India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘INDIA’ கூட்டணி தலைமையை காங்கிரஸ் நிரூபிக்க வேண்டும் என JK முதல்வர் உமர் அப்துல்லா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மம்தா பானர்ஜி தலைமையேற்கத் தயார் எனக் கூறினார். அதற்கு, சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தியா கூட்டணியில் சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது அதனைக் களைத்து, INC தலைமையை நிரூபிக்க வேண்டும் என உமர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 2018ஆம் ஆண்டு முதல் 684 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 530 பேர் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 82 பேர், சிறுபான்மையினர் 37 பேர், பட்டியலின வகுப்பினர் 21 பேர், பழங்குடியின வகுப்பினர் 14 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளதாக மக்களவையில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த 10 நாள்களில் ₹1,190 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் மட்டும் ₹800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தென்னிந்தியாவை விட வட இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் மொத்த வசூல் ₹2,000 கோடியை தாண்டுமா?
2026ஆம் ஆண்டு தேர்தலை அதிமுக கூட்டணியமைத்து போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “கூட்டணி நிச்சயம் அமையும். அதனை எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார்” என்றார். மேலும், அதிமுகவின் பலம் திமுகவுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருக்கும் 152 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்ட விஞ்ஞானிகள், திட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். ₹20 ஆயிரம் – ₹78 ஆயிரம் வரை சம்பளம். விண்ணப்பிக்க கடைசி நாள் 23/12/24. முழு விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை பார்க்கவும். https://www.niot.res.in/recruitment_details.php.
மறைந்த காங்கிரஸ் MLA ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக அஞ்சலி செலுத்தினார். நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்த EVKSஇன் உடல் மணப்பாக்கம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை மீண்டும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மாலை அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
ஃபார்முலா 4 கார் ரேஸ், கலைஞர் பேனா நினைவுச் சின்னம் உள்ளிட்டவற்றிற்காக திமுக அரசு, நிதியை வீணடிப்பதாக அதிமுக பொதுக்குழு – செயற்குழுவில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக அரசு கபட நாடகமாடுவதாகவும், சட்ட ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்புக்கு கண்டனம் உள்ளிட்ட 16 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சினிமாவில் ஹீரோயினாக கால்பதிக்க ஆர்வமாக இருந்த தவ்தி ஜிவால் ஜெயம் ரவியின் 34வது படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இவர் முன்னரே கவுதம் வாசுதேவ் மேனனின் எரிமலையின் மகளே என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் இவர் நடிக்கும் படத்தை டாடா இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்க, சக்தி வில்லனாக நடிக்கிறார். படத்தின் தொடக்க பூஜை நேற்று நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஹிட் பட நடிகையாவாரா?
நாட்டில் வரிகள் அதிகளவில் இருப்பதாக விமர்சனங்கள் இருக்கும் சூழலில் ₹11 கோடி பரிசாக வென்றுள்ள உலக செஸ் சாம்பியன் குகேஷ் எவ்வளவு வரி என பார்த்தால் சற்று நெஞ்சு வலிக்கிறது. வருமான வரி 87A கீழ் ₹3.28 கோடியும், கூடுதல் கட்டணமாக ₹1.21 கோடியும், சுகாதாரம், கல்வி cess வரியாக ₹17.98 லட்சம் என மொத்தமாக ₹4.67 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்படும். இதில், மொத்த பரிசில் 42% ஆகும். என்னங்க சார் உங்க சட்டம்?
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படவில்லை. குளிர்காலக் கூட்டத்தொடரின் டிச. 16ஆம் தேதிக்கான நிகழ்ச்சி நிரலில் இம்மசோதா இடம்பெற்றிருந்தது. ஆனால், திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இம்மசோதா இடம்பெறவில்லை. முன்னதாக, இம்மசோதாவிற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Sorry, no posts matched your criteria.