India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நடக்கும் ADMK பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் மெத்தனத்திற்குக் கண்டனம், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றம், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும், 2026இல் EPS மீண்டும் முதல்வராக்குவது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இல்லற வாழ்க்கையை தொடங்கும் முன்பே விபத்தில் இளம் ஜோடியின் உயிர் பிரிந்தது. கேரளாவைச் சேர்ந்த நிகில்(27), அனு(26) கடந்த 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு மலேசியாவுக்கு ஹனிமூனுக்கு சென்றனர். இன்று காலை அவர்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், பத்தனம்திட்டா அருகே அவர்கள் சென்ற கார், சபரிமலை பக்தர்களின் பேருந்து மீது மோதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில், இளம் ஜோடி உட்பட காரில் சென்ற 4 பேர் உயிரிழந்தனர்.
குழந்தை இறப்பது என்பது பெரிய கொடுமை. இருந்தபோதும் குழந்தையின் உடலை தானம் செய்து அவளை எப்போதும் வாழ செய்த நெகிழ்ச்சி சம்பவம் டேராடூனில் நடந்துள்ளது. பிறந்து 2.5 நாளே ஆன பெண் குழந்தை இருதய கோளாறால் உயிரிழந்தது. சரஸ்வதி எனப் பெயரிடப்பட்ட குழந்தையின் உடல் டேராடூன் மருத்துவ கல்லூரிக்கு தானமாக உத்தராகண்டைச் சேர்ந்த பெற்றோர் வழங்கியுள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை ₹1000 மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிகளில் செலுத்தப்படும் உரிமைத் தொகை, வழக்கமாக 14ஆம் தேதி மாலையே வரவு வைக்கப்படும். ஆனால், இந்த மாதம் வர வேண்டிய தொகை இன்னும் வராததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கான காரணம் எதையும் அரசு தெரியப்படுத்தவில்லை.
கர்நாடக டிராபிக் போலீஸ் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமனாரின் தொல்லை தாங்காமல், தற்கொலை செய்து கொண்டுள்ளார். திப்பண்ணா(34) எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தில், தனது மாமனார் தன்னை மிரட்டியதாகவும், தற்கொலை செய்து கொள் நீ இல்லாமல் என் மகள் நன்றாக இருப்பாள் எனக் கூறியது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டை உலுக்கிய அதுல் சுபாஷ் தற்கொலையை நடந்த சில தினங்களில், மீண்டும் ஒரு சம்பவமா?
யார்ரா அந்த பையன் என முதல் படத்திலேயே இண்டஸ்ட்ரியின் கவனத்தை ஈர்த்தார் ஜிவி பிரகாஷ். நடிப்பை விட்டுட்டு மியூசிக்கில் கவனம் செலுத்துங்கள் என சொல்லாத ஆளே கிடையாது. மீண்டும் சுதா கொங்கராவுடன் தான் இசையமைக்கும் 100வது படத்தை எட்டி விட்டார். இதில் கூடுதல் சிறப்பு இது SKவின் 25 படம். ஏற்கனவே இவர்களின் அமரன் கூட்டணி ரசிகர்களை கவர்ந்தது. மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்குமா ஜிவி.பிரகாஷ்?
சென்னை வானகரத்தில் நடைபெற்றுவரும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வெள்ள நிவாரணம், டங்ஸ்டன் ஆலை உரிமம் ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. மேலும், 2026 தேர்தல் வியூகம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 அக்டோபர் முதல் வாரம் தொடங்கி 70-வது நாளை நெருங்கியுள்ளது. கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக RJ ஆனந்தி, சாச்சனா என இருவரை எவிக்ட் செய்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், இந்த வாரத்திற்கான எவிக்ஷனில் நேற்று சத்யா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இன்று தர்ஷிகா வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, மணிமுத்தாறில் 10 செ.மீ., கொடைக்கானலில் 9 செ.மீ., ஊத்து, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் 8 செ.மீ., தூத்துக்குடி, நாலுமுக்கு, சேர்வலாறு அணை ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ, தூத்துக்குடியில் 6 செ.மீ., என மழை பெய்துள்ளது.
பாஸர் எல்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அம்பி’ என்ற படத்தில் ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்து வருகிறார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி வரும் இப்படத்தில் அஸ்வினி சந்திரசேகர், கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி2 மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.