India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IND-AUS இடையேயான பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 4ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. 4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா(10) சொதப்ப, கே.எல்.ராகுல் நிலைத்து நின்று ஆடினார். மழை குறுக்கிடும் வரை முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 105/5 ரன்கள் எடுத்துள்ளது. ஆனால் இந்திய அணி follow-on தவிர்க்க 246 ரன்கள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் 2வது இன்னிங்ஸில் தொடரும் நிலை உருவாகும்.
டெங்கு காய்ச்சலால் நடப்பாண்டில் தமிழகத்தில் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனை தடுக்க தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாகக் கூறியுள்ள பொதுசுகாதாரத் துறை, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து தட்டுப்பாடு ஏற்படாமல் கவனித்து வருவதாக கூறியுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடியலின் அமைதி, புதிய காற்று, அமைதியான சூழல் ஆகியவை, வெற்றிகரமான காலை உடற்பயிற்சிக்கு உகந்த சூழலை தருகின்றன. அதிகாலை உடற்பயிற்சி நமக்கு கவனம், விழிப்புணர்வை அதிகரிக்கிறது. மேலும், உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தவும், மன அழுத்தம், பதட்டத்தை குறைக்கவும் இது ஒரு பயிற்சி. மகிழ்ச்சியான மனநிலைக்கு எண்டோர்பின் அளவை அதிகரிக்கவும் அதிகாலை உடற்பயிற்சி உதவும்.
அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் சிவசேனா MLA பாண்டேகர், கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த முறை சுயேச்சை MLAவாக இருந்த பாண்டேகர், அமைச்சர் பதவி தருவதாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாகவும், அது நடக்காததால் கிழக்கு விதர்பா சிவசேனா துணை தலைவர் பதவியிலிருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.
TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நாளையே கடைசி நாள். குரூப் 2, 2 ஏ பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, 2025 பிப்ரவரியில் முதன்மை தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக் கட்டணம் செலுத்துதல், தமிழ்த் தகுதித் தேர்வுக்கு விலக்குபெற சான்றிதழ் பதிவேற்றம், தேர்வு மையத்தை தேர்ந்தெடுப்பது போன்ற பணிகளை நாளைக்குள் முடிக்க தேர்வர்களுக்கு TNPSC அறிவுறுத்தியுள்ளது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள், மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. Ex ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைபடி, மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை டிச.12இல் ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாக்களில் புதிதாக, சட்டப்பிரிவு 82(ஏ) முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பிரிவு 83, சட்டப்பிரிவு 172, சட்டப்பிரிவு 327களில் திருத்தம் செய்யவும் இது வழிவகை செய்கிறது.
தமிழகத்தில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் அவசியம். அந்த வகையில் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு துண்டு நெல்லிக்காயுடன், ஒரு துண்டு பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிடவும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், ஆற்றல், சரும ஆரோக்கியம் மேம்படும். உடல் எடையும் கணிசமாக குறையும். இந்த ஹெல்த் டிப்ஸ் நீங்க ஃபாலோ பண்ணுவீங்களா? கமெண்ட் பண்ணுங்க.
இந்தியா-மே.இ.தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான 2ஆவது T20 போட்டி, இன்று 7PMக்கு தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள WI அணி, 3 T20 மற்றும் 3 ODI போட்டிகளில் விளையாடுகிறது. முதல் T20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் IND அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு கிராம ஊராட்சிகள் அனுமதி வழங்கும் கட்டணத்தை, தனித்தனியாக நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. அதன்படி, குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஏற்கெனவே உள்ள வகைப்பாடு அடிப்படையிலும், வர்த்தக கட்டிடங்களுக்கு மட்டும் எல்லை வாரியாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகங்கள், தீர்மானம் மூலம் தங்கள் ஊராட்சிகளில் அரசு அறிவித்துள்ள கட்டணத்தை நிர்ணயிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.