India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள அமரன் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளியன்று வெளியான படம் 2 நாளில் லியோ, ஜெயிலர் படங்களின் சாதனையை தகர்த்துள்ளது. மலேசியாவில் இதுவரை தமிழ் படம் ஒன்றிற்கு 2-ஆம் நாள் வந்திராத கூட்டத்தை அமரன் படம் ஈர்த்துள்ளது. கிட்டதட்ட 1.35 லட்சம் பேர் அமரன் படத்தை பார்க்க 2-ஆம் நாள் வந்துள்ளார்களாம். விஜய்யிடம் வாங்கிய துப்பாக்கி கனத்தை தாங்குகிறார் SK..!
மக்களுக்காக பணியாற்றிய அதிமுகவை விஜய் எப்படி விமர்சிக்க முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அதிமுக குறித்து விஜய் பேசாததை எண்ணி மற்றவர்கள் ஆதங்கப்பட தேவையில்லை என்றார். 30 ஆண்டுகள் சேவை செய்து, மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி அதிமுக எனக் கூறிய அவர், யாரை கேட்டாலும் சிறந்த கட்சியென பாராட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.
நியூசி.,க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என நியூசி., கைப்பற்றியது. வெற்றி பெற நினைத்த கடைசி டெஸ்டில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 147 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 121 ரன்களுக்கு சுருண்டது. பண்ட் (64) தனித்து போராடினாலும் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. *மாநில தன்னாட்சி உரிமை *நீட் தேர்வுக்கு எதிர்ப்பு *மாதந்தோறும் மின் கணக்கீடு முறை *மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு *மதுக்கடை மூடல் *மின்சாரம், பால் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு கண்டனம் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் Ration கடைகளில் காலியாகவுள்ள 3,200 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் 4 நாட்களில் (நவ.7) முடிவடைய உள்ளது. Salesman, Packer பணிகளில் எழுத்துத் தேர்வில்லாமல் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. வயது வரம்பு: 18-50. கல்வித்தகுதி: 10, +2 தேர்ச்சி. சம்பள விவரம் : ₹5,500 – ₹29,000. கூடுதல் தகவலுக்கு <
2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என EPS உறுதியளித்தார். அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளை விட்டுவிட்டு, உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியுள்ளதாகவும், உழைப்பவர்களுக்கு திமுகவில் மரியாதை இல்லை என்றும் சாடினார். மேலும், தமிழகத்தில் மன்னராட்சி ஒருபோதும் எடுபடாது என்றும் அவர் கூறினார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் மற்றும் கோலி இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். மொத்தமாக கடைசி 10 இன்னிங்சில் ரோகித் 133 ரன்களும், விராட் 192 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்கள். சொந்த மண்ணிலேயே இருவரும் சொதப்பி வரும் சூழலில், BGT தொடர் மீது ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. என்ன தான் ஆச்சு உங்களுக்கு கோலி, ரோகித்?
Ind A vs Aus-A இடையேயான போட்டியில் மாற்றப்பட்ட பந்தில் விளையாடுமாறு நடுவர் கூறியபோது, இஷான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, இது முட்டாள்தனமான முடிவு என வாதிட்டார். அதற்கு நடுவர் “உங்களால் பந்து சேதமடைந்தது. உங்களின் நடத்தை சரியல்ல” என இஷானை எச்சரித்தார். பந்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்தால் இஷான் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
‘அமரன்’ படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில், ‘அமரன்’ படக்குழுவை சீமான் உச்சி முகர்ந்து பாராட்டினார்.
தீபாவளி நாளில் பல மாநிலங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடித் தீர்த்த நிலையில், டெல்லியில் காற்று மாசு மோசமடைந்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து 2 நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு WHO நிர்ணயித்த வரம்பை விட 65 மடங்கு அதிகமாக உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. வெறும் 12 மணி நேரத்தில், அதாவது அதிகாலை 5 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் மாசு (AQI) 327 இருந்து 507 ஆக அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.