News December 15, 2024

பும்ராவின் பந்துகளை சமாளித்தது அதிர்ஷ்டம்: ஹெட்

image

இந்தியாவுக்கு எதிராக ரன் அடிப்பது மகிழ்ச்சியளிக்கிறதென AUS அணியின் வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். BGT 3வது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 152 ரன்கள் எடுத்த மகிழ்ச்சியில் பேசிய அவர், “பும்ராவின் சிறந்த பந்துகளை சமாளித்தது என் அதிர்ஷ்டம். அவர் சிறந்த பவுன்சர்களை வீசினார். விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துகளை வீசும் அவருக்கு எதிராக நேர்மறையான மனநிலையுடன் விளையாடினாலே போதும்” என்றார்.

News December 15, 2024

ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்: CV சண்முகம்

image

அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என அக்கட்சியின் எம்.பி., CV சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார். வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “நூறு கருணாநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவை அழித்துவிடலாம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். துரோகிகளால் ஏற்பட்ட பல இன்னல்களை முறியடித்த EPS அதிமுகவை மீண்டும் அரியணையில் அமர வைப்பார்” என்றார்.

News December 15, 2024

புதுடெல்லி தொகுதியில் களம் காணும் கெஜ்ரிவால்

image

பிப்ரவரியில் நடைபெறவுள்ள டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை AAP வெளியிட்டுள்ளது. 38 வேட்பாளர்கள் அடங்கிய இப்பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும், முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 20 சிட்டிங் MLA-க்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. மணீஷ் சிசோடியா உள்பட பலர் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News December 15, 2024

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

image

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை இந்தியா பந்தாடியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த PAK அணியை 67 ரன்களில் இந்திய பவுலர்கள் சுருட்டினர். அதிகபட்சமாக சோனம் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றி, PAK பேட்டிங் ஆர்டரை சிதைத்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 68 ரன்கள் என்ற எளிய இலக்கை 7.5 ஓவர்களில் கடந்தது. அதிகபட்சமாக கமலினி 44 ரன்களை விளாசினார்.

News December 15, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS

image

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு நற்செய்தி அளிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஆண்டுக்கு இரண்டுமுறை அகவிலைப்படி (Dearness Allowance) உயர்த்தப்படுவது வழக்கம். 2024 தீபாவளி பரிசாக DAவை 3% மத்திய அரசு உயர்த்தியது. தொடர்ந்து, 2025ல் மேலும் 3% DAவை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, DA 53%ல் இருந்து 56%ஆக உயர உள்ளது. 2025 மார்ச் மாதம் இந்த அகவிலைப்படி உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

News December 15, 2024

இயக்குநராகும் நடிகர் சூரி..!

image

நடிகர் சூரி விரைவில் படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது அப்பா முத்துச்சாமி மற்றும் அம்மா சேங்கையரசியின் வாழ்க்கையை படமாக இயக்க உள்ளதாக கூறியுள்ளார். இதை கூறும்போது சாதாரணமாக தெரியும், ஆனால், ஷேர் பண்ணுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 6 பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பெற்ற கஷ்டத்தை படமாக்க வேண்டும் என்பது சூரியின் நீண்டநாள் கனவு.

News December 15, 2024

2026 தேர்தல் கூட்டணி.. இபிஎஸ் கூறியது என்ன?

image

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களும், நிர்வாகிகளும் விரும்பும் கூட்டணி அமையும் என இபிஎஸ் கூறியுள்ளார். பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கூற உள்ளதாகத் தெரிவித்தார். கட்சிக்கு உண்மையான விசுவாசத்துடன் இருப்போருக்கு வரும் தேர்தலில் நிச்சயமாகச் சீட்டு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

News December 15, 2024

ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன தமிழக வீராங்கனை

image

தமிழக வீராங்கனை ஜி.கமலினி மகளிர் ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் டீம்க்கு ரூ.1.6 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார். 16 வயதான கமலினியை டீமில் எடுக்க டெல்லிக்கும் மும்பைக்கும் கடுமையான போட்டி நிலவியது. ரூ.10 லட்சம் பேஸ் ரேட்டில் இருந்து ரூ.1.6 கோடியாக ஏறியதற்கு அதுவே காரணம். U19 மகளிர் டி20 போட்டிகளில் 311 ரன்கள் எடுத்து தமிழ்நாட்டை வெற்றி பெறச் செய்தவர். நீ கலக்கு ராசாத்தி!

News December 15, 2024

மன்னராட்சி நடத்தும் திமுக: இபிஎஸ் விளாசல்

image

திமுகவில் CM ஆக வரவேண்டும் என்றால் கருணாநிதி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என இபிஎஸ் சாடியுள்ளார். உதயநிதியின் பெயரைக் கூறாமல் ஒருவருக்கு முடிசூட்டும் முயற்சி நடப்பதாகவும் விமர்சித்தார். மன்னராட்சி(DMK) மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், 2026 தேர்தலில் அதிமுக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறினார்.

News December 15, 2024

“₹2,000 வேண்டாம்; ₹6000 கொடுங்க” கூட்டணி கட்சிகள்

image

பாகுபாடு பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக கூட்டணியில் உள்ள தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் ₹6,000 நிவாரணம் வழங்கிய அரசு, மற்ற மாவட்டங்களில் ₹2,000 வழங்குவது ஏற்புடையதல்ல எனவும் சாடியுள்ளார். அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள VCK தலைவர் திருமாவும், வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு ₹5,000 வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!