News December 14, 2024

இன்றே கடைசி நாள்: ₹1,12,400 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

ITBP படையின் தொலைத்தொடர்பு பிரிவில் காலியாக உள்ள 526 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. SI, HC, Constable பணிகளில் சேர விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: 10, 12, ITI, Diploma, B.Sc.,B.Tech, BCA. வயது வரம்பு: 18-25. சம்பளம்: ₹21,700 – ₹1,12,400 வரை. விண்ணப்பக் கட்டணம்: ₹200. கூடுதல் விவரங்களுக்கு recruitment.itbpolice.nic.in.

News December 14, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹1,000

image

ஜன.14 பொங்கல் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு TN அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறது. அதன்படி, கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ₹1,000 ரொக்கம் அடங்கிய தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக கார்டுதாரர்கள், செலவு உள்ளிட்ட கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

News December 14, 2024

20 லட்சம் பேருக்கு வேலை… கூகுளுடன் ஒப்பந்தம்!

image

20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க AI தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி தர கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்ற, தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து ஒப்பந்தங்களையும், முதலீடுகளாக மாற்றும் பணி 70% நிறைவு பெற்றுள்ளது” என்றார்.

News December 14, 2024

பயணத்தை முழுசா என்ஜாய் பண்ணனுமா?

image

புதிய இடங்களை சுற்றிப் பார்ப்பது, அந்த இடங்களின் கலாசாரத்தை அறிவது, க்ளைமேட்டை அனுபவிப்பது என்பதுதான் பெரும்பாலானவர்களின் சுற்றுலா பயணத்தின் நோக்கமாக இருக்கும். ஆனால், அதற்கென்று புறப்பட்டுவிட்ட பின்னர், உள்ளூர் வாழ்க்கையுடன் ஒன்றாமல் இருந்தால் எப்படி? ’அங்கு சாப்பாடு சரியாக கிடைக்கவில்லை, மொழி புரியவில்லை….” இப்படி சொல்வதைவிட, இப்பிரச்னைகளை களைய ஒரே வழி நீங்கள் உள்ளூர்காரராக மாறுவது தான்.

News December 14, 2024

இந்த 5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை!

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இரவில் வீடு திரும்புவோர், சீக்கிரம் செல்வது நல்லது.

News December 14, 2024

டெல்லியை கொலை நகரமாக மாற்றிய அமித்ஷா: கெஜ்ரிவால்

image

அமித்ஷாவின் கண்காணிப்பில் உள்ள தலைநகர் டெல்லி கற்பழிப்பு, போதைப்பொருள் போன்ற குற்றங்களின் தலைநகராக மாறியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி அமித்ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், 19 மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. நிலைமை மிக மோசமாக உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News December 14, 2024

திமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

image

திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாகவும், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதாலும், திமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

News December 14, 2024

கோல்டன் சாரியில் மனதை திருடும் பூங்குழலி

image

பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தியில் மலையாள சேச்சியாகவே வந்து ரசிகர்களை தன்வசப்படுத்தினார். மல்யுத்த வீராங்கனையாக இடைவேளையில் கொடுத்த மாஸ் நடிப்பு “யார்ரா இந்த பொண்ணு” என பேச வைத்தது. தற்போது சூரியின் அடுத்த படத்திலும் கமிட்டாகி இருக்கிறாராம். இன்ஸ்டாவிலும் கலக்கும் இவர், கோல்டன் நிற புடவையில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

News December 14, 2024

நாடு vs மத நம்பிக்கை.. எது முக்கியம்? திருமா

image

நமது நாட்டின் எதிர்காலத்தை நினைத்து வேதனையடைவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், அரசியல் ஜனநாயகத்தை வென்ற நாம், சமூக ஜனநாயகத்தை வெல்வது எப்போது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாட்டை விட மத நம்பிக்கை மேலானதா? அல்லது மத நம்பிக்கையை விட நாடு மேலானதா? என்ற கேள்விக்கு யார் பதில் கூறப்போகிறார்கள் எனவும் வினவியுள்ளார்.

News December 14, 2024

குகேஷை மனதார வாழ்த்திய மஸ்க்

image

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷை கூகுள் CEO சுந்தர் பிச்சை பாராட்டியிருந்த நிலையில், தற்போது எலான் மஸ்க்கும் பாராட்டியுள்ளார். தனது வெற்றி குறித்து குகேஷ் போட்ட X-பதிவில், வாழ்த்துகள் என மஸ்க் கமெண்ட் செய்துள்ளார். தனது 18ஆவது வயதில், உலகின் 18ஆவது சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றுள்ளார். இவரது வெற்றியால், 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு உலக சாம்பியன் பட்டம் கிடைத்துள்ளது.

error: Content is protected !!