India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோயில் குளிர்காலத்தை முன்னிட்டு 6 மாதங்களுக்கு மூடப்பட்டது. கங்கோத்ரி நுழைவுவாயில் அடைக்கப்பட்ட ஒரு நாளைக்கு பிறகு கேதர்நாத் கோயில் (நவ.3) மூடப்பட்டது. நிறைவு விழாவில் 15,000 பக்தர்கள் கலந்துகொள்ள, இந்திய ராணுவத்தினர் சடங்கு இசையை வாசித்தனர். காலை 4 மணிக்கு தொடங்கிய சடங்குகளை அடுத்து கோயில் 8:30 மணிக்கு மூடப்பட்டது.
புதுசு, புதுசாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைப்பதாக CM ஸ்டாலின் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். திமுக வளர்வது சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் எதிர்க்கின்றனர் என்று கூறிய அவர், வாழ்க வசவாளர்கள் என அண்ணா கூறியதை நினைவில் வைத்து செயல்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், குறை சொல்பவர்கள் எல்லாம் அரசின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கும். அமெரிக்காவில் சுமார் 52 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர்களில், 26 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது. இவர்களில் 96% பேர் நிச்சயம் வாக்களிப்பார்களாம். முக்கிய மாகாணங்களில் இந்தியர்கள் அதிகம் வசிப்பதால், இவர்களின் வாக்குகளைபெற வேட்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
LCUஇல் 3ஆவது இசையமைப்பாளராக இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ வரிசையில் ‘பென்ஸ்’ திரைப்படம் உருவாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பது குறித்து பேசிய சாய், ஒவ்வொரு பாடல்களும் வித்தியாசமாக இருக்கும் எனவும், 8 பாடல்கள் வரை இருக்கலாம் என்றும் கூறினார்.
இன்று பங்குச்சந்தைகள் தொடங்கிய முதல் 15 நிமிடத்துக்குள் ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு சரிவை எதிர்கொண்டன. இதற்கு முக்கிய காரணங்கள்: 1) நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவது 2) நவ.7-ல் அமெரிக்க ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கியமுடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு 3) கச்சா எண்ணெய் விலை உயர்வு 4) முக்கிய நிறுவனங்களின் காலாண்டு லாபம் குறைந்தது.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெய்ன் தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். Podcast-ல் ஒன்றில் ஸ்டெய்ன் பேசும் போது, “எனக்கு எம்.எஸ்.தோனியை ரொம்ப பிடிக்கும். நான் CSK-ல் விளையாட சம்பளத்தை குறைக்கவும் தயாராக இருந்தேன். விளையாடவில்லை என்றாலும், மைதானத்தில் பெஞ்சில் அமர்ந்து தோனியின் செயல்பாடுகளை கவனிக்க விரும்பினேன்” என்றார்.
தமிழில் ஆதி, நந்தா, சிந்து மேனன் ஆகியோர் நடித்து 2009இல் திரைக்கு வந்த பேய் படம் ‘ஈரம்’. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. தமிழில் அறிவழகன் இயக்கியிருந்த நிலையில், ஹிந்தியில் மனோஜ் பரமஹம்சா இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பெண்களுக்கான பணிக்கு ஹிந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனக் கூறியுள்ளது. இந்நிலையில், இது அப்பட்டமான ஹிந்தி திணிப்பே அன்றி வேறென்ன என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை (நவ.5) அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் அவர் வென்றால், 290 ஆண்டுகள் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் வெள்ளை மாளிகை செல்லும் முதல் பெண் அதிபராவார் கமலா ஹாரிஸ். அத்துடன், தேர்தலில் வென்றால் முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையையும் கமலா பெறுவார்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 326 புள்ளிகள் சரிந்து, 23,981 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருவதால் சந்தை சரிவை கண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.