India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல மலையாள இயக்குநர் பாலசந்திர குமார் காலமானார். நடிகை ஒருவர் 2017ஆம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு ரேப் செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் கைதாகி பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். வழக்கில் திலீப்பின் நண்பரான பாலசந்திர குமார் சாட்சியாக இருந்தார். நடிகை ரேப் காட்சி பென்டிரைவ் திலீப்பிடம் இருப்பதாக அவர் கூறியிருந்தார். உடல்நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று காலமானார்.
இந்திய வீரர் குகேசுடன் மோத விருப்பமில்லை என்று உலகின் நம்பர் 1 ஒன் செஸ் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் அறிவித்துள்ளார். அண்மையில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் 18 வயதில் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். பிறகு பேசிய குகேஷ், கார்ல்சுடன் மோத விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த கார்ல்சன், தனக்கு அதில் விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.
அரசியல் சாசன புத்தகத்தை ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் சட்டைப் பாக்கெட்டுகளில் வைத்து வருகின்றனர். இதை சுட்டிக்காட்டி மக்களவையில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியாவில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட வரலாறு, மக்களிடையே மறைக்கப்பட்டு உள்ளதாக சாடினார். ராகுல் உள்ளிட்டோர் அப்புத்தகத்தை பாக்கெட்டுகளில் வைத்திருப்பதாகவும், ஆனால் பாஜகவினர் இதயத்தில் சுமப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று காலை 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி காலை 5.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், ஹாட் ஸ்டார் ஓடிடியிலும் நேரலையாக கண்டு ரசிக்கலாம். ஏற்கெனவே நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளன. அதனால் 3ஆவது போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 பட தியேட்டரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் ரசிகை பலியான விவகாரத்தில் கைதான அல்லு அர்ஜூன் இன்று காலை விடுதலை செய்யப்பட உள்ளார். அந்தப் படம் ரிலீசான முதல் நாளில் அதை காண ஹைதராபாத் தியேட்டருக்கு அவர் சென்றார். அப்போது நெரிசலில் ரசிகை பலியானார். இந்த வழக்கில் கைதான அவருக்கு ஜாமின் கிடைத்தபோதும் ஆவணங்கள் வரவில்லை. இதனால் சிறையில் வெள்ளிக்கிழமை இரவு இருந்தார்.
ஏடிஎம் இயந்திரத்தில் பிஎப் பணத்தை எடுக்கும் முறை வருகிற 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து, வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கும் முறை அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படலாம் எனவும், இதற்காக அரையாண்டு விடுமுறையில் மாற்றமிருக்காது எனவும் கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் திசநாயகே நாளை இந்தியாவுக்கு நாளை வரவுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு, அவர் முதல்முறையாக இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வருகிறார். டெல்லியில் அவர் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது மீனவர் பிரச்னை, எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் பேசுவார் எனக் கூறப்படுகிறது.
இன்று (டிச.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.