News December 16, 2024

BGT: மழையால் 3ஆம் நாள் ஆட்டம் ரத்து

image

இந்திய – ஆஸி., இடையேயான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸி., அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 4, கில் 1, கோலி 3, பண்ட் 9 ரன்களில் அவுட் ஆகினர். இந்தியா தற்போது 51/4 ரன்களுடன் 394 ரன்கள் பின்தங்கி உள்ளது.

News December 16, 2024

புயலால் 1000 பேர் பலி

image

இந்தியப் பெருங்கடலில் கோர தாண்டவம் ஆடிவரும் ’சீடோ’ புயலால் ’மாயோட்’ தீவில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரெஞ்சு நாட்டின் அங்கமான அத்தீவு, மடகாஸ்கர் தீவின் அருகே உள்ளது. அங்கு நிலை கொண்டிருக்கும் சீடோ புயலால் 200 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால், வறுமையின் பிடியில் இருக்கும் மயோட் தீவில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

News December 16, 2024

கணக்கில் வரவான ₹999 கோடி: தம்பதிக்கு வந்த அடுத்த ஷாக்

image

கூரையை பிச்சிட்டு கொட்டும் என்பது போல, பெங்களூருவில் டீ கடை நடத்தும் பிரபாகரனின் மனைவி வங்கி கணக்கில் ₹999 கோடி டெபாசிட் ஆனது. தம்பதிகளின் ஆச்சரியம் தீருவதற்குள், 48 மணி நேரத்தில் பணம் மீட்கப்பட்டு, கணக்கும் முடக்கப்பட்டது. வங்கியின் தவறால் தினசரி வருமானத்தில் வாழும் பிரபாகர் தற்போது பரிவர்த்தனையை பண்ண முடியாமல் தவிக்கிறார். முறையிட்டும் எப்பயனும் இல்லை. என்னவென்று சொல்வது வங்கியின் செயல்பாடுகளை?

News December 16, 2024

‘சொர்க்கவாசல்’ வரும் 27ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ்

image

‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வரும் 27ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. செல்வராகவன், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

News December 16, 2024

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது, அடுத்த 2 தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழ்நாடு நோக்கி நகரும் என்று MET அறிவித்துள்ளது. இதனால், அடுத்த 3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News December 16, 2024

ஆண்களுக்கான கருத்தடை: மருத்துவர்கள் சொல்வது என்ன?

image

ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை பற்றி அச்சப்பட தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள். காரணம், *சிகிச்சைக்கு பின் லேசான வலி(அ) வலியே இருக்காது. *3-4 நாட்களுக்குள் ஆபீஸ் வேலை, ஒரு வாரத்தில் உடலுறவு & உடற்பயிற்சி, 15 நாளில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் *இது விந்தணுக்களை மட்டுமே தடுக்கும். மற்றபடி இயல்பான செக்ஸ் செயல்பாடு அப்படியே இருக்கும். உச்சநிலையில் விந்து வெளியாவதும் இயல்பாக இருக்கும்.

News December 16, 2024

மாநிலக் கட்சிகளை அழிக்கத் துடிக்கும் பாஜக: CM ஸ்டாலின்

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமலுக்கு வந்தால் நாட்டின் பன்முகத்தன்மை சீர்குலைந்துவிடும் என CM ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பார்லிமென்ட்டில் பெரும்பான்மை இல்லாத போதிலும், மாநிலக் கட்சிகளை அழிக்கும் நோக்கில், பாஜக அரசு
கொண்டுவரத் துடிக்கும் இந்த ஆபத்தான திட்டத்தை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 16, 2024

தவறாக செய்தி அனுப்பிய AI: ஆப்பிளிடம் BBC புகார்

image

தங்கள் நிறுவனத்தின் பேரில் தவறான செய்தியை ஆப்பிளின் AI வெளியிட்டதாக BBC புகார் அளித்துள்ளது. யுனைடெட் ஹெல்த்கேர் CEO கொலை வழக்கின் விசாரணையில் இருப்பவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை ஆப்பிள் AI Notificationஆக அனுப்பியது. இச்செய்தியை தங்கள் வெளியிடவில்லை என்று மறுத்த BBC ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளது. இது வளர்ந்து வரும் AI டெக்னாலஜி மீதான நம்பகத்தன்மையை கேள்வி குறியாக்குகிறது?

News December 16, 2024

சீதாவாக வசியம் செய்த இந்த நடிகை யாரென தெரிகிறதா?

image

ஒரே படம் தான் தென்னிந்தியாவில் பல ரசிகர்களின் ஃபேவரிட்டாக மாறிவிட்டார். இந்திய அளவில் ட்ரெண்டான இவரை சீதாவாக கொண்டாடாத தமிழ் ரசிகரே இருக்க மாட்டார். இதில், குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர் இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்கவே இல்லை. ஒரே ஒரு டப்பிங் படம் தான் வந்தது. தமிழில் எப்போது இவரின் என்ட்ரி என்று தான் பலரும் வெய்ட்டிங். இன்னுமா யார் என தெரியவில்லை.

News December 16, 2024

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் இவரா?

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் EVKS இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈ.வெ.ரா 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததால், அத்தொகுதிக்கு நடந்த இடைதேர்தலில் சஞ்சய் சம்பத் போட்டியிட இளங்கோவன் விரும்பினார். ஆனால், அப்போது அதனை விரும்பாத காங். தலைமை இளங்கோவனை போட்டியிட வைத்தது.

error: Content is protected !!