News November 5, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்..

image

போலி ரேஷன் அட்டைகளை கண்டறியும் வகையில், KYC அப்டேட் செய்ய அறிவுறுத்தபட்டது. இதற்கான அவகாசம் அக்.31- உடன் முடிவடைந்தது. இதை செய்யாதவர்களின் ரேஷன் கார்டு ரத்தாகும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது இதற்கான அவகாசம் டிச. 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை ரேஷன் கடைகளில் சமர்ப்பிக்கலாம். அல்லது, https://tnpds.gov.in/-ல் சென்று அப்டேட் செய்யலாம்.

News November 5, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல்: முக்கிய தேதிகள்

image

*வாக்குப்பதிவு: இந்திய நேரப்படி வாக்குப்பதிவு இன்று (Nov.05) மாலை 4:30 தொடங்கி, நாளை அதிகாலை 4:30 வரை நடக்கும். *கருத்துக் கணிப்புகள்: நாளை (Nov.06) அதிகாலை முதல் வெளியாக தொடங்கும். *தேர்தல் முடிவு: நாளை மாலையே ஓரளவு தெரிந்துவிடும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்கள் கூடுதலாகும். *அறிவிப்பு: Dec 17 அதிபர், துணை அதிபர் முறைப்படி தேர்வு செய்யப்படுவர். *பதவியேற்பு: Jan 20: முறைப்படி அதிபர் பதவி ஏற்பார்.

News November 5, 2024

4 ஆண்டுகளில் 5 பேர் மட்டுமே; லாபம் ரூ.4,000 கோடிக்கு

image

பங்கு வர்த்தக சேவைகள் வழங்கும் Zerodha குழு ₹4,000 கோடிக்கு மேல் லாபம் சம்பாதித்தாலும், கடந்த 4 ஆண்டுகளில் 5 பேரை மட்டுமே வேலைக்கு எடுத்துள்ளது. நிறுவனத்தின் மொத்த டீம் 35 பேர் மட்டுமே. AI-யை பெரிதும் நம்பும் இந்நிறுவனம் ஆர்டர்கள், பரிவர்த்தனைகள் என பல பணிகளிலும் AI-ஐ பயன்படுத்துகிறது. இது எதிர்காலத்தில் Software Programmer-களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 5, 2024

சென்னை செஸ் சாம்பியன்ஷிப்: நேரில் பார்ப்பது எப்படி?

image

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று முதல் நவ.11 வரை சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்’24 நடைபெறுகிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழகத்தின் அரவிந்த்‌ சிதம்பரம்‌ உட்பட 8 வீரர்களும், சேலஞ்சர்ஸ்‌ பிரிவில் கார்த்திகேயன் முரளி உட்பட 8 இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்கிறார்கள். இப்போட்டியை காண நாள் ஒன்றிற்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செஸ்‌ அகாடமி மாணாக்கருக்கு அனுமதி இலவசம்.

News November 5, 2024

X-ray எடுத்தால் கேன்சர் வருமா?

image

X-ray என்பது மருத்துவத்துறையில் தவிர்க்க முடியாத பரிசோதனை முறையாக மாறியுள்ளது. என்றாலும், X-ray எடுத்தால் கேன்சர் வரும் என்ற பயமும் தொடர்கிறது. பாதுகாப்பான Medical X-rayஆக இருந்தாலும், அதில் இருந்தும் Ionizing Radiation ஊடுருவும் ஆற்றல் அதிகம் கொண்ட கதிர்வீச்சு வெளிப்படும். அதை அடிக்கடி எடுப்பது, DNA-வை சேதப்படுத்துவதுடன் 4% வரை புற்றுநோய்க்கான ரிஸ்க் இருப்பதாகவும் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

News November 5, 2024

தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

image

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நவ.25ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே தங்களது 2ம் கட்ட டெல்லி முற்றுகை போராட்டத்தை தொடங்கிய விவசாயிகளை ஹரியானா அரசு தடுத்து நிறுத்தியதால், 10 மாதங்களாக ஷம்புவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News November 5, 2024

அப்டியே கொடுத்தா 10 ரூபா: அக்குள்ள வச்சி கொடுத்தா 100

image

ஜப்பானிய பாரம்பரிய உணவான Onigiri என்ற சிறிய சோற்று உருண்டை தான் புது டிரெண்டிங். Onigiri-யை தயாரித்த பின், அதை அக்குளில் வைத்து உருண்டை பிடிப்பதே புது ஸ்டைல். அக்குள் வியர்வை உணவில் கலப்பதால், இதனால் உடல்நலப் பிரச்சனை வருமோ என்ற அச்சம் ஒருபுறம், வியர்வையில் உள்ள pheromones பக்கவிளைவு வருமோ என்ற அச்சம் மறுபக்கம். இருந்தும் இது 10 மடங்கு விலைக்கு விற்கப்படுகிறதாம். உங்களுக்கும் ஆசையா இருக்கா?

News November 5, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் 2ஆவது பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது? 2) IIT என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவின் முதல் பெண் அயல்நாட்டுத் தூதர் யார்? 4) இந்தியன் வங்கி எந்த ஆண்டில் நிறுவப்பட்டது? 5) நத்தைக்கு எத்தனை பற்கள் உள்ளன? 6) காற்றின் வேகத்தை அளவிட உதவும் கருவி எது? 7) இஸ்லாமிய கம்பன் என அழைக்கப்பட்ட புலவர் யார்? 8) Astrobiology என்றால் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 5, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைவு

image

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது ஒரு சவரன் ₹58,840க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ஒரு கிராம் ₹7,355க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து, ஒரு கிராம் ₹105க்கும், ஒரு கிலோ ₹1,05,000க்கும் விற்கப்படுகிறது.

News November 5, 2024

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் தென்கொரியா

image

The US Department of Defense சமீபத்தில் 10,000 வடகொரியா இராணுவத்தினர் ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்குவார்கள் என செய்தி வெளியிட்டது. அப்படி நடந்தால், ரஷ்யா அணுஆயுத உதவியை வடகொரியாவிற்கு அளிக்கும் என்ற பதற்றம் தென்கொரியாவிற்கு உள்ளது. அதனால், வடகொரியா களமிறங்கினால், நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத உதவியை மேற்கொள்வோம் என தெரிவித்திருக்கிறார் தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல்.

error: Content is protected !!