India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை INDIA கூட்டணியின் மூத்த தலைவரான உத்தவ் தாக்கரே சந்தித்து பேசி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் அம்மாநில சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. அதில் பங்கேற்க வந்த உத்தவ் தாக்கரே, பட்னாவிஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஸ்டார் பேட்டரான பிரித்வி ஷா, விஜய் ஹசாரே போட்டியில் விளையாடவில்லை. மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவர், இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும் கடவுளே எனப் புலம்பியுள்ளார். தான் இதுவரை அடித்த ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் இவற்றை குறிப்பிட்டு, இது போதுமானதாக இல்லை. ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. மக்கள் என்னை நம்புவார்கள். நிச்சயம் திரும்ப வருவேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
➤மேஷம் – யோகம்
➤ரிஷபம் – பெருமை
➤மிதுனம் – மேன்மை
➤கடகம் – சோதனை
➤சிம்மம் – சிரமம்
➤கன்னி – நிம்மதி
➤துலாம் – அமைதி
➤விருச்சிகம் – கவனம்
➤தனுசு – கீர்த்தி ➤மகரம் -பக்தி
➤கும்பம் – வெற்றி ➤மீனம் – நன்மை
சுற்றுச்சூழல் பாதுகாவலரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கவுடா (86) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். 60 வருடங்களுக்கும் மேலாக காடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட துளசி, இதுவரை 30,000 மரக்கன்றுகளை நட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த துளசி, எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளியாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் 2025 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு www.tndtegteonline.in இணையதளத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க 2025 ஜனவரி மாதம் 17ஆம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு ஜனவரி 19ஆம் தேதி வரை அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம். SHARE IT.
மழை பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம் அளிக்க வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் அண்மையில் புயல் காரணமாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் பெய்த மழையால் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை அறிவித்து, கணக்கெடுப்பை மேற்கொள்கிறது.
இரவு 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற விவரங்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தேனி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
நைட் ஷிப்ட் (அ) சுழற்சி ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்கு இதய-ரத்தநாள நோய், புற்றுநோய், உடல்பருமன், நீரிழிவு (சர்க்கரை), மனச்சோர்வு, தீவிர ஜீரண கோளாறுகள், குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஷிப்ட் பணியால் உடல் சோர்வு அடைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தூக்கமின்மை, ஹார்மோன் சமநிலை பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
*நைட் ஷிப்ட் பணி முடிந்ததும் ஒரு மணிநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள் (இசை கேட்கலாம், குளிக்கலாம்) *ஷிப்ட் எதுவானாலும், சாப்பிடும் நேரத்தில் மாற்றம் வேண்டாம் *புரதம் நிறைந்த காய்கறிகளை சாப்பிடவும் *உறங்கும் இடம் அமைதியாகவும் இருட்டாகவும் இருக்கட்டும் *உறங்கும் முன் காபி, டீ தவிர்க்கவும், மதுவை கட்டாயம் தவிர்க்கவும் *வெறும் வயிற்றில் உறங்க வேண்டாம் *தூங்கி எழுந்தபின் உடற்பயிற்சி செய்யலாம்.
சென்னை பிரஸ் கிளப் தேர்தலில் தேர்வான புதிய நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பிரஸ் கிளப் தேர்தலில் தேர்வான புதிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நடுநிலையுடன் ஊடக அறத்தை பின்பற்றி செயல்படவும் வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.