India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், நிபுணர் குழு அறிக்கையின் படி, நீட் தேர்வில் மாற்றங்கள் செய்யப்பட்டு, AI உதவியுடன் நவீன முறையில் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். NTA நடத்தும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியது கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்றக்கூட்டுக் குழு என்பது நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படும் தற்காலிக குழுவாகும். அதிகபட்சமாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட15 பேர் JPCஇல் இடம்பெறுவர். அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட மசோதாவை ஆய்வு செய்து, திருத்தப் பரிந்துரைகளை இக்குழு வழங்கும். இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ‘ONOE’ மசோதாவை JPC-க்கு அனுப்பத் தயார் என அமித்ஷா அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு இன்று நடந்த மக்களவையே முன்மாதிரி என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். மசோதாவிற்கு வாக்களிக்கும் போது, பாதி பேரின் இருக்கையில் மட்டுமே EVM வேலை செய்ததாகவும், மீதி பேர் வாக்குச்சீட்டுலேயே வாக்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக கூறுவதாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. 128 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் பழுதுபார்க்கும் பணி தாமதமானதால், பயணிகளை வேறு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் 3 ஆண்டு பதவிக்காலம் ஜூலையுடன் முடிந்தது. இதையடுத்து புதிதாக ஒருவர் அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. எனினும், அண்ணாமலை வெளிநாடு செல்ல, ஒருங்கிணைப்புக் குழு மட்டும் நியமிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் அண்ணாமலையை மீண்டும் தலைவராக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று நடந்த பயங்கர வெடிகுண்டுத் தாக்குதலில், அந்நாட்டின் கதிர்வீச்சு, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் பாதுகாப்பு படைத்தலைவர் இகோர் கிரிலோவ் பலியானார். ஸ்கூட்டரில் வைக்கப்பட்ட குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதில் அவர் உதவியாளர் ஒருவரும் உயிரிழந்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைனின் SBU உளவு அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய தேர்வு முகமை (NTA) இனி உயர்க்கல்வி நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “2025 முதல் எந்த அரசு பணிக்கான தேர்வுகளையும் NTA நடத்தாது. எதிர்காலத்தில் கணினி & தொழில்நுட்பம் சார்ந்து நுழைவுத் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. 2025இல் NTA மறுசீரமைக்கப்படும். குறைந்தது 10 புதிய பதவிகள் உருவாக்கப்படும்” என்றார்.
விஷால் இயக்கி நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’ தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், ‘மார்க் ஆண்டனி 2′-வில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. கடந்த 2023 செப்டம்பரில் வெளியான ‘மார்க் ஆண்டனி’, ₹100 கோடியை வசூலித்தது. இதையடுத்து 2ஆம் பாகம் எடுக்கப்படும் என படக்குழு அப்போதே அறிவித்திருந்தது.
சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஏற்கனவே பெண் போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் அண்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். இது தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.