News December 18, 2024

பொதுத் தேர்வில் தமிழ் கட்டாயம் அல்ல?

image

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் கட்டாயம் அல்ல என்று பரவிய செய்தியை தமிழக அரசு மறுத்துள்ளது. தனியார் ஊடகம் ஒன்று பிரசுரித்த செய்தியை பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்து கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் அரசு, சிறுபான்மை பள்ளிகளில் மட்டும் 2023 – 24 கல்வியாண்டில் தமிழ் படிக்க விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

News December 18, 2024

விவசாயிகளுக்கு புதிய கடன் உத்தரவாத திட்டம்

image

சிறு விவசாயிகளுக்கு வங்கிகள் தயக்கமின்றி கடன் வழங்க ₹1,000 கோடியில் கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, தானியங்களை இருப்பு வைத்ததற்கான கிடங்கின் மின்னணு ரசீதை காட்டி சிறு, குறு விவசாயிகள் கடன் பெறலாம். வங்கிகள் கிடங்கு ரசீதை பிணையாக ஏற்கும். விவசாயக் கடன் திட்டங்களில் இத்திட்டம் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News December 18, 2024

டாப் ட்ரெண்டிங்கில் அஜித் – த்ரிஷா

image

ஜீ படத்துல பார்த்த மாதிரி அப்படியே freshஆ இருக்காங்க நம்ம தல அஜித்தும் எவர்கிரீன் த்ரிஷாவும். அவங்க கூட்டணியில உருவாகியிருக்கற ’விடாமுயற்சி’ படத்தின் போட்டோக்கள் நேற்று வெளியாச்சு. அதுல குறிப்பா இந்த ஒரு ஃபோட்டோ பயங்கர வைரல். உடம்பு எடை குறைஞ்சு இருக்கற அஜித் மற்றும் புடவைல கலக்குற த்ரிஷாவை பார்த்தா நம்ம கண்ணே பட்டுடும் போல..

News December 18, 2024

விரைவில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்

image

TNல் ஆட்டோக்களுக்கு மீட்டருக்கு பதிலாக பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், புதிய கட்டண விபரத்தை அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், விரைவில் அதனை அரசு அறிவிக்கும் எனவும் கூறியுள்ளனர். TNல் ஓடும் ஆட்டோக்களுக்கு 2013ம் ஆண்டு 1.8 KM துாரத்திற்கு ₹25, அடுத்த ஒவ்வொரு KMக்கும் தலா ₹12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ₹3.50 என நிர்ணயிக்கப்பட்டது.

News December 18, 2024

காலையில் இதை செய்தால் ஆயுள் கூடும்!

image

எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் உபாதைகள் வெளியேற உதவியாக இருக்கும். அன்றைய நாள் சுறுசுறுப்பாக அமைய, உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். காலை மிகவும் அமைதியாக இருக்கும் என்பதால், தியானம் செய்ய உகந்த நேரமாகும். காலை உணவு மிகவும் முக்கியமானது, இதனைத் தவறவிடக்கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக செய்யும் சிறு சிறு விஷயங்களே வாழ்க்கை காலத்தை அதிகரிக்கும்.

News December 18, 2024

BGT 3வது டெஸ்ட்: தொடர்ந்து அச்சுறுத்தும் மழை

image

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் 5வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்தில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி விட்டது. அதே நேரத்தில் ஆஸி. அணி 2வது இன்னிங்ஸை தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்தி விட்டது. 185 ரன்கள் முன்னிலையில் இருக்கும் ஆஸி. அணி வெற்றியை குறிவைத்த நிலையில், மழை பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

News December 18, 2024

ரேஷன் கடைகளுக்கு 11 நாள்கள் விடுமுறை

image

2025ஆம் ஆண்டு ரேஷன் கடைகள் 11 நாள்கள் இயங்காது என்று அரசு அறிவித்துள்ளது. பொங்கல் (ஜன 14), ரிபப்ளிக் டே (ஜன 26), தைப்பூசம் (பிப் 11), ரம்ஜான் (மார்ச் 31), தமிழ் புத்தாண்டு (ஏப் 14), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக 15), விநாயகர் சதுர்த்தி (ஆக 27), காந்தி ஜெயந்தி (அக் 2), தீபாவளி (அக் 20), கிறிஸ்துமஸ் (டிச 25) ஆகிய தினங்களில் ரேஷன் கடைகள் செயல்படாது.

News December 18, 2024

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ராகுல், பிரியங்கா

image

உலகம் முழுவதும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் காங்கிரஸ் MPக்கள் ராகுல், பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்திருந்த குழந்தைகள் உள்பட அனைவருடனும் அவர்கள் கலந்துரையாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.

News December 18, 2024

நடிகர் பிரபாஸின் ஜப்பான் பயணம் ரத்து?

image

‘கல்கி 2898 ஏடி’ பட புரமோஷன் நிகழ்ச்சிக்காக, நடிகர் பிரபாஸ் ஜப்பான் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் புதிய படத்தில் நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த படம் ஜனவரி 3ஆம் தேதி ஜப்பானில் ரிலீசாகிறது.

News December 18, 2024

ஒரே ஆண்டில் 3ஆவது முறையாக..!

image

கர்நாடகாவிலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் தற்போது 118.53 அடி தண்ணீர் உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 3ஆவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!