India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (டிச.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் சரிந்துள்ளது. கடந்த 6ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.23 பில்லியன் டாலர் குறைந்து 654 பில்லியன் டாலராக நிலை கொண்டது. இதுபோல், கடந்த 10 வாரங்களில் அது 9 முறை சரிவைச் சந்தித்துள்ளது. கடைசியாக செப்டம்பர் மாதம் 704 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
*முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று
*உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்
*சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் செயலுக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்
*சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே.
NIA-வில் காலியாகவுள்ள 164 இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. டெபுடேசன் அடிப்படையிலான இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், அசிஸ்டென்ட் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் பதவிகள் ஆகும். கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை <
ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்ய அளிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆதாரில் உள்ள முகவரி உள்ளிட்ட தகவல்களை இலவசமாக திருத்தம் செய்ய இன்று வரை UIDAI அவகாசம் அளித்திருந்தது. இது இன்று மாலையுடன் முடிவடைகிறது. இன்றைக்குள் தகவலை திருத்தினால், கட்டணம் கிடையாது. அதன்பிறகு திருத்தம் செய்ய ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்தத் தகவலை பகிருங்க.
இன்று (டிச.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
▶குறள் பால்: பொருட்பால்.
▶குறள் இயல்: குடியியல்.
▶அதிகாரம்: குடிசெயல்வகை.
▶குறள் எண்: 126
▶குறள்: குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்.
▶பொருள்: குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.
▶நாள்- டிச. 14 ▶கார்த்திகை – 29 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை ▶சுபமுகூர்த்தம்: இல்லை ▶நட்சத்திரம்: ரோகிணி▶சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
தேசிய கல்விக் கொள்கை 2020ஐ மையமாகக் கொண்ட ‘PM-SHRI’ திட்டத்தில், TN அரசு இதுவரை இணையவில்லை என மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி, “8ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்துவதை தடுக்க தேசிய மெரிட் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. அத்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளோம்” என்றார்.
மும்பை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரரான கார்ல் ஹாப்கின்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2019 ODI உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். மும்பை அணியில் 7 ஆண்டுகளாக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் பாம்மென்ட் நீக்கப்படுவதாகவும் அந்த அணி தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.