகளின் அடிப்படையில், கூகுள் தனது டூடுலை அவ்வப்போது மாற்றிக்கொண்டே வரும். அப்படி தான் தற்போது கூகுள் செஸ் டூடுலை வைத்துள்ளது. இன்று முக்கிய செய்தியாக இருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை கவுரவிக்கும் வகையில் தனது டூடுலில் செஸ் விளையாட்டை மையப்படுத்தியுள்ளது. மேலும், குகேஷை பாராட்டும் வகையில் இந்த டூடுல் இடம் பெற்றிருப்பது, நமக்கு கூடுதல் சிறப்பு.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘பொங்கல் தொகுப்பு’ வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ₹199க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பு, ₹499க்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு, ₹999க்கு மாபெரும் பொங்கல் தொகுப்பு என்று விற்பனை செய்யப்படவுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிங்கப்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18ஆவது உலக செஸ் சாம்பியனாக குகேஷ் நேற்று மகுடம் சூடினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாலை 6.05 மணி முதல் 6.30க்குள் தீபம் ஏற்றிவிடுவது மிகவும் நல்லது. வீடுகளில் 27 விளக்குகள் ஏற்றுதல், 27 நட்சத்திரங்களை குறிக்கும். இதனால், பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 27 முடியாதவர்கள் 9 விளக்குகள் ஏற்றலாம். குறிப்பாக, தெற்கு திசை நோக்கி விளக்குகளை ஏற்றக்கூடாது. உங்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ரோஹித் ஷர்மா, மீண்டும் ஓப்பனராக களமிறங்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மிடில் ஆர்டருக்கு கே.எல்.ராகுல் தள்ளப்படுவார். இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு சீனியர் வீரர்களால் இடம் பறிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் ராகுலுக்கு மீண்டும் இடம் மறுக்கப்படுகிறதா? என கேள்விகள் எழுகின்றன. ரோஹித்தின் முடிவு சரிதானா?
ஊடகங்கள் மீதான தனது தாக்குதலுக்கு மோகன் பாபு எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது பற்றிய எக்ஸ் தளப்பதிவில், எனது குடும்பத்தின் சம்பவம் இவ்வளவு பெரிய விஷயமாக மாறி, பத்திரிகையாளர்களை கஷ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன். சம்பவத்திற்குப் பிறகு 48 மணிநேரம் ஆஸ்பத்திரியில் இருந்ததால், உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. சம்பவத்தில் ஊடகவியலாளர் காயமடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார்.
பொது வெளியில் ஏதாவது ஒரு கருத்தை கூறிவிட்டு, பிறகு அதனை மாற்றி பேசுவது பிரபலங்களின் வழக்கமாகிவிட்டது. சில நாட்கள் முன்பு, படத்தின் பிரமோஷனில் அல்லு அர்ஜுன் பற்றிய சித்தார்த்தின் “JCB கமெண்ட்ஸ்” வைரலானது. இக்கருத்துகள் அவரின் “மிஸ் யூ” படத்திற்கு சிக்கலை உண்டாகி விட்டது. ஹைதராபாத்தில் இதுவரை அப்படத்திற்கு வெறும் 50 டிக்கெட்டுகள் மட்டுமே புக் ஆகியுள்ளதாம். ஒரு சில இடங்களில் அதுவும் இல்லையாம்.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை, ‘ஊத்து’ பகுதியில் 54 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவுகளில் இதுவும் ஒன்று. மேலும், அம்பாசமுத்திரம், கோவில்பட்டி – 37 செ.மீ., மாஞ்சோலை – 32 செ.மீ., கடலூர் மாவட்டம் லால்பேட், தென்காசி மாவட்டம் ஆயிக்குடி, நெல்லை மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் 31 செ.மீ. பதிவாகியிருக்கிறது. மயிலாடுதுறையில் 26 செ.மீ. மழை கொட்டியிருக்கிறது.
RBI-க்கு 2ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக RBI-க்கு வந்த இமெயிலில் வங்கிகளை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மொழியில் அனுப்பப்பட்ட அந்த இமெயில் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் 2ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.