India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது குறித்து இயக்குநர் அமீர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசைஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை. சனாதனம் தலைவிரித்தாடும் இந்நாட்டில் சமத்துவம் எப்போது மலரும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
சர்ச்சை பேச்சை ஒளிபரப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்காக விஜய் சேதுபதி மீது டைல்ஸ் நிறுவனம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி டிஎஸ்பியிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள், தாெழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர். அதில், ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து நடிகர் தீபக் தவறாக பேசியுள்ளதாகவும், இதை ஒளிபரப்பிய டிவி, தொகுப்பாளர் மீது வழக்குப்பதியுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிஎஸ்கேவின் ஆஸ்தான வீரரான டெவன் கான்வே- கிம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. டாடீஸ் ஆர்மியில் ஆபிசியலாக டெவன் இணைந்துள்ளதாக சிஎஸ்கே டீம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. குழந்தைக்கு ஒலிவியா கான்வே எனப் பெயரிட்டுள்ளனர். டேவன் – கிம் இணையருக்கு 2022-ல் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் நியூசி vs இங்கி 3வது டெஸ்ட் மேட்சில் கான்வே விளையாடவில்லை. பேமிலி ஃபர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட்!
இசைஞானி இளையராஜா ஒரு இசைக் கடவுள், அவர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டது சர்ச்சையான நிலையில், எந்த சாதியினராக இருந்தாலும் அர்ச்சகர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்ல முடியும் என்றார். மேலும், திமுகவை வீழ்த்த ஒருமித்த கூட்டணி வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்தே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மீன்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் என்பதாலும், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவதாலும் மீன்கள் விலை குறைந்துள்ளது. சிறிய வகை இறால் ரூ.150-ரூ.250, வஞ்சிரம் ரூ.600- ரூ.700 வரை விற்கப்படுகிறது. மற்ற மீன்கள் விலையும் சரிந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்கின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற, தமிழ்நாடு பாடநூல் கழகம் துணை போயுள்ளதாக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததார நிறுவனமான SRI APPU DIRECT-இல் பல கோடி ரூபாயை ஜாபர் சாதிக் முதலீடு செய்திருப்பதாக கூறியுள்ள அவர், இதுதொடர்பான அமலாக்கத்துறை ஆவணங்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அனைவருக்கும் சொந்த வீடு இருப்பதை உறுதி செய்யும் வகையில், புதிய வீடு கட்ட மத்திய அரசு ரூ.1.20 லட்சம் மானியம் அளிக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் MP சப்தகிரி சங்கர் தலைமையிலான கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து ராஜூக்கான நிலைக்குழு மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மானியத்தை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
கருடன், கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. விலங்கு வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
நியூமராலஜி படி, உங்கள் பெயர் தமிழில் அ, ஆ ஆங்கிலத்தில் A என்ற எழுத்தில் தொடங்கினால், ஆளுமைத்திறன் கொண்டவராகவும், அதிகார குணம் படைத்தவராகவும் இருப்பீர்கள். அதே நேரத்தில் செய்யும் வேலையில் நேர்மையை கடைபிடிப்பீர்கள். சிலரிடம் மட்டுமே நெருங்கி பழகும் நீங்கள், எடுக்கும் முடிவுகளை ஆழ்ந்து சிந்தித்து எடுப்பீர்கள். காதலை துணையிடம் வெளிப்படுத்துவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். உங்களுக்கு ஒத்துப்போகிறதா?
அண்ணாமலையை நடிகை கஸ்தூரி இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். தெலுங்கு மக்களை இழிவாக பேசியதாக அவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்த நிலையில், அண்ணாமலையை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். பாஜகவில் இணைவது குறித்து கஸ்தூரி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சும்மா இருந்த தன்னை திமுக சீண்டிவிட்டதாக கஸ்தூரி கூறி வந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.