India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தென் மாவட்டங்களை உலுக்கிய கனமழையால் நெல்லை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வி நிலையங்கள் செயல்படும் என்று கூறியிருக்கும் ஆட்சியர், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
இந்தியா-ஆஸி., அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி., அணி 445 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இரண்டாம் நாளில் ஆஸி., வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக ஸ்மித் 101, ஹெட் 152 ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஆஸி., 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உயர்கல்வி சேர்க்கையில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக AICTE பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதன் தலைவர் சீதாராம், தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை 52 சதவீதத்துடன் சிறப்பாக இருப்பதாக கூறினார். மேலும், 2035ஆம் ஆண்டுக்குள் தேசிய சராசரியை 50 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வாரத்தின் முதல் நாளான இன்று, எந்த ஒரு புதிய செயலையும் சிந்தித்து தொடங்குவது மிகவும் உகந்தது. சந்திர பகவானுக்கு உரிய நாளான திங்கட்கிழமையில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கலாம். அதே நேரத்தில், இரும்பு போன்ற உலோகங்களை வாங்க உகந்த நாள் அல்ல. வெளியூர் பயணங்கள் மேற்கொண்டால் அதன் மூலம் அனுகூலமான பலன்களைப் பெறலாம். இன்றைய சிவ வழிபாடு மிகுந்த நன்மையை கொடுக்கும் என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.
உலக செஸ் சாம்பியன், குகேஷ் இன்று காலை தமிழகம் திரும்புகிறார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சீன வீரர் டிங் லிரெனை எதிர்கொண்ட அவர், 6.5-7.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் என்ற பெருமைக்கும் குகேஷ் சொந்தக்காரரானார். இந்நிலையில், காலை 11 மணிக்கு சென்னை ஏர்போர்ட் வரும் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்கழி மாதம் பிறந்துவிட்டது. இந்த மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கடவுளை வழிபடும் மாதமாக மார்கழி கருதப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த மாதத்தில் எந்த விதமான மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. சைவ மற்றும் வைணவ ஆலயங்களில், சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனைகள் செய்யப்படும். மேலும் தற்போதும் கூட அதி காலையில் மார்கழி பஜனை நடத்தப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல நாளை, கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், நாளை மறுநாள் கடலூர், விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
திமுகவை வீழ்த்தி விடலாம் என, இபிஎஸ் பகல் கனவு காண்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேசியதை சுட்டிக்காட்டி Xஇல் பதிவிட்டுள்ள அவர், “வாழைப்பழ காமெடி” போல அறிக்கையிலும், மேடையிலும் பேசியதையே திரும்பத் திரும்ப பேசுவதாக கூறியுள்ளார். மேலும் ஆட்சி, அதிகாரத்திற்காக சசிகலா, ஓபிஎஸ் காலை வாரிவிட்டவர் தான் இபிஎஸ் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
*அன்னாசி பழம்: ரத்த சோகை குணமாகும்.
*விலாம்பழம்: பித்தப் பிரச்னை சரியாகும்.
*மாதுளம் பழம்: வறட்டு இருமலுக்கு தீர்வு.
*செவ்வாழை: மூல நோயை விரட்டும்.
*ஆரஞ்சு பழம்: தூக்கமின்மை விடுபட.
*கொய்யாப்பழம்: சொறி, சிரங்கு, ரத்த சோகையை குணப்படுத்தும்.
*மாம்பழம்: இதயநோய் பிரச்னைகள் சரியாகும்.
*அத்திப்பழம்: மார்கப் புற்றுநோய்க்கு தீர்வு
*பலாப்பழம்: தைராய்டு சரியாகும்.
2023 டிசம்பர் மாதமே தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக, நடிகை டாப்ஸி கூறியுள்ளார். இது தொடர்பான பேட்டியில், “எனது திருமணத்தை பகிரங்கமாக அறிவிக்காததால், மக்களுக்கு தெரியவில்லை. நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அந்தரங்கமாக வைத்திருக்க விரும்பினோம்” எனத் தெரிவித்துள்ளார். பேட்மிண்டன் வீரர் மத்யாஸ் போவை, டாப்ஸி 11 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.