India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில், டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யும் வரை மலை மீது ஏறி போராட்டம் நடத்தப் போவதாக அரிட்டாபட்டி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்கீத் ராஜ்புத், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளில் விளையாடியுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 29 போட்டிகளில், 24 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அன்கீத், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட ஊதியத்தை மத்திய அரசு விரைவில் உயர்த்தக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த திட்டத்தின்கீழ் பணிபுரியும் நபர்களுக்கு பல மாநிலங்களில் நாளொன்றுக்கு ரூ.200 ஊதியம் அளிக்கப்படுகிறது. இதை உயர்த்த வேண்டுமென்றும், வேலை நாளை 100இல் இருந்து 150ஆக அதிகரிக்க வேண்டுமென்றும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறைக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்திருந்தது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இத்திட்டம் அறிமுகமாகி கிட்டதட்ட ஒன்றரை வருடம் ஆகிவிட்ட நிலையில், இதுதொடர்பாக மாநில திட்டக்குழு சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில், காலை உணவுத் திட்டத்தால் 90% பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், பிள்ளைகளுக்கு கற்றல் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மாநில திட்டக்குழு கூறியுள்ளது.
பெண்கள் பலரும் இரவில் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், டாக்டர்கள் அதை தவிர்க்க சொல்கின்றனர். ஏனெனில் இதனால் பூஞ்சைத் தொற்று, பொடுகு ஏற்பட வாய்ப்புண்டு. குளிப்பதற்கு 1- 2 மணிநேரத்துக்கு முன் எண்ணெய் வைப்பதே சிறந்தது. முடியின் வேர்க்கால் வரை பரவுமாறு தேய்க்க வேண்டும். எண்ணெய் இளஞ்சூட்டில் இருந்தால், எளிதாக முடிக்குள் ஊடுருவும். முடியை அலச மைல்டான ஷாம்பு பயன்படுத்தலாம்.
AI வளர்ச்சி ஊழியர்களின் வேலையை பறிக்கும் எனக் கருதப்படுகிறது. இது குறித்து பேசிய IT அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன், AI-க்கு தகவல்களை பதிவேற்றம் செய்யவே பல ஆண்டுகள் தேவைப்படும். அப்படி இருக்கையில் வேலை வாய்ப்புகள் எப்படி குறையும்? அதிகரிக்கவே செய்யும். தமிழகத்தில் திறன்வாய்ந்த ஊழியர்கள் அதிகமெனவும், துபாய் போலவே இங்கும் AI மாடல்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கேவிடம், தமிழக மீனவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதை CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறும், திசநாயக்கேவை வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளிடையே இணக்கமான எதிர்காலத்தை வளர்த்தெடுக்க, இது நல்ல தொடக்கமாக அமையும் எனவும் TN CM நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் சோதனை முறையில் சில பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், வரவேற்பை பொறுத்து விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கிரீன் மேஜிக் பிளஸ் பால் விலை குறித்தும், அளவு குறைக்கப்பட்டு இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், அளவு குறைக்கப்படவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார்.
உங்கள் இரவு உணவை சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் நினைவில் கொள்ள வேண்டிய 5 ஆரோக்கியமான விஷயங்கள்: *உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும். *சாப்பிட்ட பின் கடுமையான உடற்பயிற்சியை தவிர்க்கவும்; மெதுவாக நடைப்பயிற்சி செய்யலாம் *புகைப்பிடிக்க கூடாது *சாப்பிட்ட பிறகு குளிப்பதை தவிர்க்கவும் *இரவு உணவுக்கு பிறகு பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரிய அதிபர் ஆசாத், ஆட்சி கவிழ்ப்புக்குப்பின் முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தப்பிப்போவது தனது எண்ணமில்லை எனவும், மாஸ்கோ கேட்டுக் கொண்டதால் இடம் பெயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது மட்டுமே தனது வழியாக இருந்ததாகவும், சிரியா மீண்டும் சுதந்திரமடையும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.