News December 18, 2024

டெஸ்டில் சுழன்ற சென்னை பையன்

image

டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆப் ஸ்பின்னர்களில் ஒருவர் அஷ்வின். 106 டெஸ்ட் ஆடியுள்ள 24 விக்கெட் சராசரியுடன் 50.7 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். மொத்தம் 537 விக்கெட் வீழ்த்தி, கும்ப்ளேவுக்கு அடுத்து அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியராக மின்னும் அஷ்வின், சர்வதேச அளவில் 7-வது வீரராக உள்ளார். 37 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ள அஷ்வின், உலகளவில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஆப் ஸ்பின்னராக திகழ்கிறார்.

News December 18, 2024

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா தவாக?

image

திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சட்டப்பேரவை தொடங்கி பிரஸ் மீட் வரை ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை அவர் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், வரும் பட்ஜெட் தொடரில் பண்ருட்டி தொகுதிக்கு வெள்ளத் தடுப்பு உள்ளிட்ட 3 அறிவிப்புகள் இடம்பெறாவிட்டால் கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என்று திமுகவுக்கு கெடு விதித்துள்ளார்.

News December 18, 2024

அஸ்வினுக்கு கிரிக்கெட் கனவை விதைத்த தந்தை

image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டராக திகழ்ந்த அஸ்வின், 1986ஆம் ஆண்டு செப்., 17ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். கிரிக்கெட் பிளேயரான இவரது தந்தை ரவிச்சந்திரன், தான் சாதிக்காததை மகன் சாதிக்க வேண்டுமென எண்ணி கிரிக்கெட் பயிற்சிக்கு தேவையானதை செய்து கொடுத்தார். விளையாட்டு ஒருபக்கம் இருந்தாலும், படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்து தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டம் பெற்றார் அஸ்வின்.

News December 18, 2024

அஸ்வினை கட்டிப்பிடித்து வழியனுப்பிய கோலி

image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வினை விராட் கோலி கட்டிப்பிடித்து வழியனுப்பி வைத்தார். மழையால் இன்றைய போட்டி பாதிக்கப்பட்டிருந்தபோது ட்ரெஸிங் ரூமில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேமரா படம் பிடித்தது. அப்போது, சோகமான முகத்துடன் இருந்த அஸ்வினை கோலி கட்டியணைத்து தேற்றினார்.

News December 18, 2024

CSK-வில் கலக்கப்போகும் அஷ்வின்

image

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து பார்மேட்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள அஷ்வின், இனி கிளப் கிரிக்கெட்டில் முழுக் கவனத்தையும் செலுத்தப் போகிறார். 2008-ல் சிஎஸ்கே அணிக்கு தோனியால் கண்டெடுக்கப்பட்ட அவர், அதன்பின் இந்திய அணிக்குள் சென்று சாதித்துக் காட்டினார். இப்போது தாய்வீடான சிஎஸ்கேவுக்கு திரும்பும் அஷ்வின், இனி ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரிய விருந்து படைப்பார் என எதிர்பார்க்கலாம்.

News December 18, 2024

அமித்ஷா பேச்சால் முடங்கியது நாடாளுமன்றம்

image

அம்பேத்கர் பற்றிய அமித்ஷா பேச்சுக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி MPக்கள் ‘ஜெய்பீம்’ முழக்கம் எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

News December 18, 2024

போய் வாருங்கள் அஸ்வின்

image

நம்ம தமிழ் பையன் ரவி அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பவுலராக இருந்த அஸ்வின், பல சாதனைகளுக்கு சொந்தக் காராகவும் இருக்கிறார். ”உங்களை நாங்கள் மிஸ் செய்வோம்” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

News December 18, 2024

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு

image

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்(38) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். பேட்டிங்கிலும் சிறந்து விளங்கும் அஸ்வின் வரும் ஐபிஎல் தொடரில் CSK அணியில் விளையாட உள்ளார்.

News December 18, 2024

இந்தியா ஆஸ்திரேலியா போட்டி டிரா

image

BGT தொடரின் மூன்றாவது போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா மோசமாக விளையாடி 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்ய, 275 என்ற இலக்கோடு இந்தியா களம் இறங்கியது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது.

News December 18, 2024

அமித்ஷா பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

image

மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார் என ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அம்பேத்கர் பெயரை முழக்கமிடுவது ஃபேஷனாகிவிட்டதாக அமித்ஷா கூறியது சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்வினையாற்றி வருகின்றன. எவ்வளவு தைரியம் இருந்தால் அம்பேத்கரை இவ்வளவு இழிவாக பேசுவீர்கள் எனக் கேள்வி எழுப்பிய கே.சி.வேணுகோபால், அம்பேத்கர் கடவுளுக்கு ஒப்பானவர்தான் என்றார்.

error: Content is protected !!