News November 5, 2024

முதலீடு செய்வதை எளிதாக்க SEBI நடவடிக்கை!

image

வெளிநாட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் யூனிட் டிரஸ்டுகளில், இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய SEBI அனுமதித்துள்ளது. அதற்கு அந்நிய நிறுவனங்களின் நிகர சொத்துகளில், 25%-க்கும் குறைவாக இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தால் மட்டுமே, அவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வெளிநாட்டு MF நிறுவனங்களில் முதலீடு செய்வதை எளிதாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News November 5, 2024

அமரன் படம்…வருந்திய விக்னேஷ் சிவன்

image

அனைவருமே ராணுவ வீரர்களுக்குப் பெரிய சம்பளம் இருக்கும் என்றே நினைத்திருப்போம். அச்சிந்தனையை மாற்றியுள்ளது அமரன். படத்தில் சொத்து வாங்கும் காட்சி ஒன்று இடம் பெற்று, ராணுவத்தினரின் கஷ்டத்தை வெளிக்காட்டியுள்ளது. இக்காட்சியை மேற்கோள் காட்டிய விக்னேஷ் சிவன், ராணுவ வீரர்களின் சம்பளம் 100 மடங்கு அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு முதல் ஆளாக பங்களிக்க காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

News November 5, 2024

ALERT: இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது

image

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (நவ.7) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் 2 நாள்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

News November 5, 2024

உங்க குழந்தையின் ஹீரோ யார்?

image

T-சர்ட்களில் பிடித்தமானவர்கள், பிரபலங்கள் படம் இருக்கும். ஆனால், Flipkart, Meesho தளங்களில் பெரிய கிரிமினலான லாரன்ஸ் பிஷ்னோய் படத்துடன் Gangster, Real Hero வாசகங்கள் கொண்ட T-சர்ட் விற்கப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் குழந்தைகள் T-சர்ட்டும் உண்டு. கேங்ஸ்டர் என்பதை பெருமையாகவும், கிரிமினல்களை ஹீரோவாகவும் கொண்டாடும் அளவுக்கு நம் சமூகம் தாழ்ந்துவிட்டதா.. இதற்கு சினிமா மட்டும் தான் காரணமா?

News November 5, 2024

பண்ட்டுக்கு ரூ.50 கோடியா, அதவிட அதிகமா கொடுக்கலாம்

image

நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில், ரிஷப் பண்ட்டை அணியில் எடுக்க பெரும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி, பண்ட்டிற்கு ரூ.50 கோடி கொடுத்தாலும் குறைவு தான். ஷாட் தேர்வில் பண்ட் சிறப்பானவர். நியூசி., தொடரில் எந்த இந்திய பேட்ஸ்மேனும் அவரைப்போல் விளையாடவில்லை. என் பார்வையில் அவர் தான் சாம்பியன் எனப் பாராட்டியுள்ளார்.

News November 5, 2024

ஆண்மைக் குறைவுக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் தொடர்பா?

image

பாலியல் சார்ந்தும், நகைப்புக்குரிய விஷயமாகவும் பார்க்கப்படும் ஆண்மைக்குறைவு உயிருக்கே உலை வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆண்மைக் குறைவு பாதிப்புக்குள்ளான ஓரிரு ஆண்டுகளுக்குள் 60% பேருக்கு Heart Attack ஏற்படலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆணுறுப்பில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு உண்டாகி ஏற்படும் விறைப்பின்மையை சரி செய்ய முறையான சிகிச்சை எடுக்க வேண்டுமென செக்ஸாலஜிஸ்ட்ஸ் அறிவுறுத்துகின்றனர்.

News November 5, 2024

அமெரிக்காலயும் அப்படி தானா!

image

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சுற்றிலும் கூரைகளில் தயார் நிலையில் ஸ்னைப்பர்கள், புல்லட் ப்ரூப் கண்ணாடிகள், கட்டங்களை சுற்றிலும் 24 மணிநேர டிரோன் கண்காணிப்பு, ரசாயன தாக்குதலை தடுக்க உபகரணங்கள் என போர்க்கள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கேயும் வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பில்லை போலும்.

News November 5, 2024

₹2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன: RBI

image

மக்களிடம் புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகள் 98.04% வங்கிக்கு திரும்பிவிட்டதாக RBI தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “மே 19, 2023 வரை ₹3.56 லட்சம் கோடி அளவிலான ₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது. அதில் சுமார் 2% அதாவது ₹6,970 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் மட்டுமே திரும்பவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளை திரும்ப அளிக்க அக். 7, 2023 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

News November 5, 2024

தேர்தல் முடிவு Tie ஆனால், என்ன ஆகும்?

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி உள்ளதால், தேர்தலில் ஒருவேளை கமலா ஹாரிஸ், டிரம்ப் இருவருக்கும் 269-269 என சமமான எலக்டோரல் வாக்குகள் கிடைத்தால், காங்கிரஸ் (நாடாளுமன்ற) உறுப்பினர்கள் வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுப்பர். செனட்டர்கள் சேர்ந்து துணை அதிபரை தேர்ந்தெடுப்பர். ஒருவேளை நாடாளுமன்றத்திலும் பலம் சமமாக இருந்தால், மாகாணத்துக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

News November 5, 2024

அமரன் படத்தில் எழுந்த ஜாதி பிரச்சனை…

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தில் முகுந்த் வரதராஜனின் ஜாதி மாற்றிச் சித்தரிக்கப்பட்டதாகத் தொடர் விமர்சனங்கள் எழுந்தது. இவற்றிற்குப் படத்தின் வெற்றி விழாவில் பதிலளித்த பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, முதல் சந்திப்பிலேயே முகுந்த் வரதராஜனின் தந்தையும், தாயும் தங்களின் மகனின் அடையாளம் இந்தியன், தமிழன் என்று மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!