India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து சிலரால் கட்டமைக்கப் படுவதாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், மியான்மர், வங்கதேசம், பாக்., ஆப்கன் நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையோ, ஏதேனும் பிரச்னையோ எழுந்தால், அவர்கள் பாதுகாப்பு கோரும் நாடு இந்தியாதான். ஜனநாயகத்தில் இந்தியாவுடன் யாராலும் போட்டியிட முடியாது என்றார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, TN அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை வரவு வைக்கப்பட உள்ளது. மழையால் தமிழகத்தில் பல குடும்பங்கள் பாதிப்படைந்திருக்கும் சூழலில் இந்தத் தொகை அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது பாடல் காட்சியில் பார்த்த பனி போர்த்தியிருக்கும் காஷ்மீரை இப்போது நேரில் போனால் பார்க்கலாம். காஷ்மீரில் வெப்பநிலை -9 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. பனிப்பொழிவில் Wonder Land ஆகக் காட்சியளிக்கும் காஷ்மீரின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உங்களுக்கு காஷ்மீரை காண ஆவலா?
அரசியலமைப்பில் முதலில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கியது இந்தியாதான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். மக்களவையில் அரசியலமைப்பு மீதான விவாதத்தில் பேசிய பிரதமர், அனைத்து முக்கிய திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியே கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மகளிருக்கு அதிகாரம் அளிக்காவிட்டால் நாடு முன்னேறாது என்றும், ஜனநாயகத்தின் தாய் இந்தியா எனவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத மழையை கடப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. அந்தவகையில், டிச.15 (நாளை) மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகையில் கனமழையும், டிச.16 ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழையும், டிச.17 கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் மிக கனமழையும், டிச.18 விழுப்புரம், கடலூரில் மிக கனமழை பெய்யலாம் என MET கணித்துள்ளது.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி நோக்கி ஊர்வலம் செல்ல முற்பட்ட அவர்களை, ஷம்பு எல்லையில் போலீசார் தடுத்துள்ளனர். அவர்கள் பயணிக்கும் டிராக்டர்களால் பல கி.மீ. தூரம் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பாலாவில் டிச.14-17 வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுவன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் <<14845831>>ஆட்டோ டிரைவர்<<>>கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை கண்டுபிடிக்கக் கோரி சிறுவனின் பெற்றோர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி, சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
“என் பேரண்ட்ஸ் என்ன ரொம்ப நேரம் போன் பாக்கவே விட மாட்றாங்க. என்ன செய்றது?” இப்படி 17 வயசு பையன் Character.ai சாட்பாட் கிட்ட ஆலோசனை கேக்க, “அவங்கள கொல்றது தான் வழி” என அது பதிலளித்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் Character.ai மீதும், அதை புரமோட் செய்த கூகுள் மீதும் கேஸ் போட்டுள்ளனர். ஏற்கெனவே தற்கொலை செய்ய சொன்ன AI, இப்போது கொலை செய்யவும் தூண்டுகிறது. எங்கு போய் முடியுமோ AI புரட்சி?
படிப்பு, வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மற்ற நாட்டினரை விட, இந்தியர்கள் தான் அதிகளவில் (1.80 கோடி) வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 54.09 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அடுத்ததாக UAE-ல் 35.68 லட்சம், மலேசியாவில் 29.14 லட்சம், கனடாவில் 28.75 லட்சம், சவுதியில் 24.63 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
டெஸ்ட்டில் இருந்து பும்ரா ஓய்வு பெறுவதே நல்லது என சோயப் அக்தர் அட்வைஸ் கொடுத்துள்ளார். தான் பும்ராவாக இருந்தால், அதையே செய்திருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டெஸ்ட்டில் பேட்ஸ்மேன்கள் விளாச முயற்சிக்காமல், தடுத்து ஆடவே முயற்சிப்பதால் பவுலிங் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால், அது காயத்தை ஏற்படுத்தும் என்பதால், T20, ஒருநாள் போட்டிகளில் பும்ரா கவனம் செலுத்தலாம் என அக்தர் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.