India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ், ஜெய்ஸ்வால் இடம்பெறாதது குறித்து பல வெளிநாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்ததற்கு சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் வெளிநாட்டினர் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாகவும், இந்திய கிரிக்கெட் குறித்து எந்த அறிவும் இல்லாமல் வேண்டுமென்றே விவாதத்தை ஏற்படுத்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
USA-வின் புதிய வரி விதிப்பு நாளை(ஆக.27) முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி, ஜவுளி, இறால், பர்னிச்சர், வைரம், வேளாண் உற்பத்தி, ஸ்டீல், காப்பர், லெதர் 50% வரி விதிப்பின் கீழ் வருகிறது. இத்துறைகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால், மத்திய அரசு சிறப்பு சலுகைகளை வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், டிரம்ப் கடைசி நேரத்தில் வரி விதிப்பை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தனக்கு நடிப்பதில் விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி அதிகம் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவன துவக்க விழாவில் பேசிய அவர், பல ஹீரோக்கள் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திறமைசாலிகளுக்கு களம் அமைத்து கொடுக்க வேண்டும் எனவும், அது அம்மா போன்றதொரு உணர்வு என்றும் கூறியுள்ளார். மேலும், தான் தற்போது ஒரு படத்தை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நாள்களில் PM மோடியை தொடர்பு கொள்ள டிரம்ப் 4 முறை தொலைபேசியில் அழைத்துள்ளார். ஆனால், மோடி அத்தனை அழைப்புகளையும் நிராகரித்ததாக ஜெர்மன் மீடியா ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எந்த நியாயமும் இல்லாமல், இந்திய பொருள்களுக்கு 50% வரி விதித்ததால் அந்த கோபத்தில் அவர் அப்படி செய்துள்ளார் என்றும், இதுவே இந்தியா சீனாவை நோக்கி திரும்ப முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.30 முதல் நவ.27 வரை நடக்கும் செஸ் உலகக் கோப்பையில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கின்றனர். 8 ரவுண்டுகளாக, நாக் அவுட் முறையில் நடக்கும் இந்த தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை 20 லட்சம் டாலர்கள் ஆகும். முதல் 3 இடங்களுக்குள் வந்தால் 2026 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறலாம்.
2026 தேர்தலில் அதிமுக ஆட்சி தான் வரவேண்டும் என சேலத்தில் OPS பேசியுள்ளது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அமைதி காத்துவந்த OPS, பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என ஆதரவாளர்கள் நினைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்துபோவார்கள் என விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் The Barber சட்ட நிறுவனம், கடந்த 2014 – 2025 வரை செல்ஃபி எடுக்கும் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தியது. செல்ஃபி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவித்த செய்திகள், கட்டுரைகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் உலகளவில் பதிவான அனைத்து நிகழ்வுகளில் 42.1% என்ற அளவில் இந்தியா (214 மரணங்கள்) முதலிடத்தில் உள்ளது. 45 உயிரிழப்புகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்தில் உள்ளது.
➤ மேஷம் – ஜெயம் ➤ ரிஷபம் – மறதி ➤ மிதுனம் – சுகம் ➤ கடகம் – உயர்வு ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – புகழ் ➤ விருச்சிகம் – ஆதரவு ➤ தனுசு – பெருமை ➤ மகரம் – சுபம் ➤ கும்பம் – செலவு ➤ மீனம் – போட்டி.
பாரிஸில் நடக்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் பி.வி.சிந்து போராடி வென்றார். முதல் சுற்றில் பல்கேரியாவின் கலோயனாவை எதிர்கொண்டார். முதல் செட்டில் 17-19 என பின்தங்கி இருந்த சிந்து எதிராளியின் இரண்டு கேம் பாயிண்ட்களை முறியடித்து 23-21 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 21-6 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 39 நிமிடங்கள் நீடித்தது.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சதுர்த்தி திதியில் சந்திரனை பார்க்க கூடாது என்பது வட இந்தியாவில் ஐதீகமாக உள்ளது. அப்படி சந்திரனை பார்த்தால் பொய்யான சாபம், திருட்டு குற்றச்சாட்டால் கறைபடுவார் என விநாயக பெருமான், சந்திரனை சபித்ததாக நாரத ரிஷி, கிருஷ்ணரிடம் கூறியதாகவும் நம்பப்படுகிறது. இது அறிவியல் ரீதியாக உண்மை இல்லை என்றபோதிலும் பலரும் கடைபிடிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.